My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Wednesday, March 25, 2015

Favorite Tweets :-



* நம் அப்பாவால் எதுவும் முடியும் என்று குழந்தை நம்பும் வரை, ஓர் ஆணின் உலகம் அழகானது.

* எவ்வவளவு விளக்கம் கொடுத்தாலும் தவறாக புரிந்து கொள்பவர்கள் தவறாக தான் புரிந்து கொள்வார்கள!!

* பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என சொல்பவர் பெரும்பாலும் பணம் இல்லாத மிடில் க்ளாஸ் மக்களே

* பிடித்தவர்களின் சில நிமிட நினைவுகளுக்கு
நம்முடைய பல நிமிடங்களை கடத்திச் செல்ல வலிமை உண்டு!!!

* பிள்ளைகள் வளர்வதை அணு அணுவாக ரசிக்க முடிவது, அம்மாக்களுக்கே வாய்த்த வரம்.

* இந்த ஈர இரவை சோகத்துடன் கடக்க ஒரே காரணம் நீ இல்லாத தனிமை மட்டுமே

* வாழ்க்கைல தானா தெரிஞ்சுகிட்டத விட.. ஏமாற்றப்பட்டு ,அவமானப்பட்டு
தெரிஞ்சுகிட்ட அனுபவத்துக்கு ஆயுள் அதிகம்.

* வாழ்க்கை என்பது மரணத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒர் அழகிய பாதை....

* உண்மையாய் இருப்பவர்கள் ஏமாளிகள்
பொய்யாய் நடிப்பவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்

முடிந்தவரை கவலைகளை வாசலிலேயே விட்டு வருகிறேன்,முடியாத சிலவற்றை அவள் காதல் கவனித்துக்கொள்கிறது.!

* மிகப்பிடித்த ஆண் நண்பர்களிடம் கூட, 'இதோ இது தான் உன் எல்லை' என்று நிர்நயித்துக்கொண்டே இருக்க வேண்டியிருப்பது தான் பெண்மையின் ஆகப்பெரிய சவால்

* சில வேளைகளில் நாம் விரும்பியதுக் கிடைக்காவிட்டாலும் ..... கிடைத்தது விரும்பியதை விடச் சிறப்பாக அமைந்து விடுகிறது .....!