My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Monday, August 31, 2015

உயிரியல் கிருமி போர் ஆயுதமா? ‪#‎எய்ட்ஸ்‬

Print Friendly and PDF

#‎எய்ட்ஸ்‬
´ஜேக்கப் சிகால்´ கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர். லண்டனில் இருந்து வெளிவரும் லண்டன் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு 26.10.1986-இல் பேட்டி எடுத்த போது ஒர் சங்கதியை சொன்னார்:
"எய்ட்ஸ் கிருமி மனிதனின் செய்கையால் உருவாக்கப்பட்டது. இதை மறுக்கவும், மறைக்கவும் அமெரிக்கா முயற்சி செய்கிறது" என்றும், எய்ட்ஸ் கிருமி குறித்த நீண்ட விளக்கத்தையும் அப்பேட்டியில் கூறி இருந்தார்.அதற்கு பின் ´ஜேக்கப் சிகால்´ இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.´ஜேக்கப் சிகால்´ பேட்டியை மக்களும் சாதாரணமாக நினைத்துவிட்டனர்.
டெட் ஸ்டெரக்கர்´ என்னும் பெயருடைய அமெரிக்க நுண்ணுயிர் கிருமி ஆராய்ச்சியாளர் எய்ட்ஸ் கிருமியின் மூலம் [Origin] குறித்து ஆய்வு செய்துக் கொண்டிருந்தார். ஆய்வின் முடிவுகள் குறித்து அவருக்குள் பல புதிர்களை உருவாக்கியது. அவைக் குறித்து சில இடங்களில் பேசியும் இருக்கிறார். அதற்கு பின் மிசோரியில் ´ஸ்பிரிங்க் ஃபில்ட்´ என்ற இடத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தார். சில வாரங்கள் மட்டுமே ´டெட் ஸ்டெரக்கர்´ கொலை குறித்து பரபரப்பாக பேசப்பட்டதே தவீர, என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. கொலைக்குறித்து ஏதோ உப்புசப்பற்ற விசாரணையை பேருக்கு நடத்தி ஓரங்கட்டிவிட்டது அரசு.
lllnosis senate உறுப்பினரான ´ஈவ்ப்´ [Huff] என்பவர், எயிட்ஸ் உருவாக்கப்பட்ட கிருமி என்று தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துக் கொண்டே இருந்தார். அவருக்கும் வந்தது நேரம். எங்கேயோ ஓர் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலில் உயிர் போவதற்கு முன்பு கடும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட தடயங்கள் இருந்தன.
அப்போதும் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் எயிட்ஸ் நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு மத்தியில் இக்கொலைகள் பயத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏதோ நம்மை வைத்து ஆட்டையை ஆரம்பித்திருக்கிறது அரசு என்பதை உணர்ந்து மௌனிகளாக இருந்தனர். பத்திரிகை பேட்டி என்றாலோ, எய்ட்ஸ் கிருமி குறித்த கேள்விகளை யாராவது எழுப்பினாலோ ´ஆளை விடுங்க சாமிகளா..´ என்று ஓட்டமெடுத்தனர்.
இப்படியே சில ஆண்டுகள் ஓடியநிலையில் தான் ஹீரோவாக வந்தார் டாக்டர் ´லியோநார்டு.´1996-இல் ´Aide Ebola Nature, Accident or intentional´ என்ற புத்தகத்தில் ஆதாரங்களுடன் பல விளக்கங்களையும் எழுதி இருக்கிறார் லியோநார்டு."எய்ட்ஸ் கிருமிகளின் உருவாக்கம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களாலும், ஆப்பிரிக்க மக்களாளுமே உருவானது என்று அமெரிக்கா சொல்வது நூற்றுக்கு நூறு பொய்!" என்று அடித்துப் பேசுகிறார் லியோநார்டு.
1970-ஆம் ஆண்டிலேயே எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமெரிக்க அரசு முயற்சித்துள்ளது. இருப்பினும் 1984-ஆம் ஆண்டுகளில் அவை உண்மையான செய்தி என்று அதிகாரப்பூர்வமாக தெரிய ஆரம்பித்தது. எய்ட்ஸ் கிருமியை உருவாக்கத்தின் முக்கிய மூளையாக இருந்தவர் ´ஹென்றி கிஸ்சிங்கர்´ என்பவர் [முன்னால் Secretary of State] அமெரிக்க அரசு இத்திட்டத்திற்காக 1-மில்லியன் டாலர்களை அமெரிக்க இராணுவத்திற்கு கொடுத்திருக்கிறது. இத்திட்டத்திற்கு M.K. என்றும் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ´ஹென்றி கிஸ்சிங்கர்´க்கும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கும் உதவியாக M.David Manakar, K.Paul Kotin என இருவர் இருந்தனர். சி.அய்.ஏ [C.I.A] துணையுடன் இவர்கள் செயல்பட்டார்கள் என்றும் லியோநார்டு அந்நூலில் மிகத் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறார்.
பெருகி வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கையை குறைப்பதும், உலகில் அமைதியைக் கெடுப்பதும், அதன் மூலம் வன்முறையை வளர்த்துவிடவும், எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மருந்துக்களுக்கு தாங்கள் காப்புரிமை வைத்துக் கொண்டு ஏராளமாக சம்பாதிக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் முக்கிய பணியாக இருந்திருக்கிறது. ஏகப்பட்ட பிராடுத்தனங்களுடன் உலக மக்களை ஆட்டிப்படைக்கவும், தங்களுடைய அதிகாரப்போதைகளில் எப்போதும் முதலிடம் தங்களுக்கே என்பதிலும் அமெரிக்கா எப்போதுமே மிகத் தெளிவாக செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் கவனமாகவே இயங்குகிறது.
அமெரிக்காவின் கடன் வழங்கும் திட்டத்தை வாங்க மறுத்தாலோ அல்லது அமெரிக்கா தங்கள் நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வருவதை தடுக்க முயற்சித்தாலோ கொலைக்களமாக்கி அதளப்பாதாளத்தில் தள்ளிவிடும் ரௌடித்தனத்தை செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு அணுகுண்டுக்களும், துப்பாகிகளும் மட்டும்தானா ஆயுதம்? இருக்கவே இருக்கிறது அறிவியல் வழியில் நச்சுக் கிருமிகள்.
ஒருமுறை அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் இயக்குனரான ´பசரல்லா´ சொல்கிறார்:
"அமெரிக்க அதிகார மையங்களை விரிவுபடுத்த ஆற்றல் கொண்ட கிருமியை [Supergerm] உருவாக்குவதன் தேவை அமெரிக்க அரசுக்கு உள்ளது" என்று பகிரங்கமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.
"அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் கிருமி எய்ட்ஸா? எய்ட்ஸ் கிருமி செயற்கையாக உருவாக்கப்பட்டதா?" என்ற கேள்வியை எழுப்பிய போது...
"ஏன் இருக்கக் கூடாதா?" என்கிறார் ´பசரல்லா.
அப்போதுதான் உலகம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. அதற்குள் ஆப்பிரிக்காவில் பல மக்களுக்கு எய்ட்ஸ் கிருமி செலுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.ஆப்பிரிக்காவில் கென்ய நாட்டைச் சேர்ந்த ´வங்காரி மத்தாய்´ கென்ய நாட்டுச் சுற்றுப்புறச் சூழலியலாளரும் 2004-இல் நோபல் பரிசு பெற்ற மதிப்புக்குரியவருமான வங்காரி மத்தாய் எய்ட்சை செயற்கையாக உருவாக்கும் ஹெச்.ஐ.வீ [HIV] வைரஸ் அமெரிக்க இராணுவ உயிரியல் போர்முறை வளாகத்தில் [Fort Detrick] உருவாக்கப்பட்ட கிருமி என்று கூறியபோது உலமே அதிர்ந்தது.
கென்யாவில் ஏராளமான ´எயிட்ஸ்´ நோயாளிகள் இருக்கிறார்கள். 2006-ஆம் வருட கணக்குப்படி உலகில் மொத்தம் ´38-மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகள்´ இருக்கிறார்கள். இதில் முதல் இடத்தில் ஆப்பிரிக்காவும் [28.1- மில்லியன் மக்கள் எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள்] மூன்றாம் இடத்தில் இந்தியாவும் [3.97-மில்லியன் மக்கள் எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள்] இருக்கிறது. இது எப்படி பரவியது? இத்தனை மில்லியன் மக்கள் உலகத்தில் கொடுமையான மரணத்தை எதிர்கொள்ள இருக்கிறார்களே! இது எப்படி நடத்தப்பட்டது?
1969- இல் கலிபோர்னியாவின் ´டேவிட்´ என்னும் இடத்தில் சோதனைச் சாவடியில் குரங்குகளுக்கு ´எய்ட்ஸ் கிருமிகள்´ ஊசி மூலம் செலுத்தப்பட்டு ஆய்வு செய்திருக்கிறது அமெரிக்க நுண்ணுயிர் ஆய்வு நிலையம். எய்ட்ஸ் கிருமிகள் செலுத்தப்பட்ட குரங்கள் ஒரே வருடத்தில் இறந்திருக்கின்றன. 1970-இல் பூனைகளுக்கு ´எயிட்ஸ் கிருமி´ செலுத்தப்பட்டு அத்தனையும் இறந்தன. 1974-இல் சிம்பன்சி குரங்குகளுக்கு ´எயிட்ஸ் கிருமிகள்´ செலுத்தப்பட்டு அவைகளும் இறந்தன.
குரங்கு, பூனை, சிம்பனி குரங்கு என மிருகங்களுக்கு ´எயிட்ஸ் கிருமிகள்´ செலுத்தப்பட்டு சோதனை செய்த ´அமெரிக்க நுண்ணுயிர் ஆய்வு நிலையம்´ 1979-இல் ´பென்டகன்´ ஆய்வு மையத்தின் நுண்ணுயிர் ஆய்வாளரான டாக்டர் ´மேக் ஆர்தூர்´ ஆலோசனைப்படி சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட HIV [Human Immuno Deficiency Virus] அமெரிக்க ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தடுப்பூசி மூலம் பரப்பப்பட்டது. ´எய்ட்ஸ்´ உருவாக ஹெச்.ஐ.வீ [HIV]யும், அவை உருவான இடமான அமெரிக்காவின் ´மாண்டான்´ [Manhatten] பகுதி தான் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்தது.
1982-க்கு பிறகே ´எய்ட்ஸ்´ ஆப்பிரிக்காவில் வந்தது. அது எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை 1987-இல் மே மாதம் 11-ஆம் தேதியில் வெளியான லண்டன் டைம்ஸ் விவரிக்கிறது:
"உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் பல மில்லியன் மக்களுக்கு எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி ஆப்பிரிக்க மக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக ஆப்பிரிக்க மக்களிடம் எய்ட்ஸ் பரவியது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட உயிர்கள் அழித்தொழிப்பு கொடுமை."
இச்செய்தியைக் குறித்து அமெரிக்க அரசு என்ன சொல்கிறது?
"இங்கிலாந்தில் 1950-களில் ´மான்செஸ்டர்´ பகுதியில் ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தது. 1969-இல் கருப்பின சிறுவன் ஒருவனுக்கு எயிட்ஸ் இருந்தது. அப்படி இருக்க எங்கள் மீது இங்கிலாந்து அபாண்டமாக குற்றம் சுமத்துகிறது."
´எயிட்ஸ்´ பரவியதற்கு காரணம் ஒரினச்சேர்க்கையாளர்களும், ஆப்பிரிக்க மக்களின் உடல் உறவு சேர்க்கையும் தான் என்கிறது. அதற்கும் ஒருபடி மேலே சென்று ஆப்பிரிக்க மக்களில் சில பழங்குடி மக்கள் மிருகங்களிடம் செக்ஸ் வைத்திருந்தனர். அதன் மூலமாக ஏற்பட்ட தொற்றுக் கிருமிகளே என்று ஒருபோடு போட்டது. என்னடா வம்பாக இருக்கிறதே! எங்கள் நாட்டில் இப்படியொரு சங்கதி நடக்கவே இல்லையே என்கிறது இங்கிலாந்து.
´எய்ட்ஸ்´ நோயால் இறந்த பலரை பரிசோதனை செய்த மருத்துவர் ´ஆலன் கேன்ட்வெல்´ என்பவர் ´எய்ட்ஸ்´ என்பது இயற்கையாக உருவான வியாதி இல்லை. ஓரினச் சேர்க்கையாளர்களையோ, கருப்பின மக்களையோ மட்டும் அழிக்க வந்த வியாதி இல்லை. மனிதர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆயுதங்களில் கொடுமையான ஆயுதம் தான் ´எய்ட்ஸ் கிருமி´ என்கிறார்.
மக்களை அழிக்கும் எண்ணத்துடனே அமெரிக்க அரசு உருவாக்கியது தான் ´எய்ட்ஸ்´ என்று அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர்களும், நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்களுமே தங்கள் நாட்டு அரசாங்கம் செய்த மிகப் பெரிய கொடுஞ்செயலை சர்வ அலட்சியமாய் ஒதுக்கி தள்ளி விட்டு, தன் ஏகாதிபத்ய பொய் மனித நேயத்துடன் திரிவதை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனையெத்தனை மனிதர்களை ´எயிட்ஸ் கிருமிகள்´ காவு கொள்ள இருக்கிறதோ..!!!

Friday, August 28, 2015

அங்கப் பிரதட்சிணம் செய்யும் யுரேனஸ் கிரகம்...!!!!


Print Friendly and PDF

கோயிலுக்குச் செல்பவர்களில் பெரும்பாலோர் வலம் வருவார்கள்.
நேர்த்திக் கடன் செய்த சிலர் அங்கப் பிரதட்சிணம் செய்வர். அதாவது தரையில் படுத்து உருண்டபடி கடவுளை வலம் வருவர். சூரிய மண்டலத்தில் உள்ள (புளூட்டோ உட்பட) ஒன்பது கிரகங்களில் யுரேனஸ் என்ற கிரகம் தவிர மற்ற அனைத்தும் சூரியனை வலம் வருகின்றன. ஆனால், யுரேனஸ் அங்கப் பிரதட்சிணம் செய்கிறது. உழக்கை தரையில் கிடத்தினால் அது உருண்டு செல்வது
போல யூரேனஸ் சூரியனைச் சுற்றுகிறது.

எல்லா கிரகங்களுக்கும் வட துருவம் மேல் நோக்கி இருக்கும். ஆனால் யுரேனஸ் படுத்தபடி சுற்றுவதால் சுமார் 40 ஆண்டுக் காலம் அதன் வட துருவம் சூரியனைப் பார்த்தபடி இருக்கும். அப்போது தென் துருவத்தில் இரவாக இருக்கும். பிறகு ஒரு கட்டத்தில் தென் துருவம் சூரியனைப் பார்த்தபடி இருக்கும். அப்போது வட துருவப் பகுதியில் இரவாக இருக்கும்.

அமாவாசை இரவில் நீங்கள் விடிய விடிய வானைப் பார்த்துக் கொண்டிருந்தால் அநேகமாக புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி என ஐந்து கிரகங்களையும்
பார்த்துவிடலாம். இவை அனைத்தையுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். மனிதன் சிந்திக்க ஆரம்பித்ததிலிருந்து இந்த ஐந்து கிரகங்களை மட்டுமே பார்த்து வந்தான்.
சூரிய மண்டலத்தில் இதற்கு அப்பாலும் கிரகம் இருக்க முடியும் என யாரும்
சிந்தித்துப் பார்க்கவில்லை. இப்படியான பின்னணியில்தான் சனி கிரகத்துக்கும் அப்பால் உள்ள ஒரு கிரகத்தைச் சுமார் 230 ஆண்டுகளுக்கு முன்னர் வில்லியம் ஹெர்ஷல் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார்.

ஹெர்ஷல் (1738-1822) ஓர் அதிசய மனிதர். உலகில் முதன் முறையாகப் புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்த அவர், ராணுவத்தில் பாண்ட் வாத்தியம்
வாசிப்பவராக இருந்து விட்டு 38வது வயதில் வானவியல் பக்கம் திரும்பியவர்.

ஜெர்மனியின் ஒரு பகுதி அப்போது இங்கிலாந்து மன்னரின் ஆட்சியின் கீழ்
இருந்தது. அப்போதுதான் அவர் ராணுவ பாண்ட் கோஷ்டியில் சேர்ந்தார். அந்த
வேலை பிடிக்காமல் போகவே சொல்லாமல் கொள்ளாமல் ராணுவத்திலிருந்து தப்பி ஓடினார். ராணுவத்திலிருந்து திருட்டுத் தனமாகத் தப்பி ஓடியவரை சட்டப்படி கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.

ஹெர்ஷல் பின்னர் இங்கிலாந்தில் குடியேறி பிரபல வானவியல் நிபுணராகிய பிறகு, அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. ஒருசமயம் அவர் நூலகத்தில் வானவியல் தொடர்பான ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தார். அவருக்கு உடனே வானவியல் மீது ஆர்வம் ஏற்பட்டது.

வானவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதென்றால் டெலஸ்கோப் வேண்டுமே. கடையில் சிறிய டெலஸ் கோப் ஒன்றை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தலானார். வாடகை கொடுத்து கட்டுப்படியாகவில்லை. உடனே அங்குமிங்குமாக லென்ஸ் உட்பட தேவையான பொருட்களை வாங்கி டெலஸ்கோப்பைத் தாமே உருவாக்கிக் கொண்டார். பிறகு லென்ஸுகளையும் தானே தயாரிக்கலானார்.

அடுத்து தான் உருவாக்கிய டெலஸ்கோப்புகளை விற்பதிலும் ஈடுபட்டார். வாழ்க்கை நடத்த இது போதிய வருமானத்தை அளித்தது. இசை வகுப்புகளை நடத்திக் கொண்டே கிடைத்த நேரங்களில் டெலஸ்கோப் தயாரிப்பு. பகல் எல்லாம் இசை வகுப்பு, டெலஸ்கோப் தயாரிப்பு. இரவானால் டெலஸ்கோப் மூலம் வான் ஆய்வு. அவர் பல சிம்பனிகளை எழுதியவர். ஓர் இசைக் குழுவின் டைரக்டராகவும் இருந்தவர்.

ஹெர்ஷல் தமது வானவியல் ஆய்வுகளில் முதலில் நட்சத்திரங்களை ஆராய ஆரம்பித்தார். வானில் நட்சத்திரங்கள் இரட்டை இரட்டையாக ஜோடி சேர்ந்து காணப்படும். இப்படியான நட்சத்திரங்களைப் பட்டியலிட ஆரம்பித்தார். நட்சத்திரக்
கூட்டங்களையும் பட்டியலிட்டார்.

நட்சத்திரங்கள் வானில் நிலையாக ஒரே இடத்தில் இருப்பவை. இடம் விட்டு
நகராதவை. ஆகவே வானில் ஓர் ஒளிப்புள்ளி இடம் பெயருமானால் அது நட்சத்திரம் அல்ல என்று உறுதியாகக் கூற முடியும். இப்படி இடம் நகரும் ஒளிப்புள்ளி ஒன்றை ஹெர்ஷல் 1781-ம் ஆண்டில் கண்டுபிடித்தார். அநேகமாக அது வால் நட்சத்திரமாக இருக்கும் என்று கருதினார்.

தாம் ஒரு வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஹெர்ஷல் அறிவித்தார். ஆனால் அந்த ஒளிப்புள்ளிக்கு வால் நட்சத்திரத்துக்கே உரிய தலையும் இல்லை, வாலும் இல்லை. மற்ற வான் ஆராய்ச்சியாளர்கள் அந்த ஒளிப் புள்ளியை விரிவாக ஆராயலாயினர். அது வால் நட்சத்திரமாக இருக்க முடியாது. ஒரு கிரகமாக இருக்க வேண்டும் என்று பல விஞ்ஞானிகளும் கூறினர். அதன் சுற்றுப் பாதையை ஆராய்ந்தபோது அது கிரகமே என்று உறுதியாகியது.

ஹெர்ஷல் தாம் கண்டுபிடித்த அந்தக் கிரகத்துக்கு இங்கிலாந்து மன்னரின் பெயரை வைத்தார். பின்னர் அதற்கு யுரேனஸ் என்று பெயர் மாற்றப்பட்டது..
யுரேனஸ் கிரகம் வியாழன் கிரகத்தைப் போலவே பனிக்கட்டி உருண்டை. அது
வியாழன் கிரகத்தை விடச் சற்றே சிறியது. யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர 84 ஆண்டுகள் ஆகின்றன.

இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ் இடம் பெறவில்லை என்றாலும் மேற்கத்திய நாடுகளில் ஜோதிடம் கூற யுரேனஸ் கிரகத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.

யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து சுமார் 300 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ளதைப் போல சுமார் 20 மடங்கு. ஆகவே தான் வெறும் கண்ணால் யுரேனஸ் கிரகத்தைப் பார்க்க முடிவதில்லை.
யுரேனஸ் கிரகத்திலிருந்து பார்த்தால் சூரியன் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போலத் தென்படும்.

மிக நீண்ட காலம் யுரேனஸ் கிரகத்தைப் பற்றி விரிவாகத் தெரியாமல்
இருந்தது. எனினும் 1977-ம் ஆண்டில் அமெரிக்க நாஸா விண்வெளி அமைப்பினால் செலுத்தப்பட்ட வாயேஜர் -2 எனப்படும் ஆளில்லா விண்கலம் 1986-ம் ஆண்டில் யுரேனஸ் கிரகத்தை மிகவும் நெருங்கிக் கடந்து சென்றது.

அப்போது அந்த விண்கலம் யுரேனஸ் கிரகம் பற்றிப் பல புதிய தகவல்களைக் கண்டுபிடித்தது. சனி கிரகத்துக்கு உள்ளது போலவே யுரேனஸ் கிரகத்துக்கும் வளையங்கள் உள்ளன. எனினும் இந்த வளையங்கள் மிக மெல்லியவையாகத் தெரிகின்றன.

பூமிக்கு ஒரு சந்திரன். ஆனால் யுரேனஸ் கிரகத்துக்கு 27 சந்திரன்கள். யுரேனஸ் மல்லாக்கப் படுத்தபடி சூரியனைச் சுற்றுவதால் அதன் சந்திரன்கள் பெரிய ஜெயண்ட் வீல் போல யுரேனஸை மேலும் கீழுமாகச் சுற்றுகின்றன.

யுரேனஸின் காற்று மண்டலம் முக்கியமாக ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனது. மீதேன் போன்ற வேறு சில வகை வாயுக்களும் உள்ளன. டெலஸ்கோப் மூலம் பார்த்தால் யுரேனஸ் கிரகம் நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதற்கு அதன் காற்று மண்டலத்தில் உள்ள மீதேன் வாயுவே காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் யுரேனஸ் படுத்தநிலையில் சூரியனைச் சுற்றுவதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. யுரேனஸ் ஆரம்பத்தில் மற்ற கிரகங்களைப் போல செங்குத்து நிலையில் இருந்திருக்க வேண்டும் என்றும் ஏதோ ஒரு கால கட்டத்தில் யுரேனஸ் மீது பூமியொத்த கிரகம் மோதியபோது அது தலை சாய்ந்து போயிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

யுரேனஸ் கிரகத்தை விரிவாக ஆராய 2022-ம் ஆண்டு வாக்கில் ஒரு விண்கலத்தை அனுப்ப வேண்டும் என்று சுமார் 120 விஞ்ஞானிகள் 2010-ம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு யோசனை தெரிவித்தனர். அமெரிக்காவிலும் இப்படியான ஒரு யோசனை கூறப்பட்டுள்ளது.


யுரேனஸுக்கு விண்கலத்தை அனுப்ப 2018-ம் ஆண்டு உகந்ததாக இருக்கும் என்றும் ஒரு யோசனை கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு விண்கலம் அனுப்பப்பட்டால் அது யுரேனஸ் கிரகத்துக்கு 2030-ம் ஆண்டு வாக்கில் போய்ச் சேரும்.

Tuesday, August 25, 2015

பிளாக் நைட் விண்கலம்


Print Friendly and PDF


எஸ்டிஎஸ்-88 செயற்கைக்கோள் தனது பணியின் போது எடுத்தகருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலத்தின்புகைப்படம்.கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம்(Black Knight satellite) என்பது 13000 ஆண்டுகளாக புவியை சுற்றி வந்ததாகஅடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களைஆராயும் ஆய்வாளர்களால் நம்பப்பட்ட விண்கலம் ஆகும். 

இதுவேற்றுலகத்தைசார்ந்தது எனவும் நம்பப்பட்டது.[1][2]கதைகள் மற்றும் தொன்மங்கள்இந்த நம்பிக்கை 1954 இல் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஒரு ஆய்வாளர் ஒருவர் செய்தித்தாள்களுக்கு அளித்த செய்தியில் இரண்டு விண்கலங்கள் புவியைச் சுற்றி வருகின்றன என செய்தி வெளியிட்டதில் தொடங்கியது. 

அந்தச் சமயத்தில் புவியில் யாரிடனும் விண்கலத்தை செலுத்தும் தொழில்நுட்பம் இல்லை.[3]மீண்டும் 1960 இல் அமெரிக்கக் கடற்படை இதே கருப்பு பொருள் 79° அச்சு சாய்வில் 104.5 நிமிட சுற்று வேகத்தில் புவியைச் சுற்றிவருவது கண்டறியப்பட்டது. 

இதன் சுற்றுப்பாதை சற்று விசித்திரமானதாக அமைந்துள்ளது. புவிக்கும் இதற்கும் இடையேயுள்ள அதிக தூரம் 1,728 கி.மீ மற்றும் குறைந்த தூரம் 216 கி.மீ.[3][4]இந்த பொருள் 1998 இல் எஸ்டிஎஸ்-88 செயற்கைக்கோள் தனது பணியின் போது புகைப்படம் எடுத்தது. 

அப்போது அனைவரும் இது வேற்றுக்கிரக வாசிகளின் உருவாக்கம் என நம்பினார்கள். எனினும் மனிதனின் விண்வெளி நடை ஆரம்பித்த பிறகு இது மறைந்துவிட்டது.1889 நிக்கோல் டெஸ்லாதான் பிளாக் நைட் விண்கலத்திலிருந்து வரும் ரேடியோ அலைகளை முதலில் கண்டறிந்தவர்.

டெஸ்லாவின் டெத் ரே(Death ray)இல்லுமினாட்டிகள் கட்டுப்பாட்டில் உள்ள கருவி.அப்படி இருக்கையில் ஏன் பிளாக் நைட் விண்கலம் இல்லுமினாட்டியை சேர்ந்ததாக இருக்கலாமே என்பது அடியேனின் கேள்வி மக்களே!