My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Monday, April 27, 2015

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்

பெண்களுக்கு.

ஞாயிறு எண்ணெய் தேய்த்து குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.

திங்கள் எண்ணெய் தேய்த்து குளித்தால் அதிகப் பொருள் சேரும். *

செவ்வாய் எண்ணெய் தேய்த்து குளித்தால் துன்பம் வரும்.

புதன் எண்ணெய் தேய்த்து குளித்தால் மிக புத்தி வந்திடும்.

வியாழன் எண்ணெய் தேய்த்து குளித்தால் உயரறிவு போய்விடும். *

வெள்ளி எண்ணெய் தேய்த்து குளித்தால் செல்வம் மிகும்.

சனி எண்ணெய் தேய்த்து குளித்தால் ஆயுள் அதிகமாகும்.
மேற்கண்டவையாவும் பெண்களுக்கு.

ஆண்களுக்கு
ஆண்கள் சனி, புதன் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது

ஆண்களுக்கு, திங்கட்க்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்

செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும்.

வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.

வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும்.

நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள். மற்ற செல்வங்களை விட அறிவினையும்,உடல் நலத்தினைத்தான் உயர்வாக நினைத்தார்கள்- மதித்தார்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்க கூடாது. வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்கவேண்டும்....

Wednesday, April 8, 2015

நேரம் நல்ல நேரம்


அவசரத்துக்கும் அவசியத்துக்கும் என்ன வித்தியாசம்?எந்த ஒரு காரியம் ஒரு கால கட்டத்துக்குள்செய்து  முடிக்க வேண்டுமோ அது அவசரக் காரியம். பையனுக்கு கல்லூரிக் கட்டணம் மாதக் கடைசியில் செலுத்த வேண்டும் என்பது அவசரக் காரியம்.முதல் தேதியன்று அதன் அவசர நிலை குறைவு. நாளாக ஆக அது அதிக அவசரம் ஆகிறது.காலம் கடத்திக் கொண்டே போனால் அதுவே சிக்கல்  ஆகி விடுகிறது.ஆனால்,ஒரு அவசியமான காரியம் என்றும் அவசியமாகத்தான் இருக்கும்.நாள் ஆக ஆக அது அதிக அவசியம் ஆகாது.ஒவ்வொரு காரியத்தையும் நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

அபாயப் பகுதி:
அவசியமும் அவசரமும் கூடிய காரியங்கள் .அவற்றைப்  புறக்கணித்து காலம் கடத்தினால் அபாயம்தான்.வேலைகள் சரியாக செய்யப் பட மாட்டாது.மன அமைதி பாதிக்கப்படும்.
உதாரணம்:மகளுக்குத் திருமணம் என்பது ஒரு அவசியமானதும் அவசரமானதுமான செயல்.உரிய வயதில் நடத்தாமல் தள்ளிப் போட்டு வந்தால் ஒரு கால கட்டத்தில் எப்படியோ திருமணம் நடந்தால் போதும் என்ற நிலை ஏற்படும்.

திட்டமிடும் பகுதி:
அவசியமான செயல் ஆனால் அவசரம் இல்லை.நிதானமாக யோசித்து திட்டமிட்டு நேர்த்தியாகச்செய்ய போதிய அவகாசம் உண்டு.(உ-ம் )மகளுக்கு வயது பத்து.அவள் திருமணம் அவசியம்,ஆனால் அவசரம் இல்லை.பணம் சேமிக்கலாம்.அவளைப் படிக்க வைக்கலாம் .ஆரோக்கியமாக வளர்க்கலாம்.நல்ல பழக்க வழக்கங்களைப் போதிக்கலாம்.

வீணாகும் பகுதி:
இந்த செயல்களுக்கு அவசியமும் கிடையாது,அவசரமும் கிடையாது.நம்மில் பலர் பெரும் பகுதி நேரத்தை இதில்தான்  கழிக்கின்றனர். உபயோகமற்ற அரட்டை ,சம்பந்தமில்
லாப் பிரச்சினைகளில் தலையிடுதல் போன்ற செயல்கள் இதில் அடங்கும்.நமது பொன்போன்ற  நேரம் வீணாவது தான் இதில் உள்ள அபாயம்.

வேகமான பகுதி:
அவசரமாகச் செய்ய வேண்டியவை,ஆனால் அவசியம் கிடையாது.(உ.ம் )அலுவலகம் செல்லும்போது வழியில் விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவரிடம் கொண்டு போய் சேர்ப்பது.மனிதாபிமான அடிப்படையில் செய்வது நல்லதுதான் என்றாலும் இதே வேலையாகத் திரிந்தால் நம் லட்சியங்களை அடைவது தாமதமாகும்.
இன்னின்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதுபோல இன்னின்ன வேலைகளை செய்யக்கூடாது என்ற பட்டியலையும் தயார் செய்ய வேண்டும்.நம் வளர்ச்சிக்கு இது மிகத் தேவையானது.

Monday, April 6, 2015

காசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி?




இந்துவாக பிறந்த ஒவ்வொருவரது ஆசையும் வாழ்நாளில் ஒருதடவையாவது காசி யாத்திரை செல்வது தான். காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது கிடையாது. காசியுடன் ராமேஸ்வரமும் செல்வது தான். அப்படியானால் காசி-ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி? என்பதை காண்போம்:

காசி யாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும். முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை சேது மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை பிந்து மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை வேணு மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், கரையில் வைக்க வேண்டும். பின்னர் மூன்று லிங்கத்திற்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வில்வ இலை போட்டு ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்தியம் வைத்து, பின் சூட தீபாராதனை காட்டி கும்பிட வேண்டும். பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக நாம் வைத்து கொள்ள வேண்டும்.

பிந்து மாதவ மற்றும் வேணு மாதவ லிங்கம் இரண்டையும் கடலில் போட்டு விட வேண்டும். அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் (1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம், 2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன், 3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை 4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி, 5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு, 6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல் 7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல். 8. நள தீர்த்தம், 9. நீல தீர்த்தம்,10.கவய தீர்த்தம்,11.கவாட்ச தீர்த்தம்,12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், 14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயா தீர்த்தம், 17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல் 18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி 20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல் 21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல் 22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) நீராடி விட்டு கோடி தீர்த்த்தை மட்டும் ஒரு கேனில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் ஈர உடையை மாற்றி கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டும். உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல்லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீரத்த்தையும் எடுத்து செல்ல வேண்டும். காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இட வேண்டும். பின் அங்கிருந்து ஒரு கேனில் தீர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். பின்னர் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவு பொருளை விட்டு விட வேண்டும். பின்னர் கயா சென்று அங்கு நமது இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.
அதன் பின் ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும. இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்."

குருகுல ஜோதிடம்