My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Wednesday, December 30, 2015

யார் இந்த 9 மர்ம நபர்கள்?:


Print Friendly and PDF


மௌரிய பேரரசு இந்தியாவில் ஆட்சி செய்த காலத்தில், புகழ்பெற்ற சந்திரகுப்த மௌரியரின் பேரனான அசோகப் பேரரசர் கி.மு. 273ம் ஆண்டு முதல் அரியணையில் இருந்து வந்தார்.
தனது முன்னோர்களை போலவே நல்லாட்சியும், பல சாதனைகளையும், போரில் பல வெற்றிகளையும் பெற்றுவந்த அசோகர் புகழ்பெற்ற கலிங்க போரினை எதிர்கொண்டார்.
மிகப்பெரும் சாம்ராஜ்யமாக விளங்கிய கலிங்கத்தை எதிர்த்து போரிட்ட அசோகர் அந்த போரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றார்.
ஆனால் இந்த போரின் முடிவு அசோகரின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த போரில் கலிங்கத்தை சேர்ந்தவர்கள் சுமார் 1 லட்சம் பேர், அசோகரின் படையினை எதிர்த்து போரிட்டு தங்கள் இன்னுயிரை இழந்தனர்.
இந்த படுகொலைகளை பார்த்து மனம் வெதும்பிய அசோகர் பின்னர், இனி போரே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்ததும், புத்த மதத்திற்கு மாறியதும், பின்னர் புத்த மதத்தை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரப்புவதில் ஈடுபட்டதும் நாம் நன்கறிந்த தகவல்களே!
ஆனால் அவரை பற்றி தெரியாத சுவாரஸ்யமான மர்ம தகவல் ஒன்று உள்ளது. அதனை பற்றி இப்போது பார்ப்போம்..
போரினால் வரும் இன்னல்களை உணர்ந்து அஹிம்சைக்கு மனம் மாறிய அசோகர், போரினால் ஏற்படும் அறிவு சார்ந்த அழிவுகளையும், அறிவு மற்றும் தொழிநுட்பம் சார்ந்த விடயங்கள் தீயவர்களின் கைகளில் சென்றடைந்தால் உலகம் எத்தகைய ஆபத்தில் சென்று முடியும் எனவும் யோசித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு ஒரு அபூர்வ யோசனை தோன்றியுள்ளது. உலகில் உள்ள அறிவு சார்ந்த விடயங்கள் அனைத்தையும் துறைவாரியாக புத்தகமாக அவர் மாற்றினார்.
இவ்வாறு மொத்தம் 9 துறைகளும், அதற்கான 9 புத்தகங்களையும் தயாரித்த அவர், அந்த 9 புத்தகங்களையும், தான் ரகசியமாக தெரிவு செய்த 9 ஆண் நபர்களை கொண்ட ரகசிய குழுவிடம் ஒப்படைத்தார்.
மேலும், அந்த 9 நபர்கள் யாரென்று தன்னை தவிர யாருக்கும் தெரியாமல் அசோகர் ரகசியமாக வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.
அசோகர் தெரிவு செய்த 9 புத்தகங்களின் பெயர்கள், உளவியல் போர் (psychological warfare), உடலியல் (physiology), நுண்ணுயிரியல் (microbiology), தகவல் தொடர்பு மற்றும் வேற்றுக் கிரகவாசிகளுடனான தொடர்பு (communication&ET communication), புவியீர்ப்பு மற்றும் எதிர்ப்பு ஈர்ப்புவிசை (gravitation, anti gravity), அண்டவியல் மற்றும் நேரப்பயணம் (Cosmology including hyperspace and time-travel), ரசவாதம் (alchemy), ஒளி (light) மற்றும் சமூகவியல் (sociology) ஆகும்.
ஆனால், பல நூற்றாண்டுகளை கடந்தும் இந்த 9 நபர்கள் என்ன ஆனார்கள், அந்த புத்தகங்கள் என்ன ஆனது என்ற கேள்விகள் விடை தெரியாமல் மர்மம் அகலாமலேயே உள்ளது.
மேலும், இவையெல்லாம் உண்மை தானா அல்லது வெறும் கட்டுக்கதைகள் தானா என்ற சந்தேகத்திற்கும் பல்லாண்டுகளாக தெளிவான விடை எதுவும் கிடைக்கவில்லை.
1923ம் ஆண்டில் Talbot Mundy என்பவரால் எழுதப்பட்ட The Nine Unknown என்ற நாவலில், இந்தியாவை ஆட்சி செய்த அசோக பேரரசரின் 9 ரகசிய நபர்கள் பற்றியும் அந்த 9 புத்தகங்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த மர்மங்கள் பற்றிய குழப்பங்கள் தீருவதற்கு அசோக பேரரசரே, காலப் பயணம் செய்து வந்து தெளிவை ஏற்படுத்தினால் ஒழிய இந்த 9 நபர்கள் யாரென்று அறிவதற்கு நமக்கு வேறு வழி இல்லை.

Saturday, November 21, 2015

ஒரு நதியின் படுகொலை

Print Friendly and PDF

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*
சமீபத்தில் சேலத்துக்கு சென்றபோது சாக்கடை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகளில் இருந்து மலத்தை நேரடியாக சாக்கடையில் விட்டிருந்தார்கள். தூரத்தில் நின்றபோதே துர்நாற்றம் தூக்கியது. சாக்கடையின் கரை ஓரத்தில் வீற்றி ருக்கிறது சேலம் பெரிய மாரியம்மன் கோயில். நினைவுகள் பின்னோக்கிச் சுழல்கின்றன.

புவியியல் அமைப்பின்படி மலைகள் மடியில் வைத்து தாலாட்டும் பள்ளத்தாக்கு... சேலம் மாவட்டம். இயற்கையின் செல்லப்பிள்ளை அது. சேலத்தின் வரலாற்றுப் பெயர் சைலம். சைலம் என்றால் மலைகள் சூழ்ந்தப் பகுதி என்று அர்த்தம். 

வடமேற்கில் இருந்து வடகிழக்கு வரை சேர்வராயன் மலை நீள்கிறது. ஆத்தூர் முதல் விழுப்புரம் வரை அதன் வாலைப் பிடித்து வளர்கிறது கல்வராயன் மலை. தெற்கில் ஜருகு மலை, ஊத்து மலை, நாமமலை, கந்தகிரி மலை இருக்கின்றன. வடக்கில் நகர மலை, பெருமாள் மலைகள் விரிகின்றன. ராசிபுரம் தாண்டிச் சென்றால் கொஞ்சி அழைக்கிறது கொல்லி மலை. இவை எல்லாம் கிழக்குத் தொடர்ச்சி மலைகள். சேலத்தின் நீராதாரம் இந்த மலைகள்தான். 

ஒருகாலத்தில் இந்த மலைகளில் ஆயிரக்கணக்கான அரு விகள் இருந்தன.
சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடிய தண்ணீர் திருமணி முத்தாறாக உற்பத்தியாகி சேலம் மாவட்டத்தில் இருந்த தொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி, காவிரியுடன் கலந்தது. தஞ்சாவூர் நெல்லுக்கு வளம் சேர்த்த பெருமை சேலத்தின் தண்ணீருக்கும் இருக்கிறது. மொரப்பூரில் ஓடும் பொன்னையாறும் ஓமலூர் அருகே ஓடும் சர்பந்தா நதியும் சேர்வராயன் மலை கொடுத்த கொடைகள்தான். 

இவை தவிர, கல்வராயன் மலையில் இருந்து வசிஷ்ட நதியும் கொல்லி மலையில் இருந்து சுவேதா நதியும் உற்பத்தியாகின. ஒருகாலத்தில் சுற்றிலும் பச்சைப் பசேல் மலைகளுடனும் நடுவே ஐந்து ஆறுகளுடன் கூடிய பசுமைப் பள்ளத்தாக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துப் பாருங்கள்!

திருமணிமுத்தாறு தொன்மையான நதி. மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்றெல்லாம் அது அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்துச் சிப்பிகள் இருந்தன; முத்து எடுக்கப்பட்டது என்பது மக்களின் நம்பிக்கை. பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக் கப்பட்டது என்பார்கள். அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றைக்கும்கூட அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது. 

சேலம் ஸ்தல புராணத்தில் பாடப்பட்ட பாடல் ஒன்று,
‘சேலம் மணிமுத்தா நதியின்
ஒரு திவலை நீர் உண்டால்
உடல் பாதகங்கள் அகலும்
பரம ஞானம் உண்டாகும்’
என்கிறது.

சேர்வராயன் மலையின் தெற்கில் ஏற்காடு அருகே பிறக்கிறது திருமணி முத்தாறு. அது சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 75 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. அன்றைய திருமணிமுத்தாற்றில் குகை வாய்க்கால், பஞ்சந்தாங்கி ஏரி வாய்க்கால், சக்கிலி ஏரி வாய்க்கால், மூக்கனேரி வாய்க்கால், தாதுபாய்க்குட்டை வாய்க் கால், நோட்டக்காரன் வாய்க்கால், வெள்ளக்குட்டை வாய்க்கால், சீலாவரி வாய்க்கால் என எட்டு வாய்க்கால்கள் இருந்தன. 

நகரமலை ஆறு, போதமலை ஆறு, அறுநூத்துமலை ஆறு, ஜருகுமலை ஆறு, கஞ்சமலை ஆறு, கொள்ளை ஆறு என ஆறு துணை ஆறுகள் இருந்தன. திருமணிமுத்தாற்றின் வடிநிலப்பரப்பு 717 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. ஆற்றில் பல்வேறு காலகட்டங்களில் 25 அணைகள் கட்டப்பட்டன. 290 சங்கிலித் தொடர் ஏரிகளை திருமணிமுத்தாறு நிரப்பியது. 

1889-ம் ஆண்டில் இந்த நீர் நிலைகளை மேம்படுத்த ரூ. 1,07,568 ஒதுக்கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் ஆங்கிலேயரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. இன்றளவும் அங்கே அள்ள அள்ளக் குறையாமல் இரும்பு, மேக்னசைட், குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒருகாலத்தில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது எனச் சொல்கிறாகள். திருமணிமுத்தாற்று நீர் வளத்தால் கரும்பு, பருத்தி விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். 

சேலம், உப்பம், லாடம் போன்ற பருத்தி வகைகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. இங்கு நெய்த பருத்தி ஆடைகள் மற்றும் குளிர்கால ஜமுக்காளங்கள் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ராசிபுரம் வெல்லமும் நெய்யும் இலங்கைக்குச் சென்றன. வாழ்வாங்கு வாழ்ந்தது திரு மணிமுத்தாற்றின் நதிக்கரை நாகரீகம்.

மக்களை வாழ்வாங்கு வாழ்வித்த அந்த ஆறு இன்று இல்லை. நிகழ் காலத்தில் கண்முன்னே துள்ளத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டது அது. இதுவரை வெளியே சொல்லப்படாத சோகக் கதை அது. ஆரம்பத்தில் நதியில் சாக்கடையைக் கலந்தார்கள். வழியின்றி ஏற்றுக்கொண்டது நதி. 

ஆனால், அதன் பின்பு 2000-களின் தொடக்கத்தில் தீட்டப்பட்டது ஒரு படு கொலைத் திட்டம். அந்தப் படு கொலைக்கு ‘திருமணிமுத்தாறு அபிவி ருத்தித் திட்டம்’ என்று பெயர் வைத்தார்கள்.
கொலையைத் தொடங்கும் முன்பாக ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டி பூமி பூஜை செய்தார்கள். எல்லோரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். முதலில் நதிக்கு ஒன்றும் புரியவில்லை. தொடங்கியது கொலை. முதலில் கரைகள் எங்கும் சிமெண்ட் கலவையைப் பூசினார்கள். பின்பு அணைமேடு தொடங்கி கொண் டலாம்பட்டி வரை நதியின் படுகை யெங்கும் கான்கிரீட் கலவையை அடைத்தார்கள்.

மண்ணுக்கும் நதிக்கும் இருந்த நரம்பு வெட்டி எறியப்பட்டது. மூச்சுவிட வழியில்லாமல் முனகித் துடித்தது நதி. வாயிருந்தால் கதறியிருக்கும் அது. உலகில் எங்கேனும் இதுபோல கொடுமை நடந்தது உண்டா? இது நடந்தபோது மக்கள் மகிழ்ச்சிப் பொங்க கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்த்ததுதான் வேதனை. சூழலியாளர்கள்கூட குரல் கொடுக்கவில்லை. 

அரசியல்வாதிகள் ஊர்தோறும் இந்தப் படுகொலை யைப் பற்றிப் பெருமையாக பறைச்சாற் றினார்கள். தான் பெற்றெடுத்தப் பிள்ளைகளே தனக்கு உயிரோடு சமாதி கட்டியது கண்டு வேதனை தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்தது நதி. 

முன்பு சாக்கடை ஓடினாலும் மழைக் காலத்தில் ஆற்றில் பெருகிய நீரால் சேலத்தின் நிலத்தடி நீர் வளம் நன்றாக இருந்தது. நதியைப் புதைத்தப் பின்பு சுற்றுவட்டாரங்களின் நிலத்தடி நீரும் வற்றிப்போனது. தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள் மக்கள். இப்போது பார்க்க சகிக்கவில்லை அந்த பெரிய சாக்கடையை.

மரணித்தது நதி மட்டும்தானா? அது உருவாக்கிய ஏரிகளும்தான்!

நன்றி : ஹிந்து

Friday, November 6, 2015

BLACK TIGER

Print Friendly and PDF

ரவீந்தர் கௌஷிக்... 

இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை என்றே சொல்லலாம்..நாடகங்களில் நடித்துகொண்டு இருந்த மனிதரை, அவருடைய திறமையை அடையாளம் கண்டு பிடித்து உளவுத்துறைக்கு கொண்டு வந்தது ரிசர்ச் அனலிசிஸ் விங் என்று சொல்லப்படும் ரா.....1975 ல் இவர் ரா வில் சேர்ந்தார்.. நிற்க..
2001ல் பாகிஸ்தானில் நபி அஹெமத் என்பவர் இருதயம் மற்றும் நுரையீரல் நோயால் அவதிப்பட்டு மரணம் அடைந்தார்.. ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு தனது தாயாருக்கு வழக்கம் போல சேர வேண்டிய கடிதங்கள் அனைத்தையும் ரகசியமாக கொண்டு சேர்த்தார்.. அதை தானே அவர் அவருடைய 30 ஆண்டு காலமாக செய்து கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தையே கலங்க அடித்தார்..
ரவீந்தர் கௌஷிக் என்கிற நபி அஹெமத்..... இந்திய உளவுத்துறை கண்டு எடுத்த தலை சிறந்த உளவாளி...பாகிஸ்தான் ரானுவதிற்குள்ளேயே புகுந்து ஒரு முக்கிய பதவியும் அடைந்த மாமனிதர்.. இன்றும் இவரை பற்றி ரா வில் சேர விரும்பும் உளவாளிகள், இவருடைய அபரிமிதமான சாகசங்களை கேட்டு மெய் சிலிர்ப்பது நிஜம்.தன்னுடைய 23 வது வயதில் ரா வினால் தேர்வு செய்யப்பட்டு, தெள்ள தெளிவாக உருது பாஷையை கற்றுக்கொண்டு, குரானை புரட்டி படித்து, சுன்னத் செய்து கொண்டு ஒரு முழு இஸ்லாமியனாகவே மாறி, பாகிஸ்தானில் உள்ள இண்டு இடுக்கு எல்லாம் மனப்பாடம் செய்து, பாகிஸ்தானில் நுழைந்தார்.. இவர் இந்தியன் என்று சம்பந்தப்பட்ட அத்துணை ரகார்டுகளும் இங்கு இந்தியாவில் அழிக்கப்பட்டது.. ஒரு வேளை இந்த உளவாளிகள் மாட்டிகொண்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் கையை விரித்து விடும்.. இது உலகம் முழுதும் கடைபிடிக்க படும் நடவடிக்கை..
1975ல் பாகிஸ்தானில் சட்டக் கல்லூரியில் பட்டம் படிக்க அடியெடுத்து வைத்த இந்த மனிதருக்கு ராணுவத்தில் சேர அருமையான அடிகோலாக அமைந்தது..பாகிஸ்தானில் ராணுவத்தில் சேர்ந்த கொஞ்ச வருடங்களிலேயே மேஜர் பதவிக்கு வந்தார் என்றால் இந்த மனிதரின் அசாத்திய துணிச்சல் மற்றும் அறிவை என்னவென்று சொல்லி வியப்பது..?அமானத் என்கிற இஸ்லாமிய பெண்ணை திருமணமும் செய்து இஸ்லாத்தையும் தழுவி, ஒரு நிஜ பாகிஸ்தானியாகவே மாறி விட்டார்.. 1975 முதல் 1983 வரை இந்திய ராணுவத்திற்கு தேவைப்பட்ட அத்துணை ரகசியங்களும் இவரால் பரிமாறப்பட்டன..அவை எல்லாம் கிடைத்த காரணத்தால் எண்ணில் அடங்காத நாசகார பாகிஸ்தானின் முயற்சிகள் இந்திய ராணுவத்தினரால் தடுக்கப்பட்டன..இவரின் அபார திறமையை கண்டு ராணுவத்தினர் மட்டும் என்றி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களும் மெய்சிலிர்த்தார். அவருக்கு இந்திரா காந்தி BLACK TIGER என்கிற பட்ட பெயரும் சூட்டினார்...
இதற்கு நடுவில் இந்திய உளவு துறை அடுத்து இன்யத் மைஷா என்கிற ஒருவரை அதே பாகிஸ்தானுக்கு 1983ல் அனுப்பியது.. எப்படியோ தன்னுடைய ராணுவத்தில் ஒரு உளவாளி வந்துவிட்டதை தெரிந்து கொண்ட பாகிஸ்தான், இந்த மனிதரை பிடித்து விட்டது.. சும்மா விடுமா.. யார் உள்ளே புகுந்தார் என்று தெரிந்து கொள்ள இவரை சித்திரவதை செய்து விஷயத்தை கறக்க என்னன்னவோ செய்தது..கடைசியில் தெரிந்தும் கொண்டது.. இது நாள் வரை யார் ராணுவ மேஜர் ஆக இருந்தாரோ இவர் ஒரு இந்திய உளவுத்துறையின் ஆள் என்று தெரிந்த பாகிஸ்தான் ராணுவம் திகில் அடைந்து, அவரை 2 வருடங்கள் சித்திரவதை செய்து, பின்னர் சிறையில் அடைத்து, அவருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்ற முடிவு செய்தது.. இது நடந்த வருடம், 1985... ஆனால் கடைசியில் அவருடைய தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக பாகிஸ்தான் உச்ச நீதி மன்றத்தால் மாற்றப்பட்டது.
கௌஷிக் கிட்டத்தட்ட 16 வருடங்கள் தன்னுடைய தாய் நாட்டிற்காக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.. மிகவும் மோசமான அந்த சிறை வாசத்தால் அவருக்கு TB , ஆஸ்துமா வியாதிகள் தொற்றிக்கொண்டன..கடைசியில் மீளவே முடியாமல் வீர மரணத்தை முல்தானில் உள்ள மத்திய சிறையில் அடைந்தார்.. அங்கேயே அவரை புதைக்கவும் செய்தனர்..
இந்திய உளவுத்துறை இவரை போன்ற ஒரு மாவீரனை இன்று வரை கண்டெடுக்க வில்லை.. எந்த வித பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் தேசத்துக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணம் செய்த இவரை நினைத்து இன்றும் ரா அமைப்பினர் பெருமை படுவர்.. இவரை போன்றவர்கள் பொது மக்களால் அறியப்படுவது இல்லை.. முடியவும் முடியாது.. உளவின் சிறப்பே தன்னை யாரும் அறியக்கூடாது என்பது தான்..போற்றுதலுக்கு உரிய இந்த மனிதரை வணங்குவோம்..
சல்மான் கான் நடித்து பெரும் அளவில் வெற்றி பெற்ற படம் ஏக் தா டைகர்.. இவரை மனதில் வைத்து தான் அந்த டைட்டில்..

Wednesday, November 4, 2015

கலங்கரை கலக்கம்


Print Friendly and PDF



ஆதி கால கலங்கரை கோபுரங்களின் உச்சியில், கப்பல்களுக்கு துறைமுகத்தை அடையாளம் காட்டும்விதமாக மகர ஜோதி போல நெருப்பை எரிய விட்டிருக்கிறார்கள். சரி உலகின் முதல் கலங்கரை விளக்கம் எது? கிமு 280ல் அலெக்ஸாண்ட்ரியாவில் கட்டப்பட்ட பரோஸ் லைட்-ஹவுஸ். இருபது ஆண்டுகள் முயற்சியில் கட்டப்பட்ட இது, பழங்கால உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று. இதன் உயரம் 370 அடி. எகிப்தின் அரசர் தலாமி தான் உருவாக்கிய அலெக்ஸாண்ட்ரியா என்ற துறைமுக நகரத்தை ஒட்டியமைந்த ஒரு சிறு தீவில் இதனை உருவாக்கினார். தலாமி வேறு யாருமல்ல மாவீரன் அலெக்ஸாண்டரின் முக்கியத் தளபதி. பேரரசி கிளியோபாட்ராவின் பாட்டன்களின் ஒருவர்.

இப்போது இருக்கும் உலகின் பெரும்பான்மையான லைட்-ஹவுஸ்களின் வயது நூற்றுக்கும் மேல். எத்தனையோ கப்பல்களையும் உயிர்களையும் ஆபத்திலிருந்து கரை சேர்த்த கடவுள் அவை. விளக்கணைந்த பொழுதுகளில் கடலுக்கு பல உயிர்களை பலிகொடுத்த சாத்தான்களும் அவையே. குட்டித் தீவுகளில் கெட்டியாக நிற்கும் ஒற்றை லைட் ஹவுஸின் தனிமையில் ஏராளமான மர்மங்கள் உண்டு. எதனால்?

ஆளில்லா கடற்கரைப் பகுதிகளிலும், தனித் தீவுகளிலும் அமைந்த லைட் ஹவுஸகளைப் பராமரிப்பதற்காகப் பணியாளர்கள் நியமிக்கபட்டிருந்தார்கள். சில லைட் ஹவுஸ்களில் தனியே ஒரே ஒரு பணியாளர் மட்டும் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தவமிருப்பார். ஏதாவது கப்பல்கள் கடந்து சென்றால் மனித முகத்தை பார்க்கலாம். சில இடங்களில் கடற்கொள்ளையர்கள் வந்து லைட் ஹவுஸைச் சேதப்படுத்திவிட்டு, பணியாளரின் உயிரை எடுத்துப் போவதுண்டு. புயல்,மழை சூறாவளிகளில் சிக்கி இறப்பவர்களும் உண்டு. லைட் ஹவுஸைப் பராமரிக்கும் போது அதற்கு பெயிண்ட் அடிக்கும்போது தவறிக் கீழே விழுந்து இறந்த பணியாளர்கள் அதிகம். தனிமையின் துயரம் தாளமல், விரக்தியில் உயரத்தில் இருந்து கீழே குதித்து உயிரை விட்டவர்களும் உண்டு.

செத்துப்போனவர்களுக்கு பிரச்னையில்லை. அடுத்து அதே லைட் ஹவுஸூக்குப் பணியாளராக நியமிக்கப்படும் நபருக்குத்தான் ஆயுள் தண்டனை. செத்துப்போன பழைய ஆள், ஆவியாக அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதாகத் தோன்றும். யாரும் இல்லாமலேயே யாரோ உடனிருப்பதாகத் தோன்றும். கடல் உறங்கும் சமயத்தில் இரவுகளில் எழும் அமானுஷ்ய சப்தங்கள் உயிரைக் குடிப்பதாக அமையும். இம்மாதிரி பயத்தில் செத்துப் போன பணியாளர்களின் நிஜக்கதைகளும் கொட்டி கிடக்கின்றன.

அமெரிக்காவில் Massachusetts பகுதியில் பிளைமெளத் விரிகுடாவில் 1769 ஒரு லைட் ஹவுஸ் கட்டப்பட்டது. இரண்டு கோபுரங்கள் கொண்ட அதனை அண்ணன் ஜானும் தங்கை ஹன்னாவும் பராமரித்தாரகள். ஒரு போரில் கலந்து கொள்ளச் சென்ற ஜான் கொல்லப்பட்டார்.முதல் பெண் லைட் ஹவுஸ் பராமரிப்பாளராக ஹன்னா அதனை பல வருடங்கள் பராமரித்து வந்தார். காலப்போக்கில் பலவித மாற்றங்களை கண்ட அந்த கோபுரங்களில் ஒன்று 1924ல் இடிக்கப்பட்டது. 1986 ல் தானியங்கி லைட் ஹவுஸாக மாற்றப்பட யாரும் அதில் தங்குவதில்லை.

லைட் ஹவுஸ்களைத் தேடி சென்று புகைப்படம் எடுக்கும் லூயிஸ் தன் மனைவியுடன் பிளைமெளத்துக்கு சென்று ஓரிரவு தங்கினார். இரவில் விழித்த அவர் நடுநடுங்கிப் போனார். பதினெட்டாம் நூற்றாண்டு உடையில் ஒரு பெண்ணின் அரூபமான உருவம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. பயத்தில் அவர் அலற மனைவியும் பதறி எழ அந்த உருவம் அப்படியே காற்றில் கலந்தது. பின் லூயிஸ் விடுத்த ஸ்டேட்மெண்ட் அது நிச்சயம் ஹன்னாவாகத்தான் இருக்கக்கூடும் அவள் அந்த லைட் ஹவுஸை விடுவதாக இல்லை.

பூத்பே துறைமுகத்திலிருந்து பத்து மைல்கள் தொலைவிலுள்ள ஸீகுன் maine தீவில் ஒரு லைட் ஹவுஸ் கட்டப்பட்டிருந்தது. குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால், யாரும் அங்கு சென்றுவர இயலாது. 1850 இருக்கலாம். அப்போது அங்கே பணி நியமனம் செய்யப்பட்டிருந்த ஒருவர், திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்குச் செல்வதுபோல தன் மனைவியுடன் லைட் ஹவுஸூக்கு சென்று குடியேறினார். யாருமில்லாத தனிமை. பரவசமான பொழுதுகள்.

எல்லாம் சில நாள்களிலேயே வெறுத்துவிட்டது. அந்த மனைவி பொழுதுபோகமல் தவித்தாள். கணவன் அவளுக்காகவே பியானோ ஒன்றை வரவழைத்தான். என்ன பியானாவோடு ஒரே ஒரு பாடலுக்கான நோட்ஸ் மட்டும்தான் வந்தது. பொழுது போகத போதெல்லாம் அந்த ஒரே பாடலையே மீண்டும் மீண்டும் வாசித்தாள். தினமும் அதே பாடல். பியோனோவின் சத்தம் கேட்டாலே கணவனுக்கு கோபம் வர ஆரம்பித்தது.

நிறுத்தப் போகிறாயா இல்லையா....

அவள் காதில் வாங்கவில்லை. கணவன் ஒரு கோடாரியை எடுத்தான். பியானோ மீது பாய்ச்சினான். அந்த செயலை பொருக்க முடியாத மனைவி குறுக்கே பாய்ந்தாள். கோபம் தணிந்து கணவன் தன்னிலைக்குத் திரும்பியபைாது, இரண்டு உடல்கள் அங்கே கிடந்தன, மனைவியும் பியானேவும்.

தன் தவறை உணர்ந்த அந்தக் கணவன் லைட் ஹவுஸின் உச்சத்தில் ஏறி நின்றான். தன் நெஞ்சில் கோடாரியைச் செலுத்தினான். அவன் உடல் அப்படியே தரையே நோக்கி...

இன்றைக்கும் அந்த பியானோவின் இசை எப்போதாவது ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் ஸீகுன் லைட் ஹவுஸைச் சுற்றிப் பார்க்க செல்பவர்கள்.

Wednesday, October 28, 2015

நேதாஜியின் மரண மர்மங்கள்


Print Friendly and PDF


டயானா,கென்னடி போன்றோரின் மரணங்களுக்கு இணையான மர்மம் உடையது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம்,அவர் உண்மையில் இறந்தாரா,இல்லை அவ்வாறு நம்ப வைக்க உண்டாக்கிய சூழ்ச்சியா?,சூழ்ச்சிக்கான காரணம் என்ன?பிண்ணணியில் உள்ள அரசியல் சதுரங்க ஆட்டம் என்ன? போன்றவற்றை இத்தொடரில் விரிவாக காண்போம்.

சுதந்திரம் கிடைக்கும் முன் சிங்கப்பூர் சென்றார் நேதாஜி,சிங்கப்பூரில் இருந்து பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்ட நேதாஜி, பாங்காக்கில் இருந்து வியட்நாமில் உள்ள சைகோனுக்கு ராணுவ தளபதிகளுடன் சென்றார்.

சைகோன் விமான தளத்தில் ஜப்பான் போர் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்தது, கடைசி நேரத்தில் விமானத்தில் ஒருவருக்கு மட்டுமே இடம் உள்ளது என்று ஜப்பான் அதிகாரிகள் கூறினர்.

உடனே செல்லவா? வேண்டாமா? என்று யோசித்த நேதாஜி, அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் எந்நேரமும் சைகோனை கைப்பற்றலாம் என்று இருந்ததால் விமானத்தில் செல்வது என்று முடிவு செய்தார்.
கடைசி நேரத்தில் மற்றொருவர் வரலாம் என்று அதிகாரிகள் கூறியதால் தன்னுடன் ஹபிப்-வுர்-ரஹ்மான் அவர்களையும் அழைத்து கொண்டு விமானத்தில் ஏற அங்கிருந்த மற்றவர்களை பார்த்து நேதாஜி 'ஜெய்ஹிந்த் ' என்று கூற விமானம் புறப்பட்டது.

சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானது என்றும் அதில் நேதாஜி இறந்து விட்டதாகவும் ஜப்பான் அரசு அறிவித்தது.

ஆனால் நேதாஜியை தப்பிக்க வைக்க ஜப்பான் போட்ட திட்டம் தான் அது, உண்மையில் அப்படி ஒரு விபத்து நடந்திருக்க வாய்ப்பு இல்லை.

1945 ஆகஸ்ட் 18 ம் தேதி தைபேய் விமான நிலையத்திலோ, அதன் அருகிலோ எந்த விமான விபத்தும் நடக்கவில்லை என்று தைவான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜப்பான் கோவில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள சாம்பல் மற்றும் எலும்புகளை டி என் ஏ பரிசோதனை நடத்த விடாமல் தடுத்து விட்டது இந்திய அரசு.

முகர்ஜி கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்று அளித்த அறிக்கையை எவ்வித காரணமும் கூறாமல் இந்திய அரசு நிராகரித்து விட்டது.

பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாக முகர்ஜி கமிஷன் சுட்டிக் காட்டியிருந்தது.

பிரிட்டனில் 25.10.1945ஆம் நாள் பிரதமர் கிளமண்ட அட்லீ தலைமையில் நடந்த காபினட் கூட்டம் வரலாற்றில் மிக முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வு.

அந்தக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரிட்டிஷ் அரசே பதிப்பித்த ஆட்சி மாற்றம் என்ற நூலில் இந்தியாவில் ஒரே எதிரியாகப் போஸ் வருணிக்கப்பட்டார். அவரைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து என்ன தண்டனை அளிப்பது என அமைச்சரவை விவாதித்துள்ளது.

ஆக போஸ் இறந்து விட்டது உண்மையாக இருக்குமானால் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு மாதம் கழித்து பிரிட்டிஷ் அரசின் அமைச்சரவை போஸைக் கைது செய்வது பற்றி எப்படி விவாதித்திருக்க முடியும்?

பிரிட்டிஷ் – இந்திய அரசு பிரிட்டனில் உள்ள அரசுக்கு 23.10.1945 ஆம் நாள் அனுப்பிய கடிதத்தில் போஸைக் கைது செய்தால் நாடே கொந்தளிக்கும் “அவர் எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்.அவரை சரண் அடைய வற்புறுத்தாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தது.

நேதாஜியுடன் பயணம் செய்து உயிரிழந்ததாக கூறப்பட்ட கிமுரா என்ற ராணுவ தளபதி ஒரு மாதம் கழித்து சிங்கப்பூரில் சரணாகதி பத்திரத்தில் கையெழுத்து இட்டவர், உயிரிழந்ததாக கூறப்பட்டவர் எப்படி வந்தாரோ அதே போல தான் நேதாஜியின் மரண செய்தியும்.

1946 மார்ச் லாகூரில் உள்ள ட்ரிபியூன் என்ற பத்திரிகையில் சிங்கப்பூர் வீழ்ச்சியின் போது நகரசபை இன்ஜினியராக இருந்த திரு நாயர் கூறிய செய்தியை வெளியிட்டு இருந்தது அதில் "நேதாஜி சென்ற விமானம் மறுநாள் ஹாங்காங்கில் எவ்வித சேதமும் இல்லாமல் இருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

1946 ல் ஷா நவாஸ் கான் மற்றும் சைகாலும் திரு காந்தி அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது நீங்கள் நேதாஜி பற்றி எத்தகைய செய்திகளை கூறினாலும் நேதாஜி இறக்கவில்லை என்பது தான் எனது தீர்மானம் என்று கூறியிருந்தார்.

ஷா நவாஸ் கான் விசாரணையை ஏற்க முடியாது என்றும் ஷா நவாஸ் கான் ஜப்பானை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜப்பான் இந்தியர்கள் போராட்டம் நடத்தி இருந்தனர், காரணம் ஷா நவாஸ் கான் கமிஷன் சுதந்திரமாக செயல்படாமல் நேருவின் கீழ் இயங்கியது, உண்மைகளை வெளியிடாமல் மறைக்க நினைத்தது அந்த கமிஷன்.

நேதாஜியின் மிக நெருங்கிய நண்பரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1949 ஜனவரி 23 ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் பொதுகூட்டத்தில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் தனக்கும் நேதாஜிக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

1950 ல் இந்தியாவில் இருந்து தலைமறைவான தேவர் ஒராண்டு கழித்து மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தார், மீண்டும் 1951 ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில் நேதாஜி நலமாக இருக்கிறார், அவரை சந்தித்து விட்டு வந்தேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சில ஆண்டுகள் கழித்து பர்மா சென்று திரும்பும் வழியில் கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேவர் நேதாஜி உயிருடன் இருக்கிறார், நேதாஜி உயிருடன் இருப்பது நேரு மற்றும் அவரது சகோதரி ரஷ்ய தூதரான விஜயலட்சுமி பண்டிட் அவர்களுக்கும் தெரியும், தங்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் மௌனம் காக்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தார் .

Friday, October 23, 2015

கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொண்டது எப்படி?


Print Friendly and PDF



எகிப்தியன் கோப்ரா என்ற பெயரால் அழைக்கப்படும் NAJA வகைப் பாம்பை தன் மார்பில் கடிக்க வைத்து கிளியோபாட்ரா இறந்துபோனாள்.இது புளுடார்ச் உள்ளிட்ட பல சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளது.இறந்து கிடக்கும் கிளியோபாட்ராவின் திறந்த மார்பில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதாகத்தான் பல பழைய ஓவியங்களும் அமைந்துள்ளன.ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட சிலர் கிளியோபாட்ரா மார்பில் ஒன்று கையில் ஒன்று என்ற இரண்டு பாம்புகளைக் கடிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளனர்.ஆனால் எகிப்திய கோப்ரா வகை பாம்பு கடித்தால் விஷம் மெதுவாகத்தான் உடலில் பரவுமாம் .உடனடி மரணம் நிகழாதாம்.

கிளியோபாட்ரா விஷம் தடவப்பட்ட தங்க ஊசிகளை தன் மணிக்கட்டில் குத்திக் கொண்டு இறந்தாள் என்னும் கருத்தும் உண்டு.இறந்து கிடந்த கிளியோபாட்ராவின் உடலைச் சோதனையிட்ட அகஸ்டஸ் அவளது கையில் இரு மெல்லிய துளைகளைக் கண்டதாகவும் குறிப்புகள் உள்ளன.தன் உடல் அழகை போற்றி பாதுகாத்த கிளியோபாட்ரா பாம்பை கடிக்கவிட்டு உடலெங்கும் நீலமாகி கொடூரமாக வலியோடு இறந்துபோவதை விரும்பியிருக்க மாட்டால் அவள் ஹெம்லாக் என்ற தாவரத்தின் கொடூர விஷத்தை ஓபியத்தில் கலந்து சாப்பிட்டு இருக்கலாம்.அது உடணடி மரணத்தை தரக்கூடியது-என்பது.ஜெர்மனியை சார்ந்த Christoph schaefer என்ற சரித்திர ஆசிரியரின் கோணம்.

அலெக்ஸாண்டிரியாவில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்த கிளியோபாட்ராவின் கல்லறை எங்கே இருக்கிறது என்பது குறித்த மர்மமும் சீரஞ்சிவிாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Tuesday, October 13, 2015

The Real Science Behind The Martian


Print Friendly and PDF

த மார்ஷியன். கிளாடியேட்டர், புரோமிதியஸ், ராபின் ஹூட், பிளாக் ஹாக் டவுன், ஹனிபல், எக்ஸோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ் என மறக்க முடியாத படங்களைத் தந்த இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் படம் இது
பூமிக்கு மனித இனம் வந்தது எப்படி என்பதைத் தேடிச் செல்லும் படம் தான் புரோமிதியஸ். இதற்காக LV-223 என்ற கிரகத்துக்குச் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சுகிறது.

மனித இனத்தை அழித்து ஒழிக்கும் அபாயம் அங்கே இருப்பதைக் கண்டு அதிர்கின்றனர்.

இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இது ஒரு அரைவேக்காடு என்ற விமர்சனத்தை பெற்றது அந்தப் படம்.


The Real Science Behind The Martian அந்த விமர்சனங்களை மொத்தமாக துடைத்து எறியும் படம் தான் மார்ஷியன். இதே பெயரில் வெளியான ஒரு நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது.

மனிதனின் பலமே புத்திசாலித்தனமும் விடா முயற்சியும் தான். இந்த இரண்டும் இருக்கும் வரை மனிதன் எந்த பிரச்சனையையும் சமாளிக்க முடியும், அது மார்ஸ் கிரகத்தில் தனித்து விடப்பட்டாலும் கூட என்பதை அழுத்தமாகவும் அறிவியல்பூர்வமாகவும் நம்பும்படியும் சொல்கிறது இந்தப் படம்.

செவ்வாய் எனப்படும் மார்ஸ் கிரகத்துக்கு மனிதன் பல பயணங்கள் மேற்கொண்டு அங்கே ஒரு ஆய்வகத்தையும் அமைத்துவிட்டநிலையில் தொடங்குகிறது படம்.

அந்த கிரகத்துக்கு செல்லும் புதிய குழு, பெரும் புயலில் சிக்க, உடனடியாக அவர்கள் அங்கிருந்து வெளியேறி பூமிக்குத்திரும்புகின்றனர். இவர்களும் 4 வருடம் பயணம் செய்தே பூமியை அடைய முடியும்.

இதில் மேட் டேமன் மட்டும் மார்ஸ் கிரகத்தில் தனித்து விடப்படுகிறார்.புயலில் சிக்கி அவர் இறந்துவிட்டதாக நினைத்து மற்றவர்கள் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்க, ஒரு வழியாக உயிர் பிழைத்து தனது ஆய்வகத்துக்குத்திரும்புகிறார்.மிஞ்சி இருப்பது இந்த ஆய்வகமும், ஒரு சிறிய ரோவரும் தான் (பேட்டரி கார்). பூமியிலிருந்து 55 மில்லியன் கி.மீ. தொலைவில், யாருமில்லா கிரகத்தில், புயலில் முழுமையாக சேதமடைந்துவிட்ட
ஆண்டனாக்களால் பூமியோடு தொலைத் தொடர்பு வசதி கூட இல்லாமல் மாட்டிக் கொண்டவர் என்ன செய்வார்.

தனது மரணத்தை எதிர்நோக்கி காத்திருப்பார்.இது தானே வழக்கம். ஆனால், நான் சாகக் கூடாது. எப்படியாவது உயிரோடு இருக்க வேண்டும், நான் உயிரோடு இருப்பதை நாஸாவுக்குத் தெரிவிக்க வேண்டும், அவர்கள் என்னை எப்படியும் மீட்டிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு தனது புத்திசாலித்தனத்தையும் பிரச்சனைகளை எப்படி பாஸிட்டிவாக அணுகுவது என்ற திறமையையும் வைத்துக் கொண்டு அடுத்தடுத்த காட்சிகளில் அதகளம் செய்கிறார் மேட் டேமன்.

பூமியிலிருந்து உடனடியாக ஒரு விண்கலம் கிளம்பினால் கூட மார்ஸ் கிரகத்தை அடைய 4 ஆண்டுகள் ஆகும் என்பதால், தான் உயிரோடு இருக்க முதலில் நீரை தயாரிக்கவும் அடுத்ததாக ஆய்வக சூழ்நிலைக்கு உள்ளேயே உருளைக்கிழங்கையும் பயிரிடவும் திட்டம் போடுகிறார்.

ஆய்வு மையத்தில் இருக்கும் கருவிகள், ரசாயனங்களை வைத்தே நீரை உருவாக்குவதோடு, தன்னுடன் வந்த விண்வெளி வீரர்களின் கழிவுகளை செவ்வாய் கிரக மண்ணில் கலந்து உரமாக்கி உருளைக் கிழங்கை வெற்றிகரமாக பயிரிடுகிறார்.

அதிலும் ஒரு விபத்து ஏற்பட்டு பயிர்கள் காலியாகி விடுவதோடு, அடுத்தடுத்து தொடர் பிரச்சனைகள். தான் உயிரோடு இருக்க ஒரே வழி, பூமிக்கு நாம் உயிரோடு இருப்பதை தெரிவிப்பது தான் என்ற முடிவுக்கு வரும் மேட் டேமன், செவ்வாய் கிரத்தில் உண்மையிலேயே இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்ட Pathfinder விண்கலத்தைத் தேடி கிளம்புகிறார் (கதை எதிர்காலத்தில் நடப்பதால்,அந்த விண்கலம் காலாவதியாக. மண்ணில் புதைந்து கிடக்கிறது)

அதை ஒரு வழியாக தேடிப் பிடித்து பூமியோடு தகவல் பரிமாற்றம் செய்து உயிரோடு இருப்பதை சொல்கிறார். இதையடுத்து பூமியிலிருந்து உணவு, நீருடன் ஒரு விண்கலத்தை அவசரமாக அனுப்ப நாஸா எடுக்கும் முயற்சிகளும் தோற்றுவிட, அவர்களுக்கு சீனா தங்களது ரகசியமான அதிவேக ராக்கெட்டை தந்து கை கொடுக்கிறது. அதுவும் கூட செவ்வாய் கிரகத்தை அடைய 3 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், அடுத்ததாக இந்த கிரகத்துக்கு நாஸா அனுப்பப் போகும் விண்கலம் தரையிறங்கும் இடத்தை நோக்கி பேட்டரி காரில் பயணிக்கிறார்.

இதற்காக எக்ஸ்ட்ரா பேட்டரிகளை அவர் சேகரிப்பதும், குளிருக்காக ஹீட்டரை போட்டால் பேட்டரிகளின் பவர் வேகமாக காலியாகும் என்பதால் அதைத் தவிர்க்க அந்த காருக்குள், விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புளுட்டோனியம் உலையை பயன்படுத்துவதும், நீர் தயாரிக்க புதிய வகையான தொழில்நுட்பத்தை உருவாக்குவதும் என படம் முழுக்கவே அழகழகான புத்திசாலித்தனமான ஹை டெக் அறிவியல் செய்திகள்.

இவரை மீட்க என்ன தான் செய்வது என நாஸாவின் மூத்த விஞ்ஞானிகள் எல்லாம் குழம்புகையில், ஒரு இளம்விஞ்ஞானி மேட் டேமனை மீட்க அட்டகாசமான ஐடியா தருகிறார்.

செவ்வாய் கிரகத்திலிருந்து கிளம்பி பூமியை நோக்கி திரும்பி வந்து கொண்டிருக்கும்விண்கலத்தை அப்படியே பூமியை ஒரு ரவுண்ட் அடிக்க வைத்து, பூமியின் சுற்று விசையையே விண்கலத்துக்கான உந்து சக்தியாக (sling shot) மாற்றி, அதை மீண்டும் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்க வைக்கலாம் என்கிறார். அதை வைத்து நாஸா எடுக்கும் கடைசி கட்ட முயற்சிகள், செவ்வாய் கிரகத்திலிருந்து மேட் டேமன் விடுபட்டு இந்த விண்கலத்துக்குள் நுழைய நாஸா தரும்யோசனைகள், இந்த மீட்புத் திட்டத்துக்கு மேட் டேமனும் தரும் கூடுதல் ஐடியாக்கள்... என நாஸா என்பது உலகின் டாப் மூளைகளின் சங்கமம் என்பதை மீண்டும் உணரவைக்கிறார்கள்.

இந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பவராக ஒரு இந்திய நாஸா விஞ்ஞானியும் இருக்கிறார்.

கொஞ்சம் அதிபுத்திசாலித்தனமும் விடாத முயற்சியும் இருந்தால் மனிதன் எந்த சவாலையும் எதிர்கொள்ளலாம் என்பதை ஒரு சினிமாவாக சொல்லியிருக்கிறார் ரிட்லி ஸ்காட்.

அதற்கு செவ்வாய் கிரகத்தை களமாக பயன்படுத்தியிருக்கிறார். படத்தில் மூழ்கிவிடும் ரசிகரை கூட மீட்புப் பணிகள் தொடர்பாக ஐடியா தர வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.

அவ்வளவு தூரம் படத்தோடு ஒன்றிவிட செய்கிறார் ஸ்காட். இது மனிதனை கொண்டாடும் படம் / பாடம்.


தவறாமல், குழந்தைகளுக்கு இந்தப் படத்தை காட்டுங்கள்....

Friday, October 9, 2015

ஜோஜோ டீமன் (ZOZO)

Print Friendly and PDF


நீங்க உண்மையாகவே ஓஜா போர்டை பயன்படுத்த போகிறீர்கள் என்றால்ஓஜா போர்டின் மூலம் உங்களை துன்புறுத்தும் துஷ்ட சக்தியான "ZOZO" பற்றிகண்டிப்பாக தொிந்திருக்க வேண்டும்."ZOZO"வைப் பற்றி அறியாமல் நீங்கள் ஓஜா போா்டினை பயன்படுத்தினால் பொிய ஆபத்தை சந்திக்க நோிடும்.

யாா் இந்த"ZOZO"? அது என்ன செய்யும் என்பதை கீழே பாா்ப்போம்."ZOZO"என்பது அமானுஷ்ய ஆத்மாவாகும் (துா் ஆத்மா).நீங்கள் ஓஜா போர்டின் மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்ததும் ஆவியின் பெயரை முதலில் கேட்பீர்கள். அது Z இல் இருந்து O என்று மாறி மாறிகுறித்தால் அது அந்த அமானுஷ்ய ஆத்மா"ZOZO"தான்.

மேலும் அதனிடம் கேள்விகள் கேட்காமல் உடனே Goodbye சொல்லி இணைப்பை துண்டித்துவிடுங்கள்.இந்த செய்தியை படிக்கும் நண்பர்கள் ஒரு சில நேரத்தில் இணைப்பின் பொழுது Z-O தானாகவே தம்மை அறியாமல் நகர்த்தியதும் உண்டு . அது நம் ஆழ்மனத்தின் விளையாட்டு .

சில நேரங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு ஆத்மாவுடன் தொடர்பு கொள்ள நினைக்கும் பொழுதும், அதாவது நம் நண்பா்அல்லது உறவினா் ஒருவாின் ஆத்மாவுடன் தொடா்பு கொள்ள நினைக்கும் பொழுது இந்த"ZOZO"அரக்கன் நாம் யாரிடம் பேச நினைக்கிறோமோ அவர்களை போல் அழகாக நடித்து நம்மை ஏமாற்றி விடும். 

ஒரு சில நேரத்தில் நாணயம் இடது வலதாக வேகமாக நகர்த்தும்.விளையாட்டு தனமாக இருப்பவர்களே இந்த ஆத்மாவின் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகின்றனர் .பொதுவாக"ZOZO"விற்கு பெண்கள் மீதே அதீத நாட்டம் உள்ளதாக தெரிகிறது. பலர் தங்களது"ZOZO"அனுபவத்தை பகிரும் பொழுது, அந்த துா்ஆத்மா தங்களிடம் தொடர்பு கொள்ளும் பெண்களை கவா்ந்து அவர்களை நரகத்திற்கு அழைத்து போவதாக குறிப்பிட்டு கூறுகின்றனர் . 

மேலும் தொடர்பின் பொழுது இந்த"ZOZO"அதிகமாக பெண்களையே தாக்குகிறது என சிலா் ஆராய்ந்து கூறியுள்ளனா் .இந்த ZOZO மிக சுலபமாக நம்மை ஆட்கொள்ள கூடியது . நமக்கு நெருக்கமானவர்களை தாக்கவும் செய்கிறது, ஒரு சில நேரத்தில் அவர்களது இயல்பு குணத்தையே மாற்றகூடியது. 

நம் வீட்டை கூட அமானுஷ்ய நிலைக்கு மாற்ற கூடியது இந்த ZOZO.எனவே முடித்த அளவு ஆவி உலகத்தை தகுந்த அனுபவசாலியின் உதவியுடன் தொடர்புகொள்வதே நல்லது . விளையாட்டிற்காக இதை எக்காரணத்தை கொண்டும் உபயோகப்படுத்தாதீா்கள், 

விளையாட நமக்கு எவ்வளவோ விளையாட்டுகள் இருக்கிறது. இந்த ஓஜா போர்டைப் பற்றி முழுமையாக அறியாமல் பயன்படுத்தாதீா்கள்.

Tuesday, October 6, 2015

இல்லுமினாட்டியும், இல்லுமினா ரொட்டியும்.

Print Friendly and PDF


இல்லுமினாட்டிகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் தனி ஒருவன் படம் பார்த்த பொழுது. மற்ற அனைவரை விட. அந்த படத்தின் இயக்குனரான மோகன் ராஜாவை. நிச்சயம் பாராட்டி இருப்பார்கள். Genarated Mediciens, Emotional Crimes என்னும் பெயரில் நடக்கும் Organaised Crimes. பத்திரிகைகளிலும், மீடியாக்களிலும் திரித்து கூறப்படும் செய்திகள், புதிய மருந்துகளை பரிசோதிக்க சேரி குழந்தைகளை சோதனை எலிகளாக. பயன்படுத்தும் கொடுமை. என்று பல விசயங்களை சொல்லியிருக்கிறார். சுருங்க சொல்லின். இது ஒரு படம் அல்ல. மிகுந்த சுவாரஸ்யமான. உலக அரசியலை பற்றி இவர் சொல்லியுள்ள பாடம்.
அதுவும். தனி ஒருவன் படத்தில். சித்தார்த் அபிமன்யு என்னும் கதாபாத்திரம் மூலம். இல்லுமினாட்டிகளை பற்றி தான் மோகன் ராஜா சொல்லியிருக்கிறார். அது தான் என்னை போல் இல்லுமனாட்டிகள் பற்றி ஓரளவு அறிந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது.
தனி ஒருவனை விட. அதிகமாக சில படங்களுக்கு விளம்பரத்திர்க்கான செலவுகள் செய்த பொழுது. இந்த படத்தின் தயாரிப்பாளரான. Ags நிறுவனர் கல்பாத்தி அகோரம் அவர்களுக்கு மட்டும். இவர் தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளையும் மீறி. தனது படத்திற்க்கு அதிக விளம்பரம் செய்து விட்டார். அதனால் இனிமேல். எந்த ஒரு படத்தையுமே இவர் தயாரிக்க கூடாது. அதுவும் அவர் வாழ்நாள் முழுவதும் தயாரிக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் ஏன் அவருக்கு ரெட் கார்ட் போட வேண்டும். உங்களுக்கே புரிந்து இருக்கும். உலக அரசியல் இல்லுமினாட்டி. அடுத்து ஜெயம் ரவி, மோகன் ராஜா இருவருக்கும் பிரச்சனைகள் எந்த ரூபத்தில், விதத்தில் வரும் என்று தெரியவில்லை. தனி ஒருவன் டீமே. இனி மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும்.
சரி. இல்லுமினாட்டிகள் என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்.

Dan Browns இவர்களை பற்றி ஆங்கிலத்தில் எழுதிய Angels and Demons என்னும் நாவல். இவருடைய நாவல் தான். இல்லுமினாட்டிகள் குறித்து பலர் கண், காது, மூக்கு வெய்த்து கதை செய்வதற்கு அடிப்படையாக இருந்தது. பலர். இல்லுமினாட்டிகள் குறித்து வீடியோக்கள் நெட்டில் போட்டு இருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒன்று என்றால். Rothchild குடும்பம். இல்லுமினாட்டி குடும்பத்தில் ஒரு அங்கம். Rothchild குடும்பத்தை சேர்ந்த ஒருவர். தனது இனத்தார் செய்யும் அராஜகம் பொறுக்காமல். திருந்தியது மட்டும் அல்லாமல். அதுவரை.இல்லுமினாட்டிகள் பற்றி ரகசியமாக இருந்த அணைத்து விசயங்களையும் யூ டியூப்பில் பட்டு என்று போட்டு உடைத்து விட்டார்.
இல்லுமினாட்டிகள் என்றால் ஞானம் அடைந்தவர்கள். தவம் இருந்து வரம் வாங்கி வந்தவர்கள். இது பொதுவாக பலரால் ஒப்புகொள்ளப்பட்ட ஒரு அர்த்தம். இதை தவிர்த்து. இல்லுமினாட்டி என்னும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.
இல்லுமினாட்டிங்கிறதை இல்லுமினாட் (illuminat) அப்படின்னுகூட சொல்லுவாங்க.... இதுக்கு ஆங்கிலத்துல சரியான வார்த்தை வராது... ஆனால் அமெரிக்க பழங்குடி மொழியான நோவாவுல இதோட அர்த்தம் பிரமையில இருப்பது (ஆதீதமான கற்பனையில் இருப்பது).... இரஷ்ய மொழியிலதான் இதுக்கு சரியான அர்த்தம் இருக்குன்னு சொல்லி அதுக்கு நம்ப வைத்தல்னு அர்த்தம் இருப்பதாகவும் சொல்லுவாங்க. இதுபோலவே இது ஜப்பானிய நிஞ்சா படையில் பயன்படுத்தப்பட்ட shadow அப்படிங்கிறதோட இல்லாத ஒன்று அப்படிங்கிறதுதான் இந்த இல்லுமினாட் அப்படின்னும் சொல்லுவாங்க. பிரிட்டிஷ் இங்க்லிஷ்ல இருக்கக்கூடிய இல்லூஸன், நேச்சர் அப்படிங்கிற வார்த்தைகளோட இணைப்புதான் இந்த இல்லுமினாட் அப்படின்னும் சொல்லுவாங்க.
ஒரு நண்பர் இந்த இல்லுமினாட்டிகள் பற்றி என்னிடம் நகைச்சுவையாக ஒன்றை சொன்னார்.
எங்க ஊர்ல இல்லுமினா ரொட்டின்னு லோக்கல் பிராண்ட் பிஸ்கட்டுக்கு பேரே இருந்திச்சு. அவ்வளவு பிரபலம் இந்த பேரு. கிராம வட்டம்ங்கிறதால இல்லுமினாட்டியை இல்லுமினா ரெட்டின்னு ஆக்கி. அவன் செல்வாக்கு படைத்த ஆந்திராக்காரன் அப்படின்னெல்லாம் ஊருக்குள்ள பேச்சு ஓடுச்சு. அதுவும் எப்படின்னா, சாய்பாபா மடத்துல இருந்து, திருப்பதியிலயிருந்து அணைக்கட்டு, அரசாங்கம்னு எல்லா இடத்துலயும் இப்போ அவன் ராச்சியம்தானாம்னு கதை ஓடும். அவன் கிராமத்தான். பக்கத்துல இருக்கிற ஆந்திராவுல ஆளைபிடிச்சு கண்ணு, காது, மூக்கெல்லாம் வச்சான். நீங்க படிப்பு வாசனை உள்ளவர். அதனால நாடுவிட்டு நாடுபோய் பிரான்ஸ்ல லொகேஷன் பிடிச்சு நாட்டுக்கு சண்டை போடுற அளவுக்கு இல்லுமினாட்டியை பில்ட்-அப் பண்ணிவிட்டு நம்புறீங்க.....
இல்லுமினாட்டிங்கிறவன் ஆந்திராக்காரன்.... ஆந்திராவுல இருக்கிற எல்லாமே அவன் கட்டுப்பாட்டுலதான்னு சொன்னா உங்களுக்கு அது எவ்வளவு காமெடியா இருக்கும்... இதை அப்படியே மேலே நான் சொன்ன இல்லுமினாட் அப்படிங்குறதோட பெயர் காரணத்துல பொருத்தி படிச்சுப்பாருங்க. எங்க கிராமம் 20வருசத்துக்கு முன்னாடி நம்பின விசயத்தோட அப்டேட் கான்சப்ட்டைதான் நீங்க இப்போ நம்புறீங்க...அவ்வளவுதான்.
ஒரே சொல்லுக்கு. பல பொருள்கள் அதே மொழியிலும் உண்டு. வேறு மொழிகளிலும் உண்டு. தமிழில் பேக்கு என்றால். அது திட்டும் வார்த்தை. கன்னடத்தில் பேக்கா. என்றால் வேண்டுமா என்று பொருள். கோ என்னும் சமிஸ்கிருத சொல்லுக்கு. மன்னன், மக்கள், பசு என்று மூன்று வித அர்த்தங்கள் உண்டு. வேறு மொழிகளுக்கு ஏன் போக வேண்டும். அடி என்கிற ஒரு வார்த்தையை எடுத்து கொள்வோம். அவனை ஓங்கி அடி, திருக்குறள் இரண்டு அடி, இறைவனின் மலர் அடி. இறைவனின் அடி. [கால்] உதவுவது போல் அண்ணன், தம்பி கூட உதவ மாட்டான் என்னும் ஆன்மீக பழமொழி தான். பின்னாளில் வன்முறையை தூண்டும் பழமொழியாக திரித்து சொல்லப்பட்டது. சரி இந்த பழமொழி ஆராய்ச்சியெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இப்டி ஓராயிரம் உதாரணங்களை சொல்லலாம்.
இல்லுமினா ரெட்டி கற்ப்பனை என்பதால். இல்லுமினாட்டிகளும் கற்ப்பனை என்று ஆகி விடாது. இல்லுமினா ரெட்டி, இல்லுமினாட்டி. இரண்டு வார்த்தைகளுக்கும் பெயர் ஒற்றுமைகள் இருப்பதை மட்டும் வெய்த்து. அதோட அப்டேட் கான்சப்ட் தான் இது. என்று சொன்னால், அது சிறந்த நகைச்சுவை. முதலில் இல்லுமினாட்டிகள் பற்றி பல உண்மைகளை எழுதிய Dan Brown க்கு. கிராமத்து மக்களுடைய இல்லுமினா ரெட்டி கதை பற்றி சத்தியமாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இதுபோல் இலுமினாட்டிகள் பற்றிய உண்மைகளை இந்த உலகிற்கு சொல்லும் அனைவருமே மெத்த படித்தவர்கள்.
முதலில் இல்லுமினா ரெட்டி என்னும் கற்ப்பனை கான்செப்ட் 20, 30 ஆண்டுகளுக்கு முன் சில கிராம மக்கள். அவர்களின் அறியாமையால் நம்பிய விஷயம். ஆனால். நூரு ஆண்டுகளுக்கும் மேல். இல்லுமினாட்டிகள் பற்றி பலர் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுது Facebook, Twitter, Whatsapp, Youtube போன்ற சோசியல் மீடியாக்களின் மூலம். இல்லுமினாட்டிகள் பற்றிய பல உண்மைகள் பல லக்சம் மக்களுக்கு வேகமாக பரவி கொண்டு இருக்கிறது. உண்மைகளோடு சில பொய்களும் வேகமாக பரவுகிறது. உதாரனத்திற்க்கு.
Youtubeபில் எந்த வீடியோ வர வேண்டும், Google ளில் என்ன, என்ன விசயங்கள் வர வேண்டும், தொலைக்காட்சி, பத்திரிகைகளில் என்ன, என்ன செய்திகள் வர வேண்டும். Facebook ல என்ன, என்ன மாதிரி ஸ்டேட்டஸ் வர வேண்டும். அதாவது நான் முகனூலில் என்ன பதிவு போட வேண்டும் என்பதை கூட தீர்மானிப்பது இல்லுமினாட்டிகள் தானாம். இதை படிக்கும் பொழுது உங்களுக்கு சிரிப்பு வரலை. ஆனால்? இந்த மாதிரி சிலர் செய்யும் காமெடியை கூட உண்மை என்று நம்பவும் ஒரு கூட்டம் இருக்கு.
சரி. அப்படியென்றால். இந்த இல்லுமினாட்டிகள் என்பவர்கள் யார்? இதுவரை. நான் செய்த பதிவு உட்பட. இல் லுமினாட்டிகளை பற்றிய எந்த பதிவுகளையும், புத்தகங்களையும் படிக்காதவர்கள், இல்லுமினாட்டி வீடியோக்களை பார்க்காதவர்கள். இல்லுமினாட்டி என்னும் சொல்லையே இதுவரை கேள்வி படாதவர்கள் கூட எனது இந்த பதிவை படித்து கொண்டு இருக்கலாம். அவர்களுக்கும், அனைவருக்கும் புரியும்படி எளிமையாக சொல்வது என்றால்.
உலகில் பல மதங்கள் உண்டு. அதில் இல்லுமினாட்டி மதமும் ஒன்று. சாத்தானுக்கு என்றே சர்ச் கட்டி. சர்ச் ஆப் சாத்தான் என்னும் பெயரில் இவர்கள் நரபலியிட்டு, ரத்த படையல் போட்டு வழிபாடு செய்கிறார்கள். சர்ச் ஆப் சாத்தான் உலகின் பல பகுதிகளில் உண்டு. சென்னை உட்பட. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால். Google ளில் Church Of Sathan In Chennai என்று டைப் செய்து பாருங்கள். 

Friday, September 25, 2015

பிரமிக்கவைக்கும் பிரமிடு அற்புத அதிசயங்கள்..

Print Friendly and PDF


பிரபஞ்ச சக்தியை பல மடங்கு கிரகித்து மனிதன் உடம்பிற்குள் செலுத்தும் பிரமிக்கவைக்கும் பிரமிடு அற்புத
அதிசயங்கள்..
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
★பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை ஈர்த்து
தன்னுள் தக்க வைக்கும்அமைப்பு
பிரமிடாகும். பிரபஞ்ச சக்தியின்
வீச்சும், புவி ஈர்ப்பு விசையும் சேர்ந்த
கலவையால் பெறப்படும் ஆற்றல் தான்
பிரமிடின் ஆற்றலாகும்.
பிரமிடுகள் தங்களுக்குள் சக்தியை
வெகுவாகக் கொண்டிருக்கின்றன..
.
★பிரமிடு வடிவம் உள்ளேயும்,
வெளிப்புறத்திலும்கூட தன் ஆற்றலால்
தட்பவெப்ப நிலையிலிருந்து
பொருட்களுக்கு புத்துணர்ச்சி
தருவதை மிக விஞ்ஞானப்
பூர்வமான உணரமுடிந்தவை...

★பிரமிடுகளின் கூம்பு வடிவ
அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து
ஒரு வித மின்காந்த ஆற்றலை உள்
வாங்குகிறது.
பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை,
பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப்
பரவ வைப்பதுதான் ரகசியம் ..
.வடிவமைக்கப்பட்ட வடிவ கணித
கனவடிவமான பிரமிட், பிரபஞ்ச சக்தியை
ஒன்றுதிரட்டி சேமிக்கும்
தன்மையுடையது என்ற உண்மையை,
பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே,
அக்கால எகிப்திய அறிஞர்கள்
அறிந்திருந்தனர்.
★எனவே பிரமிடை
வடிவமைத்து, பயன்படுத்தினர்.
சாதரணமாக கெட்டுப்போகும் பழம், பால்
போன்றவை பிரமிடின் உள்ளே
கெட்டுப்போகாமல் இருக்கின்றன். காபி,
ஒயின், பழச்சாறு போன்றவற்றின் ருசி
அதிகமாகின்றது. பிளேடு, கத்தி
போன்றவற்றின் கூர்மை மழுங்காமல்
இருக்கின்றன. .பதப்படுத்தி காத்தல்
,துர்நாற்றத்தை நீக்கி, அறையின்
தூய்மையைக் காக்கின்றது பிரமிட்.
காயங்கள், கட்டிகள், சிராய்ப்புகள்
முதலியன விரைவில்
குணமடைகின்றன.
★உடல் பருமனைக்
குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகரிக்கின்றது.
ஆஸ்துமா, பல்வலி, தலைவலி,
சளித்தொந்திரவு, இரத்த அழுத்தம்,
மூட்டுவலி, இதயத்துடிப்பு,
தூக்கமின்மை போன்றவற்றை
குணப்படுத்துகின்றது.
கண் சம்பந்தப்பட்ட நோய். ஜீரணக்கோளாறு,
தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவைகளை
குணப்படுத்தி இளமையை
அளித்து.சிகிச்சை அளித்தல் பிரமிட்
சக்தி!

★பிரமிடினுள் தியானம் செய்யும்
பொழுது அகவுடல் பிரயாணம்
மிக எளிதாக நிகழ்கின்றது.
வாழ்வின்பூமியின் அடியில் எங்கும் நீர்
நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர்
வேண்டுமானால், ஒரு
கிணற்றிலிருந்தோ,
குளத்திலிருந்தோ தான் எடுக்க
வேண்டியுள்ளது. பிரமிடுகளைப்
பற்றிய பல பிரமிப்பானத் தகவல்களை
.பிரமிட் தியானத்தினால் மிகத்
தெளிவாக நினைவில் உணரமுடியும்
சூட்சுமம் நிறைந்தவை..!

★உலகின் கண்டங்களையும் கடல்களையும்
சரிபாதியாகப் பிரிக்கும் மெரிடியன்
என்ற கோட்டின் மேல்
அமைக்கப்பட்டுள்ளன.
எப்போதுமே குன்றுள்ள இடத்தைச்
சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சக்தி
இயற்கையாகக் குடிகொண்டிருக்கும்.
அதற்கு குன்றினுடைய பிரமிடு
போன்ற வடிவம் ஒரு காரணம்.
நாமக்கல் மலைக்கோட்டை , திருச்சி
மலைக்கோட்டை, திண்டுக்கல்
மலைக்கோட்டை போன்றவை சக்தி
அதிர்வுகளை தன்னக்த்தே கொண்டு
மிளிர்கின்றன..

★அனைத்து சமய வழிபாட்டு தலங்களும்
பிரமிட் போன்ற ஒரு கூம்பு வடிவமான
அமைப்பில் தான் இருக்கும். தஞ்சை
பெரிய கோவிலும் , மற்றஆலய
கோபுரங்களும் பிரபஞ்ச அதிர்வுகளை
ஈர்த்து மனத்திற்குப்புத்துணர்வு
அளிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன..!

★விழிப்புணர்விடன் நிகழும் அகவுடல்
பயணத்தில் பெறப்படும் அறிவின்
துணைகொண்டு அக்கால அறிஞர்கள்
"பெரிய பிரமிடை கட்டினார்கள். இது
நம்மை மிக உயர்ந்த நிலைக்கு
அழைத்துச் செல்லும் சாதனமாக
அமைக்கப்பட்ட கருவியாகும்
.பிரமிடின் கீழ் அல்லது பிரமிடுக்குள்
அமர்ந்து செய்யும் தியானம் 'பிரமிட்
தியான'மாகும்.
பிரமிடினுள் அமர்ந்து செய்யும்
தியானத்தில் சாந்தமான
மனநிலையிலிருந்து, மிக உன்னதமான
நன்னிலை உணர்வைப் பெறும் அனுபவத்
திறனையும் பலர் பெற்றுள்ளனர்.
★பிரமிடினுள் அமர்ந்து தியானம்
செய்யும் பொழுது, பிரமிட் இல்லாமல்
செய்யும் தியானத்தில் பெறும்
ஆற்றலைவிட மும்மடங்கு ஆற்றலைப்
பெறுகின்றோம்.
பிரமிட் தியானத்தில் தேவையற்ற
உணர்ச்சிகளும் எண்ணங்களும் நீங்கி, உடல்
முழுவதும் ஒரு ஓய்வு நிலையை
அடைந்து, மனம் ஒருநிலைப்பட்டு
உள்நோக்கி பயணம் செய்யும் உன்னதமான
உணர்வு நிலையைத் தருவதாக
உணரலாம்..

★தியானத்தின் ஆரம்ப நிலையில்
உள்ளவர்களுக்கு மிக அதிகமன
ஆற்றலுள்ள சூழ்நிலையை பிரமிட்
உருவாக்குகின்றது.
மன அழுத்தம், மனச்சோர்வு இவற்றை நீக்க,
பிரமிட் உதவுகின்றது. பிரமிடினுள்
செய்யப்பட்ட பல சோதனைகளிலிருந்து
அறிகிறோம்..
இந்த பிரமிட்டுக்குள் இருந்து தியானம்
செய்தால் மனதை
ஒருமைப்படுத்துவதை பலமடங்கு
இலகுவாககுகிறதாம்.
பிரபஞ்சத்திலுள்ள சக்திகளுடன்
தொடர்புகொள்ள வைக்கிறதால் தான்
இது சாத்தியமாகிறது.
.மனிதனின் அதிசய தக்க ஆற்றல்
,அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள்
பல நூற்றாண்டுகள் கடந்தும் ,இன்னும்
பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும்
அற்புதத்தை உணரவேண்டும்..
கோவையில் பெர்கஸ் பள்ளி வளாகத்தில்
பிரமிடு அமைப்பை அமைத்து இராம
.அரங்கநாதன் அவர்கள் அதன் சிறப்புகள்
பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார்.

★கோவை பஜனகோல மாருதி ஆலயத்தில்
பிரமிடு வடிவ தியான மண்டபம்
அமைத்து அதனுள் ஆன்மீக அதிர்வலைகள்
சிதறாமல் தியானம் செய்பவருக்கு
கிடைக்க ஏற்பாடு செதிருக்கிறார்கள்..
பஜன மாருதி ஆலய வளாகத்தில்
பிரமிடு வடிவ தியானமண்டபம்.
பிரமிடின் உட்புற தியான அமைப்பு..

★வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்
அமைந்திருக்கும் ஈஷா யோக
மையத்தில் தியானலிங்கத்தைசுற்றி
குகைகள் போன்ற அமைப்பு அமர்ந்து
சின்முத்திரை தாங்கி
குறிப்பிட்டநேரம் தியானம்
செய்பவருக்கு அதிர்வலைகளை
ஏற்படுத்துவதை கண்கூடாக
உணர்ந்திருக்கிறோம்..
★ரமண மகரிஷி திருவண்ணாமலை
பாதாள லிங்கம் சன்னதியில் அமர்ந்து
தியானித்த இடத்தையும் ,
ஞானானந்தகிரி சுவாமிகளும் ,
அவரது குருவான இரத்னானந்தகிரி
சுவாமிகளும் அமர்ந்து தியானித்த
சுரங்க அறையில் அமைதியாக அந்த
அதிர்வலைகளை உணரமுடிகிற சூழல்
நிலவுவதை அறியமுடிகிறது..
★இல்லத்தில் அமர்ந்து தியானிப்பதைவிட
ஆலயங்களிலும் ,
பிரமிட் வடிவ தியானமையங்களிலும்
,மனம் ஒருமைப்படுவதை உணரலாம்..

Tuesday, September 22, 2015

மர்ம கிமோனோ

Print Friendly and PDF

1657 மார்ச் 4 அன்று டோக்கியோ என்ற நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள மர்மத்துக்கு விடை கிடையாது.
இன்றைய டோக்கியோவின் அன்றைய பெயர் இடோ ஜப்பானின் மிகப்பெரிய வணிக நகரம். சுமார் மூன்று லட்சம் பேர் வசித்தார்கள். நெருக்கமாக அமைத்த வீடுகள் (மரத்தால் காகிதக் கூழினால் ஆனவை), குறுகலாக அமைந்த தெருக்கள், நீளமான சந்தைகள் நிறைய கோயில்கள், பாலங்கள் கொண்ட நகரம் அது.
கனத்த சாரீரமுடைய ஒருவர் தும்மினால்கூட நில அதிர்வு ஏற்படும் சபிக்கப்பட்ட தேசம்தானே ஜப்பான். 1657 மார்ச் 2 அன்று நண்பகலில் ஏதோ ஓரிடத்தில் சிறிய அளவில் நெருப்பு பரவ ஆரம்பித்தது. எங்கிருந்தோ கிளம்பி வந்த சூறாவளிக் காற்று அந்த நெருப்பின் இருப்பை பல மடங்காக்கியது. அந்தக் காலத்திலேயே இடோ நகரில் தீயணைப்பு படை இருந்தது. ஆனால் அளவில் மிகச் சிறியது. அவர்கள் நெருப்பிடம் தோற்றுப் போனார்கள். மார்ச் இரண்டாம் தேதி இன்முகத்துடன் தன் சேவையைத் தொடங்கிய தீ, மூன்றாம் தேதி முழுவதும் மும்முரமாக வேலை பார்த்துவிட்டு நான்காம் தேதி நண்பகலுக்குப் பின்னரே ஓய்வெடுக்கச் சென்றது.
புகைமூட்டத்தினுள் புதைந்திருந்த இடோ நகரில் கால்வைத்த இடமெல்லாம் கருகிய உடல்கள் அந்தப் பேரழிவு நெருப்பு பரவ காரணம் என்ன?
நில அதிர்வாகத்தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இன்றைக்கும் ஜப்பானியர்களை கேட்டால் இடுங்கிய கண்களில் பயம் பரவ, நடுங்கும் குரலுடன் அந்த சம்பவத்தை சொல்வார்கள்.
ஜப்பானிய இளம்பெண் ஒருத்தி விலையுயர்ந்த பகட்டான கிமோனோ(kimono, ஜப்பானியப் பெண்கள் அணியும் முழுநீள கவுன்) ஒன்றை வாங்கி ஆசையுடன் அணிந்தாள். ஏனோ அடுத்த சில நாள்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தாள். என்ன நோயென்று பிறர் அறியும் முன்பே செத்துப் போனாள்.
அவள் ஆசையுடன் வாங்கி வைத்திருந்த கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணுக்கு விற்கப்பட்டது. அவளும் அணித்துகொண்டு அழகு பார்த்தால் மர்ம நோயொன்று அவளை அணிந்துகொண்டு அழகு பார்த்தது. இரண்டாமவளும் இறந்து போனாள். மூன்றாவதாக கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணிடம் சென்று சேர்ந்தது. அவளுக்கும் அதே கதி. அதோ கதி.
இடே நகரமெங்கும் விஷயம் பரவியது. ' அந்த கிமோனோவில் துர்சக்தி ஏதோ புகுந்துள்ளது. அதுதான் மூன்று இளம்பெண்களின் உயிரை எடுத்துள்ளது. மதகுரு ஒருவரிடம் அந்த மர்ம கிமோனோ ஒப்படைக்கப்பட்டது. ஊரே கூடி நிற்க மதகுருவும் அந்த கவுனைப் பரப்பி வைத்து மந்திரமெல்லாம் ஓதி சடங்குகள் செய்து எரிகின்ற கட்டை ஒன்றை எடுத்து அந்த கிமோனோவுக்குக் கொள்ளி வைக்க....
அச்சுறுத்தும் ஊளைச் சத்தத்துடன் சூறாவளிக் காற்று ஒன்று எங்கிருந்தோ கிளம்பி வர.... உயரமாகக் கிளம்பிய தீ, திகுதிகுவென வேகமாகப் பரவ...
அந்த சம்பவத்தால் ஏற்பட்ட இழப்பு சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள். பல்லாயிரக்கணக்கான கால்நடைகள். முந்நூறு கோயில்கள். அறுபது பாலங்கள் அநேக கட்டடங்கள். 60-70 சதவிகித இடோ நகரமே தீக்கிரையாகியிருந்தது. இதுவரை ஜப்பான் சந்தித்த பேரழிவுகளில் இதுவும் ஒன்று.

Saturday, September 19, 2015

Heroin என்னும் ஆட்கொல்லி...

Print Friendly and PDF

உலக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட போதை பொருள் ஹெராயின் பொதுவாக திரைப்படங்கள் மற்றும் செய்திகளில் மிக கொடூரமாக சித்தரிக்க படும் இந்த போதை பொருள் அவ்வளவு கொடியதா ?

எள்ளளவும் இதில் சந்தேகம் கொள்ளவேண்டாம் இன்னும் போனால் நாம் திரைப்படங்களில் பார்த்த செய்திகளில் படித்ததை விட மிகவும் கொடிய போதை பொருளாகும் இந்த ஹெராயின் .

" களவும் கற்று மற " என்னும் பழமொழிக்கு ஏற்ப போதை பொருளாகினும் அதன் வரலாறு ,பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடு ,கொடூர தன்மை பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும் .

ஹெராயின் பயன்பாட்டாளர்கள் அதிகபட்ச்சமாக விடலை பருவத்தினர் மற்றும் வாலிபர்களே அதிகமாக பயபடுத்துகிரார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய உண்மை .
ஒரேஒரு முறை பயன் படுத்தி பார்க்கலாம் என்று ஆரம்பித்தவர்கள் அனைவரும் ஒன்று அதற்க்கு அடிமையாகி இருப்பார்கள் அல்லது உயிர்துறந்து இருப்பார்கள் .

சாம் என்னும் 15 வயது சிறுவன் தான் எப்படி Heroin க்கு அடிமையாகினேன் என்று விவரிக்கிறான் .
"முதலில் அதை பயன் படுத்திய பொழுது எனக்கு என்னை காணும் பொழுது மிகவும் கவர்ச்சியாக இருந்தது , மிகவும் துடிப்பாக செயல் பட்டேன் எதற்கும் தயக்கமின்றி நடந்துகொண்டேன் என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரின் கவனும் என்னை நோக்கி இருப்பதாக நான் உணர்ந்தேன் ..நாட்கள் செல்ல செல்ல Heroin தேவை அதிகமானது அதை உடலில் சிலுத்தி கொள்ளவிட்டால் என்னால் சாதாரண செயல் பாடுகளை கூட செய்ய முடியாத நிலைக்கு ஆளானேன் ... நண்பர்கள் பெற்றோர் அனைவரும் என்னை வெறுத்து ஒதுக்கினார்கள் , என்னுடைய சேமிப்புகள் கரைந்தன ..."
வரலாறு -
1898 ஆம் ஆண்டு Bayer pharmaceutical company என்னும் ஜெர்மானிய நிறுவனம் tuberculosis நோய்க்கு மருந்தாக உருவாக்கியதுதான் இந்த கொடூர உயிர்கொல்லி ஹெராயின்.

யாருக்கு தெரியும் நாம் இன்று பயன் படுத்தும் ஹலோபதி மருந்துகள் பலவும் இது போன்ற ஆட்கொல்லிகளாக இருக்கலாம் .

சரி இது எப்படி போதை பொருளாக மக்கள் கைக்கு வந்தது ?

1850களில் opium என்னும் போதை பொருளுக்கு பல அமெரிக்க மக்கள் அடிமையாக இருந்தனர் . இதனை தடுக்க எண்ணிய அமெரிக்க அரசு Morphine என்னும் மாற்று பொருளை பயன்படுத்தியது இதுவும் opium போல போதை தந்தாலும் இது மக்களை அதற்க்கு அடிமையாக்காது என்று கூறப்பட்டது . opium பயன்பாடு குறைத்து மக்கள் Morphineக்கு அடிமையாகினர் .

இப்பொழுது Morphine னுக்கு இதற்க்கு மாற்றாக மீண்டும் அரசு ஆடிமையாக்காத போதை பொருளாக அறிமுகம் செய்ததே இந்த Heroin .

இப்படி தான் ஒன்று பொய் ஒன்றாக மிக விரியமான உயிர்கொல்லியான போதை பொருட்கள் அரசால் மக்களிடையே பரப்பப்பட்டது . இன்றைய அளவில் Heroine பிடியில் உலக மக்கள் பலர் அடிமையாகி வாழும் நிலையில் இதில் இருந்து தப்பிக்க இப்பொழுது ஜெர்மன் கண்டுபிடிப்பான Dolophine பயன்படுத்தபோகிறது .

எதிர்காலத்தில் இதுவும் ஒரு பெரும் போதை பொருளாக மாறலாம் .
ஒரு போதை பொருளின் தாக்கத்தை போக்க மாற்றாக வேறு ஒரு சக்த்திவாய்ந்த வேறு ஒரு போதை பொருளே இன்று வரை கடைபிடிக்கபடுகிறது என்பது இதில் இருந்து தெளிவாகிறது .

அரசாங்கம் திட்டமிட்டு மக்களை மந்தமாக வைத்துகொல்லவே அரசே புதிய புதிய போதை பொருள்களை உருவாக்கி அதை மக்களிடையே பரப்பி விடுகிறது என்பது ஏற்பதற்குரிய வாதமே .

நமது டாஸ்மாக் முதல் உலகின் Class 1 போதை பொருட்கள் வரை அதன் பின்னுட்டங்களில் செயல் படும் குழுக்களுக்கு மேல் இருப்பது நம் அரசுகளே என்பது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும் .

விரியமற்ற ஒருசில போதை தரும் தாவரங்களில் இருந்து முக்கிய வேதி பொருட்களை எடுத்து அதனுடன் சில செயற்கை போதை பொருட்களை கலந்து வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு உருவாக்கபடுவதே இவை . இந்த செயல் பாடுகளின் பின்னுட்டத்தில் உலக அரசுகளின் பங்கு அதிகம் .

மக்கள் மந்தமாக இருந்தால் தான் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் பாமரன் அரசாட்சி யோசனை செய்யமாட்டன் கேள்விகள் கேட்கமாட்டான் கிளர்ச்சிகள் எழாது .
மக்களை மந்தமாக்க அரசு பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்றே இந்த போதை பொருட்கள் .

Monday, August 31, 2015

உயிரியல் கிருமி போர் ஆயுதமா? ‪#‎எய்ட்ஸ்‬

Print Friendly and PDF

#‎எய்ட்ஸ்‬
´ஜேக்கப் சிகால்´ கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர். லண்டனில் இருந்து வெளிவரும் லண்டன் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு 26.10.1986-இல் பேட்டி எடுத்த போது ஒர் சங்கதியை சொன்னார்:
"எய்ட்ஸ் கிருமி மனிதனின் செய்கையால் உருவாக்கப்பட்டது. இதை மறுக்கவும், மறைக்கவும் அமெரிக்கா முயற்சி செய்கிறது" என்றும், எய்ட்ஸ் கிருமி குறித்த நீண்ட விளக்கத்தையும் அப்பேட்டியில் கூறி இருந்தார்.அதற்கு பின் ´ஜேக்கப் சிகால்´ இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.´ஜேக்கப் சிகால்´ பேட்டியை மக்களும் சாதாரணமாக நினைத்துவிட்டனர்.
டெட் ஸ்டெரக்கர்´ என்னும் பெயருடைய அமெரிக்க நுண்ணுயிர் கிருமி ஆராய்ச்சியாளர் எய்ட்ஸ் கிருமியின் மூலம் [Origin] குறித்து ஆய்வு செய்துக் கொண்டிருந்தார். ஆய்வின் முடிவுகள் குறித்து அவருக்குள் பல புதிர்களை உருவாக்கியது. அவைக் குறித்து சில இடங்களில் பேசியும் இருக்கிறார். அதற்கு பின் மிசோரியில் ´ஸ்பிரிங்க் ஃபில்ட்´ என்ற இடத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தார். சில வாரங்கள் மட்டுமே ´டெட் ஸ்டெரக்கர்´ கொலை குறித்து பரபரப்பாக பேசப்பட்டதே தவீர, என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. கொலைக்குறித்து ஏதோ உப்புசப்பற்ற விசாரணையை பேருக்கு நடத்தி ஓரங்கட்டிவிட்டது அரசு.
lllnosis senate உறுப்பினரான ´ஈவ்ப்´ [Huff] என்பவர், எயிட்ஸ் உருவாக்கப்பட்ட கிருமி என்று தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துக் கொண்டே இருந்தார். அவருக்கும் வந்தது நேரம். எங்கேயோ ஓர் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலில் உயிர் போவதற்கு முன்பு கடும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட தடயங்கள் இருந்தன.
அப்போதும் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் எயிட்ஸ் நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு மத்தியில் இக்கொலைகள் பயத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏதோ நம்மை வைத்து ஆட்டையை ஆரம்பித்திருக்கிறது அரசு என்பதை உணர்ந்து மௌனிகளாக இருந்தனர். பத்திரிகை பேட்டி என்றாலோ, எய்ட்ஸ் கிருமி குறித்த கேள்விகளை யாராவது எழுப்பினாலோ ´ஆளை விடுங்க சாமிகளா..´ என்று ஓட்டமெடுத்தனர்.
இப்படியே சில ஆண்டுகள் ஓடியநிலையில் தான் ஹீரோவாக வந்தார் டாக்டர் ´லியோநார்டு.´1996-இல் ´Aide Ebola Nature, Accident or intentional´ என்ற புத்தகத்தில் ஆதாரங்களுடன் பல விளக்கங்களையும் எழுதி இருக்கிறார் லியோநார்டு."எய்ட்ஸ் கிருமிகளின் உருவாக்கம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களாலும், ஆப்பிரிக்க மக்களாளுமே உருவானது என்று அமெரிக்கா சொல்வது நூற்றுக்கு நூறு பொய்!" என்று அடித்துப் பேசுகிறார் லியோநார்டு.
1970-ஆம் ஆண்டிலேயே எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமெரிக்க அரசு முயற்சித்துள்ளது. இருப்பினும் 1984-ஆம் ஆண்டுகளில் அவை உண்மையான செய்தி என்று அதிகாரப்பூர்வமாக தெரிய ஆரம்பித்தது. எய்ட்ஸ் கிருமியை உருவாக்கத்தின் முக்கிய மூளையாக இருந்தவர் ´ஹென்றி கிஸ்சிங்கர்´ என்பவர் [முன்னால் Secretary of State] அமெரிக்க அரசு இத்திட்டத்திற்காக 1-மில்லியன் டாலர்களை அமெரிக்க இராணுவத்திற்கு கொடுத்திருக்கிறது. இத்திட்டத்திற்கு M.K. என்றும் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ´ஹென்றி கிஸ்சிங்கர்´க்கும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கும் உதவியாக M.David Manakar, K.Paul Kotin என இருவர் இருந்தனர். சி.அய்.ஏ [C.I.A] துணையுடன் இவர்கள் செயல்பட்டார்கள் என்றும் லியோநார்டு அந்நூலில் மிகத் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறார்.
பெருகி வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கையை குறைப்பதும், உலகில் அமைதியைக் கெடுப்பதும், அதன் மூலம் வன்முறையை வளர்த்துவிடவும், எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மருந்துக்களுக்கு தாங்கள் காப்புரிமை வைத்துக் கொண்டு ஏராளமாக சம்பாதிக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் முக்கிய பணியாக இருந்திருக்கிறது. ஏகப்பட்ட பிராடுத்தனங்களுடன் உலக மக்களை ஆட்டிப்படைக்கவும், தங்களுடைய அதிகாரப்போதைகளில் எப்போதும் முதலிடம் தங்களுக்கே என்பதிலும் அமெரிக்கா எப்போதுமே மிகத் தெளிவாக செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் கவனமாகவே இயங்குகிறது.
அமெரிக்காவின் கடன் வழங்கும் திட்டத்தை வாங்க மறுத்தாலோ அல்லது அமெரிக்கா தங்கள் நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வருவதை தடுக்க முயற்சித்தாலோ கொலைக்களமாக்கி அதளப்பாதாளத்தில் தள்ளிவிடும் ரௌடித்தனத்தை செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு அணுகுண்டுக்களும், துப்பாகிகளும் மட்டும்தானா ஆயுதம்? இருக்கவே இருக்கிறது அறிவியல் வழியில் நச்சுக் கிருமிகள்.
ஒருமுறை அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் இயக்குனரான ´பசரல்லா´ சொல்கிறார்:
"அமெரிக்க அதிகார மையங்களை விரிவுபடுத்த ஆற்றல் கொண்ட கிருமியை [Supergerm] உருவாக்குவதன் தேவை அமெரிக்க அரசுக்கு உள்ளது" என்று பகிரங்கமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.
"அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் கிருமி எய்ட்ஸா? எய்ட்ஸ் கிருமி செயற்கையாக உருவாக்கப்பட்டதா?" என்ற கேள்வியை எழுப்பிய போது...
"ஏன் இருக்கக் கூடாதா?" என்கிறார் ´பசரல்லா.
அப்போதுதான் உலகம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. அதற்குள் ஆப்பிரிக்காவில் பல மக்களுக்கு எய்ட்ஸ் கிருமி செலுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.ஆப்பிரிக்காவில் கென்ய நாட்டைச் சேர்ந்த ´வங்காரி மத்தாய்´ கென்ய நாட்டுச் சுற்றுப்புறச் சூழலியலாளரும் 2004-இல் நோபல் பரிசு பெற்ற மதிப்புக்குரியவருமான வங்காரி மத்தாய் எய்ட்சை செயற்கையாக உருவாக்கும் ஹெச்.ஐ.வீ [HIV] வைரஸ் அமெரிக்க இராணுவ உயிரியல் போர்முறை வளாகத்தில் [Fort Detrick] உருவாக்கப்பட்ட கிருமி என்று கூறியபோது உலமே அதிர்ந்தது.
கென்யாவில் ஏராளமான ´எயிட்ஸ்´ நோயாளிகள் இருக்கிறார்கள். 2006-ஆம் வருட கணக்குப்படி உலகில் மொத்தம் ´38-மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகள்´ இருக்கிறார்கள். இதில் முதல் இடத்தில் ஆப்பிரிக்காவும் [28.1- மில்லியன் மக்கள் எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள்] மூன்றாம் இடத்தில் இந்தியாவும் [3.97-மில்லியன் மக்கள் எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்கள்] இருக்கிறது. இது எப்படி பரவியது? இத்தனை மில்லியன் மக்கள் உலகத்தில் கொடுமையான மரணத்தை எதிர்கொள்ள இருக்கிறார்களே! இது எப்படி நடத்தப்பட்டது?
1969- இல் கலிபோர்னியாவின் ´டேவிட்´ என்னும் இடத்தில் சோதனைச் சாவடியில் குரங்குகளுக்கு ´எய்ட்ஸ் கிருமிகள்´ ஊசி மூலம் செலுத்தப்பட்டு ஆய்வு செய்திருக்கிறது அமெரிக்க நுண்ணுயிர் ஆய்வு நிலையம். எய்ட்ஸ் கிருமிகள் செலுத்தப்பட்ட குரங்கள் ஒரே வருடத்தில் இறந்திருக்கின்றன. 1970-இல் பூனைகளுக்கு ´எயிட்ஸ் கிருமி´ செலுத்தப்பட்டு அத்தனையும் இறந்தன. 1974-இல் சிம்பன்சி குரங்குகளுக்கு ´எயிட்ஸ் கிருமிகள்´ செலுத்தப்பட்டு அவைகளும் இறந்தன.
குரங்கு, பூனை, சிம்பனி குரங்கு என மிருகங்களுக்கு ´எயிட்ஸ் கிருமிகள்´ செலுத்தப்பட்டு சோதனை செய்த ´அமெரிக்க நுண்ணுயிர் ஆய்வு நிலையம்´ 1979-இல் ´பென்டகன்´ ஆய்வு மையத்தின் நுண்ணுயிர் ஆய்வாளரான டாக்டர் ´மேக் ஆர்தூர்´ ஆலோசனைப்படி சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட HIV [Human Immuno Deficiency Virus] அமெரிக்க ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தடுப்பூசி மூலம் பரப்பப்பட்டது. ´எய்ட்ஸ்´ உருவாக ஹெச்.ஐ.வீ [HIV]யும், அவை உருவான இடமான அமெரிக்காவின் ´மாண்டான்´ [Manhatten] பகுதி தான் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்தது.
1982-க்கு பிறகே ´எய்ட்ஸ்´ ஆப்பிரிக்காவில் வந்தது. அது எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை 1987-இல் மே மாதம் 11-ஆம் தேதியில் வெளியான லண்டன் டைம்ஸ் விவரிக்கிறது:
"உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் பல மில்லியன் மக்களுக்கு எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி ஆப்பிரிக்க மக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக ஆப்பிரிக்க மக்களிடம் எய்ட்ஸ் பரவியது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட உயிர்கள் அழித்தொழிப்பு கொடுமை."
இச்செய்தியைக் குறித்து அமெரிக்க அரசு என்ன சொல்கிறது?
"இங்கிலாந்தில் 1950-களில் ´மான்செஸ்டர்´ பகுதியில் ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தது. 1969-இல் கருப்பின சிறுவன் ஒருவனுக்கு எயிட்ஸ் இருந்தது. அப்படி இருக்க எங்கள் மீது இங்கிலாந்து அபாண்டமாக குற்றம் சுமத்துகிறது."
´எயிட்ஸ்´ பரவியதற்கு காரணம் ஒரினச்சேர்க்கையாளர்களும், ஆப்பிரிக்க மக்களின் உடல் உறவு சேர்க்கையும் தான் என்கிறது. அதற்கும் ஒருபடி மேலே சென்று ஆப்பிரிக்க மக்களில் சில பழங்குடி மக்கள் மிருகங்களிடம் செக்ஸ் வைத்திருந்தனர். அதன் மூலமாக ஏற்பட்ட தொற்றுக் கிருமிகளே என்று ஒருபோடு போட்டது. என்னடா வம்பாக இருக்கிறதே! எங்கள் நாட்டில் இப்படியொரு சங்கதி நடக்கவே இல்லையே என்கிறது இங்கிலாந்து.
´எய்ட்ஸ்´ நோயால் இறந்த பலரை பரிசோதனை செய்த மருத்துவர் ´ஆலன் கேன்ட்வெல்´ என்பவர் ´எய்ட்ஸ்´ என்பது இயற்கையாக உருவான வியாதி இல்லை. ஓரினச் சேர்க்கையாளர்களையோ, கருப்பின மக்களையோ மட்டும் அழிக்க வந்த வியாதி இல்லை. மனிதர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆயுதங்களில் கொடுமையான ஆயுதம் தான் ´எய்ட்ஸ் கிருமி´ என்கிறார்.
மக்களை அழிக்கும் எண்ணத்துடனே அமெரிக்க அரசு உருவாக்கியது தான் ´எய்ட்ஸ்´ என்று அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர்களும், நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்களுமே தங்கள் நாட்டு அரசாங்கம் செய்த மிகப் பெரிய கொடுஞ்செயலை சர்வ அலட்சியமாய் ஒதுக்கி தள்ளி விட்டு, தன் ஏகாதிபத்ய பொய் மனித நேயத்துடன் திரிவதை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனையெத்தனை மனிதர்களை ´எயிட்ஸ் கிருமிகள்´ காவு கொள்ள இருக்கிறதோ..!!!