My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Saturday, July 25, 2015

உலகை உலுக்கிய விமானகடத்தல்

Print Friendly and PDF

ஜீன் 27 1976. ஞாயிற்றுக்கிழமை. 
4 பாலஸ்தீன மற்றும் 2ஜேர்மன் புரட்சி போராளிகளால் எயார் பிரான்ஸி்ற்கு சொந்தமான எயார் பஸ் 139 எனும் விமானம் கடத்தப்பட்டது. இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து புறப்பட்டு கிறீஸின் எதென்ஸ் விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பாரிஸ் நோக்கி புறப்பட்டது. 

அதில் 256 பிரயாணிகள் சந்தோசமாக பிரயானம் செய்தார்கள் வாழ்கையின் கனவுகளை சுமந்தவாறு. கூடவே 12 விமான சிப்பந்திகளும்.எதென்ஸில் வைத்து மிக நுட்பமாகவும் சமயோசிதமாகவும் தமது துப்பாக்கிகளையும் எறிகுண்டுகளையும் விமானத்தின் உள்ளே ஏற்றிய போராளிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயேவிமானத்தை தமது பரிபூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர். 

லிபியாவின் பெங்காஸியில்எரிபொருளை நிரப்பிக் கொண்டு மீண்டும் உகண்டாவின்என்டபே விமான நிலையம் நோக்கி திசை திருப்பப்பட்டது.விமானம் என்டபேயில் தரையிறங்கியவுடன் அங்கு தயாராக இருந்த பாலஸ்தீனிய போராளிகள் விமானத்தை கடத்திக்கொண்டு வந்த போராளிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். 

பயணிகளை தரையிறக்கி என்டபே விமான நிலையத்தின் பழைய நுளைவாயில் மண்டபத்தில் தங்க வைத்தார்கள்.பாலஸ்தீன விடுதலை போராளிகளின் பணயக்கைதிகள் தொடர்பான கோரிக்கையை உகண்டாவின் ரொட்டோ உகண்டா வானொலி உலகிற்கு தெரியப்படுத்தியது. 

இஸ்ரேலிய வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்ட போராளிகள் 40 பேரையும் ஜேர்மனியில் உள்ள 5 பேரையும் கென்யாவில் உள்ள 6 பேரையும் சுவிட்ஸர்லாந்தில் உள்ள ஒருவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அது.விமானத்தில் உள்ள 100 யூதர்களையும் தம்முடனேயே விமானத்தில் பணயமாக வைத்துக் கொண்டனர். 

இஸ்ரேலிய இராணுவ அரசியல் உயர் மட்ட தலைவர்கள் தளபதி ஜெனரல் குர் தலைமையில் மீட்பு நடவடிக்கை தொடர்பாக திட்டமிட்டனர். என்டபே விமான தளத்தை கைப்பற்றி போராளிகளை கொல்வதுடன் பயணிகளை மீட்பதென திட்டம் தீர்மானிக்கப்பட்டு செயற்படுத்த அனுமதியளிக்கப் பட்டது.

அன்றைய பிரதமர் இட்ஸாக் ரொபின் தாக்குதலிற்கு தயங்கிய போதும் பாதுகாப்பு அமைச்சர் ஸிமோன் பெரஸ் தாக்குதலை தவிர வேறு வழியில்லை என்பதில் உறுதிபட நின்றார்.கொமாண்டோ தாக்குதல் ஒரு வேளை தோல்வியில் முடிந்தால் பயணிகளின் மரணம் பற்றி இஸ்ரேலிய அரசு ஒரு போதும் யோசிக்கவில்லை. 

அது சிந்தித்ததெல்லாம் யூத படையினரின் மற்றும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளது மனோ வல்லமை இதனால் பலவீனமடைந்து விடக்கூடாது என்றே.ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளின் கூட்டுப் படைத்தளபதியாக ஜெனரல் சொம்ரோன் (Brigadier General Shomron) நியமிக்கப்பட்டார். 

திட்டம் பரீட்சார்த்தமாக செயற்படுத்தி பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. அதை முப்படைத் தளபதிகள் மொசாட் இயக்குனர் பாதுகாப்பு அமைச்சர் போன்ற உயர்மட்ட அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற விவாதத்தின் பின்பே இறுதி உத்தரவு வழங்கப்பட்டது. 

சார்ம் எல் செய்க் எனும் விமான தளத்தில் இருந்து மீட்பு நடவடிக்கைக்கான விமானம்யூலை 4ம் திகதி புறப்பட்ட தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.கள அனுபவமிக்க 200 முதல் நிலை கொமாண்டோக்கள் தளத்திற்கு வரவளைக்கப்பட்டு முகாமினுள்ளே முடக்கி வைக்கப்பட்டனர். அவர்கள் இருந்த முகாமிற்கான அனைத்து போக்குவரத்து தொடர்பாடல் வசதிகளும் துண்டிக்கப்பட்டது. காரணம் தாக்குதல் இரகசியம் வெளிச்செல்லாமல் இருக்க.இஸ்ரேலிய ஸ்தானிகராலயங்கள் உலகை சார்ம் எல் செய்க் விமான நிலைய பக்கம் திசை திரும்பி விடாமல்இருக்க பாலஸ்தீன போராளிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடாத்த தயார் என பாசாங்கு காட்டி கால நேரத்தை வீரயப்படுத்திக் கொண்டிருந்தது.

இறுதி நிமிடத்திலேயே இஸ்ரேலின் ஏனைய உளவு இராஜதந்திர அமைப்புகளிற்கு கொமாண்டோ தாக்குதல் பற்றி அறிவிக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒரு புள்ளியில் நெறிப்படுத்த ஒருங்கினைக்கப்பட்டன.உகண்டா அதிபர் இடியமீன் உபயோகப்படுத்திய கறுப்புநிற கார் மற்றும் அவரிற்கு பாதுகாப்பு வழங்கும் லேன்ட் ரோவர் போன்றவற்றினதும் என்டபே விமான தளத்தினதும் புகை படங்களை மொசாட் துரிதமாக வழங்கியது.

பாரிஸ் திரும்பிய யூதரல்லாத பயணிகளிடத்தில் விமானத்தை கடத்தியவர்கள் தொடர்பான பலதரப்பட்ட வேவுத் தகவல்களை பிரான்ஸில் உள்ள யூத லொபிகள் மூலமாக துல்லியமாக சேகரிக்கப்பட்டு உடனுக்குடன் வழங்கப்பட்டது. 

அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஹேர்கூலிஸ் ரக விமானத்தில் தலைமை கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக ஜெனெரல் அடம் (General Adm. Commanding Chief Officer) களமிறக்கப்பட்டார்.விமானத்தள தாக்குதல் அணிகளிற்கு பொறுப்பாக லெப்டினன்ட் கேர்ணல் யோனி (Lt. Colenel Yoni) களமிறக்கப்பட்டார்.

யோனி தலைமையிலான தாக்குதல் அணி என்டபேயின் விக்டோரியா நதியை கடந்து கால் நடையாக விமான நிலைத்தினுல் புக வேண்டும். பயணிகள்தங்குமிடத்தையும் விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தையும் எரிபொருள் நிரப்பு மையத்தையும் துப்பாக்கி ரவைகள் தீர்க்கப்படாமல் கைப்பற்றுவதே திட்டத்தின் உயிர் நாடி.

இன்னொரு அணி கவச வாகனங்கள் சகிதம் பின் புலத் தாக்குதலை தாமதித்து தொடங்குவது. இவர்கள் உகண்டா இராணுவ சீருடை அணிந்து காணப்பட்டனர். கூடவே உகண்டா இராணவத்தின் தொடர்பாடலை சீர்குலைப்பது. ஹெர்குலிஸ் கட்டளை மையத்துடன் மட்டும் தொடரான சிக்னல்களை பேணுவது.

மூன்றாவது அணி பூனை நகர்வின் அடிப்படையில் விமான ஓடு தளங்களில் பதுங்கியிருந்து தாக்குதல் நடாத்துவதற்கான நிலைகளை எடுப்பது. குறிபார்த்து சுடும் வீரர்களை கொண்ட பரா இன்பன்டரி பிரிவினர் இதில் இருந்தனர்.இதைவிட 

நான்காவது அணி எதையும் செய்ய தயார் நிலையில் துணைப்படையாக களமிறக்கப்பட்டது. அழிவி நாச தாக்குதலிற்கான ஆயத வசதியை கொண்ட அணியாக இது வடிவமைக்கப்பட்டு இருந்தது.

விமான நிலையத்தில் தரையிறங்கும் போக்குவரத்து மற்றும் பயணிகள் விமானங்களின் நேர சூசிகை ஆராயப்பட்டு பிரிட்டிஸ் கார்கோ விமானம் தரையிறங்கும் அதே வேளை அதன் இரைச்சலோடு இரைச்சலாக விமான விளக்குகள் அணைக்கப்ட்ட நிலையில் முதலாவது ஹேர்குலிஸ் தாக்குதல் அணி விமானம் தரையிறங்க வைக்கப்பட்டது. 

இதற்கு ஆதரவாக பிரித்தானிய கார்க்கோ விமானி விமான நிலைய அதிகாரிகளை லாவகமாக ஏமாற்றி கவனத்தை திசை திருப்பினார்.விமான நிலைய இருட்டுப் பகுதியில் ஹேர்குலிஸை செலுத்தி அதனுல் இருந்த மேர்ஸிடஸ் பென்ஸ் காரில் உகண்டா அதிபர் இடி அமீ்ன் போல் வேடமிட்டவரை அமர்த்தி அதன் தொடராய் பாதுகாப்பிற்கான வாகன தொடரணி எனும் போர்வையில் கொமாண்டோ தாக்குதல் அணிகள் மெதுவாக முன் நகர்ந்தன.

விமான டேர்மினலில் இஸ்ரேலிய பயணகைதிகளை தளம் மாற்றிய போராளிகளை இலக்கு வைத்து தாக்குதல் அணிகள் முன் நகர்ந்து 50 யார் இடைவெளியில் வைத்துமுதல் மின்னல் வேக தாக்குதலை ஆரம்பித்தனர்.30 நொடிப்பொழுதுகளினுள்ளே 4 பலஸ்தீன போராளிகளை சுட்டுக் கொன்று விட்டு சடுதியாக உள்நுளைந்தனர். 

பயணக்கைதிகளை நிலத்தில் குப்புற படுக்குமாறு உத்தரவிடப்பட்டது.தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெண் போராளியாவார். மொத்தம் 13 போராளிகளும் 35 உகண்டா இராணுவத்தினரும் கெல்லப்பட்டனர்தாக்குதலை வழி நடாத்திய கேர்ணல் யோனியின் கழுத்தில் தவறுதலாக பாய்ந்த குண்டொன்று பலத்த காயம் காரணமாக பின்பு அவரது விதியை முடித்தது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3வது விமானம் தரையிறங்கி மீட்பு அணியினரை தரையிறக்கியது. 

இஸ்ரேலிய கவசவாகன தாக்குதலின் முன் உகண்டாவின் ரைபிள்கள் மொளனித்துப்போயின.பயணிகளுடன் விமானம் கிளம்பி நைரோபியில் எரிபொருளை நிறைத்துக் கொண்டு டெல் அவிவ் நோக்கி பறந்தது. இவையெல்லாமே 57 நிமிடங்களுள் நடத்தி முடிக்கப்பட்டது. 

பயணிகள் விமானம் புறப்பட்ட அடுத்த 42 நிமிடங்களுள் வந்த சுவடு தெரியாமல் ஏனைய ஹேர்குலிஸ் விமானங்களும் புறப்பட்டுச் சென்றன.உகண்டாவின் ஆகாய படையின் மிக் 21 விமானங்கள் தாக்குதல் நடாத்த முற்பட்டாலும் அவை உரிய பலனை அளிக்கவில்லை. 

விமானத்தில் இருந்த 100 பயணிகளில் 99 பேரை உயிருடன் மீட்டு உலகையே அதிசயத்துடனும் பயத்துடனும் இஸ்ரேலை பார்க்க வைத்த இராணுவ நடவடிக்கை இது.

Saturday, July 18, 2015

ஏலியன் சடலம் ....!!!!


Print Friendly and PDF

1938ஆம் ஆண்டு.... சீனாவையும் திபெத்தையும் பிரிக்கும் எல்லைப்பகுதி அது. இமயமலையில் ஒரு சிறிய பகுதியான பேயான் காரா உலா என்ற மலைச் சிகரம்.
சீ பு டீ என்ற சீன புதைபொருள் ஆராய்ச்சியாளர் தங்கள் குழுவினருடன் அந்த மலைப்பகுதியில் ஒரு மாத காலமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவரின் ஆராய்ச்சிக்கான நோக்கம், மனிதர்களின் கலாசார முறைகளை தெரிந்துகொள்வது என்பது மட்டும்தான். ஆனால், அவரின் நோக்கத்திற்கான விடைகள் அந்த மலையில் கிடைத்தபாடில்லை.

தேடுகிறார் தேடுகிறார் தேடிக்கொண்டே இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் போதும் என்று சலிப்புத் தட்டி ஊருக்கு திரும்பிவிடலாம் என்று நினைக்கும் தருவாயில், அந்த மலைச் சிகரத்தில் ஒரு பகுதியில் குகை போன்ற ஒரு அமைப்பு கண்ணுக்கு தென்பட்டது. பார்ப்பதற்கு விசித்திரமான அந்த குகையைப் பார்த்ததும், சீ பு டீக்கு அந்த குகையைச் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தொற்றிக்கொள்ள, தங்கள் குழுவினருடன் அங்கு சென்றார்.

அந்த குகை இயற்கையாக தோன்றியது அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முற்பகுதியில் மனிதர்களால் அமைக்கப்பட்ட ஒரு குகையாகவே அது தோன்றியது. குகைக்குள் சென்றது, சீ பு டீயின் குழு....

அந்த குகை ஒரு சிக்கலான ஒரு அமைப்பாகவே இருந்தது. சிறிய அளவிலான நீர்
ஊற்று, பொருட்களை பாதுகாக்கும் அறைகள், சுவர்கள் முழுவதும் சதுரம் சதுரமாக அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அறை முழுவதும் உச்சக்கட்ட வெப்பம் சூழ்ந்திருந்தது.

குழுவினர் தங்கள் பணிகளை தொடங்கினார்கள். அந்த குகைப்பகுதியை சிறிய பள்ளமாக தோண்டியவுடன் குழுவினர் முகத்தில் பயங்கர அதிர்ச்சி. ஏனெனில்
அவர்களின் கையில் சிக்கியது மனித எலும்புக்கூடு. ஒன்றல்ல இரண்டல்ல. கிட்டத்தட்ட நாற்பது எலும்புக்கூடுகள்.

அந்த எலும்புக்கூடுகள் சொல்லி வைத்தார்போல் 4 அடிக்கும் குறைவாக இருந்தது. அவற்றை தொடர்ந்து ஆய்வு ஆய்வு செய்தபோது, அந்த எலும்புக்கூடு மனிதர்கள் உடல் மிகவும் மெலிதானதாக, பலவீனமானதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், அவர்களின் தலைப் பகுதி மட்டும் உடல் பகுதியைவிட பெரிதாகவே இருந்திருக்கிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆராய்ச்சிக் குழுவினர், எலும்புக்கூடுகளுடன் கல்லினால் செதுக்கப்பட்ட வட்ட வடிவிலான 716 தட்டு போன்ற அமைப்பையும் கைப்பற்றியிருந்தார்கள். அதில் என்ன ஆச்சர்யம் என்றால், அந்த தட்டுக்கள் அனைத்தும், அளவீட்டில் ஒரு சின்ன மாறுதல் கூட இல்லாமல் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தன. தட்டின் மையப்பகுதியில் அளவெடுத்து அமைக்கப்பட்டிருந்ததுபோல் ஒரு சிறிய அளவிலான ஓட்டை ஒன்று இருந்தது.

இந்தத் தட்டை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியபோது, அது கிட்டத்தட்ட 10 ஆயிரம் அல்லது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். அந்தத் தட்டில் எகிப்து பிரமீட்டில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களின் சாயலில் ஏதோ ஒரு விசித்திரமான எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அந்த எழுத்துக்கள் என்னவென்று அவர்களால் சரியாக படிக்க முடியவில்லை.

இந்த நிலையில் 1962 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் டாக்டர். சுவாம் உம் நூயி என்ற சீன ஆராய்ச்சியாளர், தட்டில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை படித்துவிட்டு அதுகுறித்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதியிருந்த விஷயம் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது என்றே கூறலாம்.

"12 ஆயிரம் ஆண்டுகளுக்கு
முற்பகுதியில் வேற்றுக்கிரக
வாசிகளின் விண்வெளி ஓடம்
ஏதேனும் கோளாறினால், இந்த
மலைச்சிகரத்தில் அவர்கள் தரை
இறக்கியிருக்கலாம். தொடர்ந்து
அதைசரிசெய்யும் பணியில் ஈடுபட்டு
அதில் தோற்றுப்போய் இருக்கலாம்.
திரும்பிச் செல்ல வழியில்லாததால்
அவர்கள் இந்தக் குகையில் இருந்து,
காலப்போக்கில் இறந்திருக்கலாம்.
அல்லது, பார்ப்பதற்கும் தோற்றத்திலும்
மனித உருவத்திலிருந்து வித்தியாசமான
அந்த தோற்றத்தைப் பார்த்ததும், சிகரத்தில்
இருந்தபழங்குடியின மக்கள் தங்களை
பாதுகாக்கும் நோக்கில் அவர்களை
கொன்று இந்த மலைச் சிகரத்தில்
புதைத்திருக்கலாம்"

என்று அனுமானமாக அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததோடு, வேற்றுக்கிரக வாசிகள்தான் அந்த மனிதர்கள் என்று ஆணித்தரமாக குறிப்பிட்டிருந்தார் நூயி.

இந்த ஆராய்ச்சியில் முக்கியத் திருப்பமாக 1968ஆம் ஆண்டு, செயிட்சூ என்ற ரஷிய ஆராய்ச்சியாளர் அங்கு கண்டெடுக்கப்பட்ட தட்டுக்களில் ஒன்றை தங்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியில் நம்ப முடியாத ஆச்சர்யத்தை அந்த தட்டு செயிட்சூக்கு ஏற்படுத்தியது...!!!

ஏனெனில் அந்த தட்டு முற்றிலும் கிரானைட் கற்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் அதிக சக்தி வாய்ந்த கோபால்ட் மற்றும் சில வேதிப்பொருட்கள் அதில்
கலக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் இந்தத் தட்டை அவர்கள் ஒரு சக்தியை புதுப்பித்துக்கொள்ளும் பேட்டரியாக அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்...!!!

கண்டிப்பாக இது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான். இத்தகைய அறிய மின் சீராக்கிச் சாதனம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூலோக வாசிகள் பயன்படுத்தியதாக எந்த வரலாறும் குறிப்பிடவில்லை.

அப்படியானால் இந்தத் தட்டை மனிதர்களை விஞ்சிய ஒரு சக்திதான் உபயோகப்படுத்தியிருக்கும் என்று செயிட்சூவும் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில்
குறிப்பிட்டிருந்தார். அதோடு, நூயி சொன்னதுபோல் இது வேற்றுக்கிரக வாசிகளாகவும் இருக்கலாம் என்றும் தன்னுடைய ஆராய்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.

மொத்தத்தில் இந்த அகழ்வாராய்ச்சியும், அதைத் தொடர்ந்து வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஏதோ ஒரு வகையில் மனிதனை விஞ்சிய சக்தி ஒன்று இருப்பதை திட்டவட்டமாக ஊர்ஜிதம் செய்திருக்கிறது. ஆனால், அந்த சக்தி வேற்றுக்கிரக வாசிகள்தானா என்று நிரூபணம் செய்யவில்லை.

அனுமானங்களையும், சந்தேகங்களையும் ஏற்படுத்திய இந்த ஆச்சர்யங்களுக்கு சொந்தக்காரர்கள் வேற்றுக்கிரக வாசிகள்தானா?

இந்த கேள்விக்கான விடைதேடும் ஆராய்ச்சிகள் உலகத்தின் ஏதோ ஓர் பகுதியில் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது....

Wednesday, July 15, 2015

விரல் நுனியில் பல தகவல்கள்


Print Friendly and PDF

மும்பையில் உள்ள மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தமிழர் அவர்; சமீபத்தில், சென்னை வந்திருந்தார். அலுவலகத்தில் என்னை சந்தித்தார்.
விளம்பர உலகில், 'சர்வே' எடுப்பது முக்கியப் பணி... அதில் நம் நண்பர், 'எக்ஸ்பர்ட்!' விரல் நுனியில் பல தகவல்கள், புள்ளி விவரங்கள் வைத்திருப்பவர். அவரை கிண்டிவிட்டு, குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தேன்...அவர் கூறிய தகவல்களில் சில இதோ:-

* இந்திய ரயில்வேயில் தினமும், ஒரு கோடியே, 20 லட்சம் பேர்களுக்கு மேல் பயணம் செய்கின்றனர். 62 ஆயிரத்து, 915 கி.மீ., ரயில்வே லயன்கள் உள்ளன.

* வசதியாக வாழும் படித்த இந்தியர்கள், வாழ்வில் முக்கிய ஸ்டேட்டஸ் சிம்பலாக கருதுபவை... முதலாவது, கல்லூரி டிகிரி; இரண்டாவது கார்; பத்தாவது, ஜிம்கானா மற்றும் காஸ்மோபாலிடன் போன்ற பெரிய கிளப் மெம்பர்ஷிப்!

* சராசரி இந்தியன், ஒரு ஆண்டுக்கு, 92 தடவை செக்ஸ் அனுபவிக்கிறான்; உலக சராசரி-, 109 தடவை.

* தங்களது சேமிப்பை போடுவதற்கு பத்திரமான இடம் என்று இந்தியர்கள் கருதுவது: வங்கிகள்- - 62 சதவீதம், மனை, நிலம், வீடு- - 21 சதவீதம், ஷேர்கள்- - 2 சதவீதம்.

* உலகில் உள்ள, 60 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

* இந்தியர்களிடம் சென்றடைவது மற்றும் வியாபித்திருப்பது, தூர்தர்ஷனோ மற்ற, 'டிவி' சேனல்களோ அல்ல, ஆல் இந்தியா ரேடியோ!

* நூறு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களில், 98 கோடி இந்தியர்களால் ரேடியோ கேட்க முடியும்!

* இந்தியாவில், 12 கோடி ரேடியோ செட்கள் இயங்குகின்றன.

* ரேடியோ, இந்தியாவின் 90 சதவீதம் பகுதியை சென்றடைகிறது. தண்ணீரோ, 50 சதவீதம் தான் சென்று அடைகிறது.

* 'உன் குரல் நன்றாக இல்லை...' என்று ஒருவரை நிராகரித்தது ரேடியோ. அவரது குரல் அனைத்து இந்தியர்களுக்கும் நன்கு பரிச்சயம்; அவர் தான் அமிதாப்பச்சன்!நாம் பெருமைப்படக் கூடிய விஷயங்கள்...

* இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் உள்ள கோகினூர் வைரம், மெஹந்தி, சடுகுடு(கபடி) விளையாட்டு, கைரேகை, ஜோசியம், சதுரங்கம் -ஆகியவை நம்மைச் சேர்ந்தவை.

* நகரங்களில் வாழும் இந்தியர்களில் நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், 15 சதவீதம் பேர் மட்டுமே!

* நகரில் வாழும் இந்தியர்களில் சரியான எடைக்கு மேல், அதிகமான எடையுடன் இருப்பவர்கள், 65 சதவீதம்.

* நேரம் கிடைக்கும் போது தேகப்பயிற்சி செய்யும் இந்தியர்கள், 19 சதவீதம்; சீனர்கள், 34 சதவீதம்.

* உலகிற்கு பீடியை அளித்த நாடு இந்தியா!

* இந்தியா முழுவதும் பாப்புலராக, அனைவரும் அறிந்திருக்கும் விஷயம்: ராமாயணம்!

* கடந்த, 1987ல், 'லா கமிஷன்' பரிந்துரையின் படி, 10 லட்சம் பேருக்கு இருக்க வேண்டிய நீதிபதிகள், 50; தற்போது, இந்தியாவில், 10 லட்சம் பேருக்கு இருக்கும் நீதிபதிகள், 10.5. இந்திய கோர்ட்டுகளில் தேங்கியிருக்கும் வழக்குகள் இரண்டரை கோடி!

* இப்போது இருக்கும் வழக்குகளை, புது வழக்குகளை எடுத்துக் கொள்ளாமல், விசாரித்து முடித்து, தீர்ப்பு சொல்லி முடிக்க, இந்திய கோர்ட்டுகளுக்கு தேவைப்படும் காலம், 324 ஆண்டுகள்.

* இந்திய பள்ளிக்கூடங்களில் குடிதண்ணீர் வசதி இல்லாமல் இருப்பவை, 58 சதவீதம். டாய்லெட் வசதி இல்லாமல் இருக்கும் பள்ளிகள், 89 சதவீதம்.

* இந்தியாவில் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் அனுபவித்ததாக கூறும் மாணவர்கள், 25 சதவீதம்; மாணவிகள், 20 சதவீதம்.

* உத்திரப்பிரதேசத்தின் ஜனத்தொகையும், பாகிஸ்தானின் ஜனத்தொகையும் சமம்.

* இந்தியாவில் விற்பனை ஆகும் வயாக்ரா மாத்திரைகளில் உத்திரப்பிரதேசம், பீகார் என, இரு மாநிலங்களின் விற்பனை, 33 சதவீதம்.

- இப்பகுதியை அப்படியே பத்திரப் படுத்துங்கள்... பல நேரங்களில் உபயோகமாக இருக்கும்!