My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Thursday, January 29, 2015

இனி‬ களைகட்ட போகுது ஆசிய அரசியல்



பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சீனா அதன் ராணுவ வலிமையை காட்ட நடத்தப்படும் ராணுவ அணுவகுப்பில்,ரஷ்ய அதிபர் புடினை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது...

இந்திய பெருங்கடலில் இந்திய-அமெரிக்க கடற்படைகள் கூட்டாக ரோந்து செய்து கண்கானிக்க நேற்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது..
(சீனாவின் முத்துமாலை திட்டம் இந்திய பெருங்கடலை ஆக்ரமிப்பதுதான்.இதற்காகதான் இலங்கையில் துறைமுகங்களை அமைக்கிறது)

சில ஆண்டுகளுக்குள் ஐ.நாவில் இந்தியா நிரந்தர உறுப்புநாடு ஆகிவிட அமெரிக்க உதவி...

இந்தியா தலையாக இருக்கும் சார்க் நாடுகளில் சீனாவும் உள்ளே புகுந்து,இந்தியாவை தட்ட இலங்கை,பாகிஸ்தான் வாயிலாக சீனாவையும் சார்க் நாடுகளில் சேர்க்கசொல்லி நிர்பந்திக்க சீனா வைக்கிறது.

இந்தியாவை மிரட்ட பாகிஸ்தானை பயன்படுத்துகிறது சீனா...

பாகிஸ்தானை மிரட்ட ஆப்கானிஸ்தானை பயன்படுத்துகிறது இந்தியா..

Wednesday, January 28, 2015

இந்தியாவின் தீர்க்கப்படாத மர்மங்கள்...!



நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

எப்போதுமே மிதவாதத்துக்கும் தீவிரவாதத்துக்குமான ஆதரவில் இளைய சமுதாயம் இரண்டாவதில்தான் அதீத ஆர்வமும் ஆதரவும் கொண்டிருக்கும். நேதாஜி என்ற பேரைக்கேட்டாலே இன்றளவும் இளைஞர் கூட்டம் எழுச்சியடைவதற்கான வரலாறு மிகப்பெரியது. பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்தபோது காந்தி ஒரு பக்கம் அஹிம்சைப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார். அதேப்போல நாடு முழுவதும் பலவிதமான குழுக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரவாதப்போராட்டத்தை இராணுவப்போராட்டமாக மாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான். இன்றைய இந்திய இராணுவத்திற்கு அடித்தளமிட்டவரும் இவர்தான். (அவருடைய வரலாற்றைப்பற்றி எழுதுவதனால் அதற்கு தனியே ஒரு பதிவு தேவைப்படும் என்பதால் இந்தப்பதிவின் தலைப்பிற்கான சமாச்சாரத்தை பற்றி மட்டும் இதில் பார்க்கலாம்.

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்கவேண்டிய நேதாஜி... உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டதுதான் இன்று வரையிலும் சுதந்திர இந்தியாவின் தீராத மர்மங்களில் நேதாஜிக்கு முதலிடம் வழங்கியிருக்கிறது.

1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு இறக்கவில்லை. உண்மையில் அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்திருக்கின்றன. 1945ம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருந்த போரில் ஜப்பான் சரணடையும் முடிவை எடுத்த மூன்றாவது நாளில் நேதாஜி விமானவிபத்தில் இறந்ததாக வெளியிடப்பட்ட செய்தியே, ஆங்கிலோ-அமெரிக்க படைகளிடம் போர்க்கைதியாக சிக்காமலிருக்க நேதாஜியால் நடத்தப்பட்ட நாடகம்தான் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. நேதாஜி இறந்ததாக தகவல் வெளியான சமயத்தில் உண்மையில் அவர் ஜப்பானின் டோக்யோ நகரத்தின் வழியாக சோவியத் யூனியனுக்கு சென்று விட்டதாக தகவல் உண்டு.

இன்று வரையிலும் நேதாஜி விஷயத்தில் இந்திய மக்களுக்கு தெரியாமல் போன மர்மமாய் நீடிப்பதில் கீழ்க்காணும் விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை... 

1)   தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து நடந்ததாக எந்தவித ரெக்கார்டுகளும் இல்லை என்று மறுத்திருப்பது இந்திய அரசாங்கத்தால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2)   பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று முடிவெடுத்ததாக பதியப்பட்டிருக்கிறது. இது நடந்தது அக்டோபர் 1945ல். அப்படியென்றால் ஆகஸ்ட் 1945ல் போஸ் இறந்ததாகக் கூறப்பட்டது பொய்தானா?... 

3)   CIA எனப்படும் சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி 1950 வரையிலும் நேதாஜிக்கான தேடுதல் வேட்டையை தொடர்ந்திருக்கிறது. உண்மையிலேயே 1945லேயே நேதாஜி இறந்திருந்தால் 1950 வரையிலும் அவரைத்தேடியிருக்க வேண்டிய அவசியமென்ன?...

4)   1946ல் கம்யூனிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்த கேலாச்சர் என்பவர் ஒரு பொதுமேடையிலேயே அப்போதைய இரீஷ் பிரசிடெண்ட் டி’வலேராவை டப்ளின் நகரில் நேதாஜியை வரவேற்றதாக விமர்சித்திருக்கிறார். டி’வலேராவும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காதது கவனித்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம். அத்தோடு மட்டுமில்லாமல் 1946க்கு பிறகு இந்தியாவிற்கு வந்திருந்த டி’வலேரா பத்திரிக்கையாளர்களிடம் ‘’நான் இங்கே போஸை சந்திப்பேன் என்று எதிர்பார்த்து வந்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்! 

5)   பிரிட்டிஷ் இண்டெலிஜென்சின் ஒரு ரிப்போர்ட்டில் நேதாஜி எங்கிருக்கிறார் என்பது நேருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான் அவர் வெளியுறவுத்துறையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விஜயலெட்சுமி பண்டிட்டை ரஷ்யாவுக்கான இந்தியத்தூதராக நியமித்திருக்கிறார் என்று குறிப்பெழுதப்பட்டிருப்பதாக ஒரு தகவலும் உண்டு.

6)   ரஷ்யன் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் புரட்சியாளர் அபானி முகர்ஜீ என்பவரின் மகன் கோகா என்பவரை இந்தியத்தூதர் டாக்டர்.சத்யநாராயணா சின்ஹா சந்தித்தபோது, அவரிடத்தில் கோகா தனது தந்தையும் நேதாஜியும் சைபீரியாவில் சிறைக்கைதிகளாக பக்கத்து பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கே நேதாஜிக்கு சிறை ரெக்கார்டுகளில் ‘கிளாசி மாலங்’ என்று பெயரிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதைவிட அதிர்ச்சிகரத்தகவல் என்னவென்றால் சிறையிலிருந்து நேதாஜி பலமுறை நேருவுக்கு தான் இந்தியாவுக்கு திரும்ப விரும்புவதாகவும், தன்னை மீட்பதற்கான ஏற்பாடுகளைச்செய்யுமாறும் கடிதம் எழுதியிருக்கிறார் என்பதுதான்!!! 

7)   1946ல்தான், அதாவது நேதாஜி இறந்ததாகக் கூறப்பட்ட ஒரு வருடம் கழித்துதான் இந்திய அரசாங்கம் நேதாஜி இறந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்திருக்கிறது. 

8)   நேதாஜியின் இறப்பு மர்மம் குறித்த விசாரணைக்கு இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி முகர்ஜி கமிஷனில் நிசாமுதீன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட விமானத்தில் கேப்டன் ஏக்ரம், லால்சிங் மற்றும் சில பெங்காளி வீரர்களும், மூன்று ஜப்பானியர்களும் மட்டுமே அதில் பயணித்ததாகவும், நேதாஜி அதிலில்லை என்றும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

9)   விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட தேதியிலும், அதற்கு முன்னர் மற்றும் பின்னர் இருக்கும் பத்து நாட்களிலும் தாய்பேயில் அப்படி எந்தவொரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று கூறப்பட்டிருந்த நீதிபதி முகர்ஜி கமிஷனின் அறிக்கையை இந்திய அரசாங்கம் ஏன் நிராகரித்தது?...

10) நேதாஜி விமான விபத்தில் இறந்ததாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இதுவரையிலும் அந்த விமான விபத்து பற்றிய புகைப்படங்களோ... இல்லை… அந்த விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களைப்பற்றிய தகவல்களோ ஏனில்லை?... 

இதைப்போன்ற விடையில்லா கேள்விகள் போலவே நேதாஜியின் விஷயத்தில் நீடித்திருக்கும் மர்மத்திற்கு காரணம் நேருவே என்றும் ஒரு தகவல் உண்டு. சுதந்திரத்திற்கு பிறகான ஆட்சிக்கு குறிவைத்த நேருவுக்கு அக்காலத்தில் மிகப்பெரிய தலைவலியாய் தெரிந்தவர் அமோக மக்கள் ஆதரவு கொண்ட நேதாஜி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நேதாஜியை நேருவே கடைசிவரை ரஷ்யாவிலேயே வீட்டுச்சிறையில் வைத்திருந்ததாகவும் சில தகவல்கள் உலவுகின்றன. நேதாஜி இந்தியாவுக்குள் 1985 வரையிலும் ‘’பகவான்ஜி’’ என்ற பெயரில் உத்திரப்பிரதேசத்தில் ஒரு ஆன்மீகவாதியாய் வாழ்ந்ததாகவும் தகவலுண்டு.

எது எப்படியோ?... நேதாஜியின் இறப்பு இன்று வரையிலும் சர்ச்சைகள் விலகாத இந்தியாவின் டாப் மர்மமாகவே நீடித்திருக்கிறது. 

Friday, January 23, 2015

கிராமத்திற்கு என்ன நடந்தது?




அஞ்ஜிகுனி, கனடாவில் ஒதுக்குப்புறமாக மலையைச்சார்ந்து அமைந்திருந்த கிராமம். சுமார் 2000 மக்கள் சாதாரணமாக வாந்துவந்தார்கள். ஏரியில் மீன் பிடித்து விற்பதை முக்கிய தொழிலாக கொண்டிருந்தார்கள் அவர்கள். 

1930 ஆம் ஆண்டு கார்த்திகை ( நவம்பர்) மாதம் ஒரு நாள்… பொறிவைத்து விலங்குகளை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட ஜோ லபல் என்பவர் அந்த ஊருக்கு சென்றார். அது முதல் தடவையல்ல… பல தடவைகள் அவர் அந்த ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் அன்று சற்று வித்தியாசமாக இருந்தது ஊர். ஊருக்குள் கால் வைத்தது முதல் யாரையும் அவர் காணவில்லை. ஊரின் மையப்பகுதிக்கு சென்றும் அவர் கண்களில் யாரும் அகப்படவில்லை. வீட்டுக்கதவுகள் திறந்து கிடந்தன. வீட்டிற்குள் சென்று பார்த்தால் சமைத்த உணவுகள் அப்படியே கிடந்தன. பாதி தைத்த உடைகளில் ஊசி கூட வெளியில் எடுக்கப்படாமல் இருந்தது. இறுதியாக இரு வாரங்களுக்கு முதல் கூட அங்கே வந்திருந்தார் ஜோ. கிராமத்தவர்கள் அனைவருமே கலகலப்பானவர்கள். சுமூகமான சமூகம்....

ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த ஜோ, பகுதி காவலர்களுக்கு அறிவித்தார். அவர்கள் தேடியும் அந்த கிராமத்திற்கு என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் எங்கே? போன்ற கேள்விகள் தேங்கித்தான் நின்றன...

சுற்று முற்றும் தேடி விசாரித்ததில்…

ஊரின் மறு முனையில் “வண்டில்களை இழுத்து செல்லும்” நாய்கள் இறந்து கிடந்தன. ( 7 நாய்கள் என்று சில தகவல்களும் சிலது 3 எனவும் மாறுபட்டு இணையத்தில் உள்ளது.) அந்த நாய்கள் எவ்வாறு இறந்தன என்பதை அப்போது பெரிதாக யாரும் சோதனையிடவில்லை.

அருகில் உள்ள ஊரைச்சேர்ந்த பலர் அந்த ஊரின் மலைப்பகுதியில் வெளிச்சத்தத்தை பார்த்ததாக கூறினார்கள்.

கூறப்படும் காரணங்கள் :...

வேறு இடம் பெயர்ந்திருப்பார்கள் :
சகல வசதிகளும் இருக்கும் அந்த மக்கள் பொருட்களை அப்படி அப்படியே விட்டு விட்டு கிளம்பிப்போக வாய்ப்பில்லை. அப்படி போய் இருந்தாலும் எங்கே?...

படையெடுப்பு :
ஏதோ ஒரு ஊரைச்சேர்ந்தவர்கள் படையெடுத்து சிறைப்பிடித்திருப்பார்கள்.ஊரில் படையெடுப்பு நடந்தமைக்கான எந்த அறிகுறிகளும் இருந்ததில்லை. படையெடுப்பு அமைதியாக நடைபெற வாய்ப்பும் இல்லை.

வெம்பயர், காட்டேர்களின் தாக்குதல் :
குறிப்பிட்ட காலத்தில் வெம்பயர்கள் தொடர்பான அதீத நம்பிக்களைகள் இருந்தமையால் இந்த கருத்து வெளியிடப்பட்டிருக்கலாம். மனித இறப்புக்களுக்கான சான்றுகளோ இரத்த அடையாளங்களோ கிராமத்தில் கண்டு பிடிக்கப்படவில்லை....

ஏலியன்ஸ் :
பக்கத்து ஊரைச்சேர்ந்தவர்கள் மலையில் வெளிச்சத்தை பார்த்ததாக கூறியதன் படி, ஏலியன்ஸ் ஒரே தடவையில் அந்த ஊர் மக்களை/ உயிரினங்களை மட்டும் கடத்தி இருக்க கூடும்.

பரிமாணம் : அந்த ஊர் மக்கள் பரிமாண மாற்றத்தில் மறைந்திருக்கலாம்! இதுவும் சற்று குழப்பமானது. விரிவாக பின்னர் பார்க்கலாம்....

இவ்வாறு பல கருத்துக்கள் கூறப்பட்டாலும், இந்த கிராம மக்கள் காணாமல் போய் 83 வருடங்களைத்தாண்டியும் இன்னமும் இதற்கான விடையை கனேடிய பொலிஸாரும் ஆய்வாளர்களும் கண்டறிய முடியாதுள்ளனர்!...

Tuesday, January 20, 2015

மூட நம்பிக்கைகளின் மலைத்தொடர் – அமெரிக்காவில் ஒரு மர்ம தேசம்!




உலகில் இனங்காணப்படாத பல மர்ம சம்பவங்கள் இருக்கின்றன, அதே போல் இன்னும் பல சம்பவங்கள் மூட நம்பிக்கள் முலமாக ” நடப்பதாக ” கருதப்படும் மாயைகளாக உள்ளன!

இவை இரண்டிற்கும் பொதுவாக இன்றுவரை தனது மர்மத்தையும் மூட நம்பிக்கையையும் தக்கவைத்துக்கொண்டிருக்கும்; “மூட நம்பிக்கைகளின் மலைத்தொடர்” என பொருள் பட அழைக்கப்படும் “Superstition Mountains” மலைத்தொடர் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

அமெரிக்காவின், அரிசோனா பகுதியில் இருக்கும் ஒரு மலைத்தொடர்தான் இது. அதை சுற்றி நிகழும் சம்பவங்களையும் நம்பிக்கைகளையும் பார்ப்போம்.

1800 ஆம் ஆண்டளவில் Jacob Waltz எனும் மனிதர் இந்த மலைத்தொடரை அடையாளங்கண்டார், அங்கு மிகப்பெரிய ஒரு தங்கப்புதையல் இருந்ததால் அவர் அதுபற்றி யாருக்கும் தெரிவிக்கவில்லை. வயது ஆகி இறுதியில் நோயின் தாக்கத்தால் மரணப்படுக்கையில் இருந்த அவர், தனக்கு நெருங்கிய ஒருவரிடம் மட்டும் அந்த தங்கப்புதையல் பற்றி கூறினார். அவர் அதை சிலரிடம் கூறினார்… பின்னர், அந்த சிலரில் ஒருவரால் அந்த நபர் கொல்லப்பட்டார். இதனால், அந்த புதையல் எங்கே இருக்கிறது என்ற சரியான இடம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் புதையல் இருக்கும் கதை அதை சுற்றி இருந்த ஏரியாவிற்கு பரவியது. பலர் புதையலை தேடிச்சென்றார்கள். சென்றவர்களில் பாதிக்கு மேல் திரும்பிவரவில்லை. மர்மமான முறையில் இறந்து போனார்கள்! வந்தவர்களும் தங்கத்தை காணவில்லை, முன்னையவர்களின் எலும்புக்கூடுகளை ஆங்காங்கே கண்டு, அதை சொல்லி திகிலை உண்டுபண்ணினார்கள்!

நம்பிக்கை 2…

தப்பி வந்தவர்கள் பலர், அங்கே “Tuar-Tums” என அடையாளப்படுத்தப்படும் சிறிய மனிதர்கள் வாழ்வதாகவும். அவர்களே அந்த புதையலை ஆழ்வதாகவும் கூறினார்கள்.
அதனால், அங்கு குள்ள மனிதர்கள் வாழ்வதாகவும், ஏலியன்ஸ் வந்து செல்லும் இடம் எனவும் கதைகள் பரவின.

நம்பிக்கை 3…

அந்த மலைத்தொடர்களின் இடுக்கில் தான், நரகத்திற்கான நுழைவாசல் இருக்கிறது. என அந்த வளாக மத குருக்கள் ஒரு கதையை கட்டவிழ்துவிட்டார்கள்…

நம்பிக்கைகள் இவ்வாறிருக்க, அவர்கள் எப்படி இறந்திருப்பார்கள்?
என ஆராய்ந்தால்…

குறிப்பிட்ட மலைத்தொடர் இருக்கும் பிரதேசம் சுமார் 115-125F (ஃப்ரனைட்) வரை வெப்பம் வீசும் ஒரு பிரதேசமாகும். அதாவது பாலைவனம்! நீர் நிலைகள் இல்லை. அவ்வப்போது மழை பெய்தாலும் மழை பெய்த குறுகிய நேரத்தில் நீர் வற்றிவிடும்! அத்தோடு மலைத்தொடர் பல ஏற்ற இறக்கங்களைக்கொண்டது என்பதுடன், பல குறுகிய குகைகளையும் கொண்டது.
இவற்றைக்கொண்டு பார்க்கும் போது, குறுகிய மலைஇடுக்குகளில் மாட்டுப்பட்டும், நீர் இன்றியும் பலர் இறந்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.

எனினும், இன்றுவரை பலர் அந்த தங்கப்புதையலை குறிவைத்து அந்த பகுதியில் தேடல் வேட்டை நடத்தத்தான் செய்கிறார்கள். அதில் பலர் இன்னமும் திரும்பவில்லை!

Saturday, January 17, 2015

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்,




HISTORY(Biography)of MG.RAMACHANDRAN

பெயர்.................................:மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்,
நாம் அறிந்த பெயர்......:(இராமச்சந்திரன்)MGR.
பிறப்பு.................................: ஜனவரி 17, 1917
பிறந்த இடம்..................:நாவலப்பிட்டி(இலங்கை)   
இறப்பு................................:டிசம்பர் 24, 1987,
மனைவிகள் .................:3,தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி,
பிள்ளைகள்....................:கிடையாது,
 தந்தை பெயர்.........................................................:திரு. கோபாலமேணன்
தாயார் பெயர்........................................................ திருமதி. சத்தியபாமா
சகோதரர் பெயர்................................................... திரு.எம்.ஜி.சக்கரபாணி
பள்ளியின் பெயர்.................................................கும்பகோணம் ஆணையடி பள்ளி.
படிப்பு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 3-ம் வகுப்பு
கலை அனுபவம்...................................................7 வயது முதல்
நாடக அனுபவம்...................................................1924 முதல் 1963 வரை - 40 வருடங்கள்
சென்னை வருகை................................................சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி
சென்னையில் முதலில் வசித்த இடம்..........பங்காரம்மாள் வீதி
திரையுலகில் அறிமுகம் செய்தவர்................திரு.கந்தசாமி முதலியார்
திரை உலக அனுபவம் ......................................1934 முதல் 1977 வரை - 44 வருடங்கள்.
நடித்து வெளிவந்த படங்கள் .............................137 படங்கள்
கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள்.........115 படங்கள்
முதல் படம் வெளியான தேதி.........................28/03/1936 - சதிலீலாவதி
முதல் வேடம்........................................................காவல் துறை அதிகாரி - சதிலீலாவதி
முதல் கதாநாயகன் வேடம்...............................ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்
100 வது படம்..........................................................ஒளி விளக்கு - 20/09/1968
கடைசி படம் வெளியான தேதி .....................14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மறைவுக்கு பின் வெளியான படம்................அவசர போலீஸ் 100
அரசியல் அனுபவம் ...........................................1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள்
முதன் முதலாக இருந்த இயக்கம் ................இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்
தி.மு..வில் இருந்த ஆண்டுகள் ....................1950 முதல் 1972 வரை
.தி.மு.. துவங்கிய ஆண்டு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,1972
தமிழக முதல்வரானது,.......................................1977 முதல் 1987 வரை - 11 வருடங்கள்

சென்ற வெளிநாடுகள்

மலேஷியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர்,ஹாங்காங், பாங்காக், தாய்லாந்து, ஜப்பான்,பிரான்ஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, லண்டன்,ரஷ்யா, அமெரிக்கா, மொரீஷியஸ்.

எம்.ஜி.ஆர் பற்றி சில சுவையான தகவல்கள்....

எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936).கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).


பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !


எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !


எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின்அச்சம் என்பது மடமையடாஅஞ்சாமை திராவிட உடைமையடாபாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு .கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !


சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன்படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில்ஹீக்காபிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !


முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டுமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்படத்தை முடித்துக் கொடுத்தார் !


•‘கர்ணன்படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !


நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும்,ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார் !


எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !


எம்.ஜி.ஆர்கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம்மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !


காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்உரிமைக் குரல்காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !


நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள்.


சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு. கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !


எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !


தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 – ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்….‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும் !’


•‘பொன்னியின் செல்வன்கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !


அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்துநான் எம்.ஜி.ராமச்சந்திரன்சினிமா நடிகர்என்று அறிமுகம் செய்துகொள்வார்!


ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !


ரொம்பவும் நெருக்கமானவர்களைஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !


அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !


எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !


முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போலஎன்பாராம் !


அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்.


•‘நான் ஏன் பிறந்தேன்?’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கியஎனது வாழ்க்கை பாதையிலேதொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !


வாழ்க்கைக் குறிப்பு,,,,,,,,
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேன்னுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடை தந்தையின் மறைக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால் இவர்


நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்பட்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையாலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவர். இவர் தங்கமணியை மணந்தார். இவர் நோய்க்காரணமாக இறந்தார. அதன்பிறகு சதானந்தவதியை மணந்தார். இவரும் நோய்க்காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்து கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது



திரைப்பட வாழ்க்கை,,
  •  1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்



  • எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார். 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் காலை 10:30 மணி வாக்கில் 12G பேருந்தில் பயணித்த போது,மயிலாப்பூர் லஸ் கார்னர் நிறுத்தத்தில் கடைகள் எல்லாம் அவசரமாக மூடும் காட்சி.பயணிகள் வியந்து பார்த்துக்கொண்டிருந்த போது,சக பயணி "என்ன எம்.ஜி.யார். பூட்டாரா" என்று வியந்தார்.அடுத்த நொடி அந்த பயணியின் அருகில் அமர்திருந்தவர் அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தார்.அது எம்.ஜி.யார் உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் இருந்த நேரம்.இந்திரா காந்தி கொல்லப்பட்ட செய்தி பின்னர் தெரிந்தது.அதாவது எம்.ஜி.யார் இறப்பு என்பதைக் கூட கேட்க தயாராக இல்லாத அளவுக்கு அவர் மேல் அன்பு வைத்திருந்த மக்கள்.

  • இலங்கையில் பிறந்து கும்பகோணத்தை வந்தடைந்து,சினிமா உலகில் 1936ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார்.ஆனால் 1947ம் ஆண்டில் "ராஜகுமாரி" படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். அதன் பிறகு முப்பது வருடத்திற்கு திரை உலகின் முடிசூட மன்னராக விளங்கினார்.இவருக்கு இசையில் மிகுந்த நாட்டம் இருந்தது.இவர் திரைப்படப் பாடல்கள் பலவற்றை இன்றும் கேட்டு மகிழ முடியும்.


  • இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டேஒன்றுஅவரது உயர்ந்த கருணை உள்ளம்மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!


  • எம்.ஜி.ஆர்நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்


  • தமிழக முதல்வராக இருந்த போது ஒரு முறை மதுரையில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் இசை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்தவர், மூன்று மணி நேரமும் அமர்ந்து ரசித்துக் கேட்டுச் சென்றதை உதாரணமாகக் கொள்ளலாம்.

  • மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு உதவும் குணம் இவரிடம் இயற்கையாகவே இருந்தது.இயற்கை பேரழிவுகள் மற்றும் தனி மனித துன்பங்களுக்கு உதவுவது என்பதை பல முறைகள் செய்திருக்கிறார்.ராமதாசும் அவர் மகனும் இன்று ஒவ்வொரு நடிகராக சிகரட் மற்றும் குடிக்கும் காட்சிகளை படங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எம்.ஜி.யார் என்றோ கடை பிடித்தார் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சிரியமாக இருக்கிறது.எம்.ஆர்.ராதாவால் சுடப் பட்ட போது அவருடைய போராடும் குணமும்,தன்னம்பிக்கையும் வெளிப் பட்டது.

  • ஏழைப் பங்காளனாக சினிமாவில் அவர் வளர்த்து வந்த உருவம் பிற்காலத்தில் அரசியலில் அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.அண்ணாதுரையும் எம்.ஜி.யாரை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.1967ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நடந்த எல்லா பொதுத் தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார் எம்.ஜி.யார்.எம்.ஜி.யாரின் அரசியல் மற்றும் ஆட்சி பல விதமான விமர்சனத்திற்கு உள்ளானது. அவருடைய அரசியல் எந்த குறிப்பிட்ட கொள்கையோ,நீண்ட கால திட்டத்தை அடிப்படையாக கொண்டதாகவோ இருக்கவில்லை.


  • கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான்.அதை இறுதி வரை அவரால் செய்ய முடிந்ததுதான் ஆச்சிரியம்.தி.மு.கவில் இருந்து வெளியேற்றிய உடன் கருணாநிதியைப் பற்றி கடுமையானப் பிரசாரத்தை மேற்கொண்டார்.1972ம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டு வரை இடை விடாமல் மக்களின் மத்தியில்,குறிப்பாக கிராம மக்களிடையே கருணாநிதி மேல் ஒரு தீராத வெறுப்பை ஏற்படுத்தினார்.அதனால் ஏழு ஆண்டு தண்டனை போதாதா,புறங்கையைத் தானே நக்கினோம் என்றெல்லாம் மன்றாடியும் கருணாநிதியால் எம்.ஜி.யார் இருந்த வரை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது.


  • அண்ணாயிசம் என்ற சித்தாந்தத்தை கடைபிடிக்கப் போவதாக அறிவித்தார்.ஆனால் அதை சரியாக வரைமுறை செய்யவில்லை.பல விளக்கங்களைக் கூறினார்.ஆனால் எதுவும் தெளிவாக இல்லை.
  • உதாரணமாக ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தில் இதைப் பற்றி தான் கூறியதாகச் சொன்னார்.அண்ணாயிசம் என்பது பலராலும் கேலிக்குரிய பொருளானாலும்,அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அதைப் பற்றிய பெரிய கவலை இருந்ததாகத் தெரியவில்லை.பெரியாரின் முக்கியமான நாத்திகக் கொள்கையில் இவருக்கு பெரிய அளவு ஈடுபாடு இருந்ததாக தெரியவில்லை.தாய் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்தது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.ஆனால் பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மிக சுலபமாக செயல் படுத்தினார். பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 69% இட ஓதுக்கீடு அமல் படுத்தியது இவர் ஆட்சியின் ஒரு பெரிய மைல் கல்லாகக் கருதப் படுகிறது.


  • அண்ணா பல்கலைக் கழகம் அமைத்து அதற்கு ஒரு தனி கவனத்தை பெற்றுக் கொடுத்தார்.இன்று அது மிகவும் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக மாறி இருப்பது எம்.ஜி.யாருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.தமிழ் பல்கலைக் கழகமும், பெண்களுக்கான தனி பல்கலைக் கழகமும் அமைத்தது அவர் ஆட்சியின் நற்செயலாகக் கருதப் படுகிறது.காமராஜால் அறிமுகப் படுத்தப் பட்ட மதிய உணவு திட்டத்தை விரிவாக்கியும்,சீர்த்திருத்தியும் அமல் படுத்தியது பெரிய வரவேற்பை பெற்றது.அதை கருணாநிதி கூட ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.


  • அவர் ஆட்சியின் மிகச் சிறப்பான பகுதியாக கருத வேண்டுமென்றால்,பொது விநியோக முறையை நிர்வகித்த விதம் தான்.ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் அத்தியாவசப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.அதனால் கீழ் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட வாழ்கையை பிரச்சனை இல்லாமல் நடத்த முடிந்தது.இலங்கையில் உள்ள தமிழர்கள் இன்று கடுமையான துன்பத்திற்கு உள்ளாகும் நிலையில், எம்.ஜி.யார் அவர் ஆட்சி காலத்தில் இலங்கையில் தமிழர்களின் மீது நடந்த கூட்டுக் கொலையின் போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.



  • புள்ளியியல் படி எம்.ஜி.யார் ஆட்சியில் அவருக்கு எப்போதும் ஆதரவளித்து வந்த கீழ் தர மக்கள் மிகுந்த நன்மை அடைந்ததாகக் கூற முடியாது.பெரிய தொலை நோக்குப் பார்வை இருந்ததாகக் கூற முடியாது.ஒரு வித உள்ளுணர்வின் அடிப்படையில் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.முதல் 2 1/2 ஆண்டுகள் ஊழல் இல்லாத மது விலக்கை கடைபிடித்த ஆட்சி கொடுத்தாலும்,1980௦ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன்,பெரிய அளவில் ஊழலும், மதுவிலக்கு நீக்கத்தால் மது தயாரித்து விற்ற நிறுவனங்களும்,அதன் அதிபர்களும் அடைந்த லாபமும் பெருத்த ஏமாற்றம் தான்.

  • கருணாநிதியின் ஊழலை எதிர்த்து ஆரம்பித்த கட்சி,ஜெயலலிதாவின் வரலாறு காணாத ஊழலால் சரித்திரம் படைத்தது. இன்னும் இரட்டை இலை சின்னத்திற்கு இருக்கும் ஆதரவு இன்றும் எம்.ஜி.யாருக்கு மக்களிடையே இருக்கும் ஈர்ப்பு சக்தி தான் காரணம்.