My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Wednesday, January 20, 2016

ஏரியா 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்


Print Friendly and PDF


ஏரியா 51 என்பது வேற்றுகிரகவாசிகளை பரிசோதிக்கும் இடமாக உள்ளது. இது எப்போது ஒரு ரகசிய யாடமாகவே இருக்கிறது. "Independence Day" என்ற ஆங்கில படத்தில் கூட அந்த இடம் தெளிவாக காட்டி இருப்பார்கள். மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நெவேடாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இராணுவத்தளம் தான் இந்த ஏரியா 51. நெவேடாவின் மத்தியிலும் குரூம் ஏரியின்(Groom Lake) தென் கரைப் பகுதியிலும் அமைந்துள்ள இவ்விடம் பெரிய இரகசிய இராணுவ விமானத்தளம். இந்த இராணுவ தளத்தின் முதன்மை வேலையானது பரிசோதனை ரீதியிலான விமானங்களுக்கும் ஆயுத அமைப்புகளின் மேம்பாட்டிற்கும் சோதனைக்கும் உதவி புரிவதுதான்.
அமெரிக்க விமானப் படையின் பரந்த நெவேடா சோதனை மற்றும் பயிற்சி பரப்பெல்லைக்குள்ளேயே இத்தளம் இருக்கிறது. பரப்பெல்லையின் தளங்களை நெல்லிஸ் விமானத் தளத்தின் 99வது விமானத் தளப் பிரிவு நிர்வகித்து வருகிறது. எனினும் குரூம் தளமானது, அதன் அருகிலுள்ள 186 மைல் (300 km) மொஜாவெ பாலைவனத்தின்(Mojave desert) எட்வர்ட்ஸ் விமானத் தளப் பிரிவின் விமானப் படையின் பறக்கும் சோதனை மையத்தின் சேர்ப்பாகவே நிர்வகிக்கப்படுவதாகத் தெரிகிறது. அது விமானப் படை பறக்கும் சோதனை மையம் என்றே சொல்கிறார்கள்.
இவ்விடத்திலேயே அமெரிக்க எரிசக்தி துறை தனது 928 சோதனைகளில் 739 சோதனைகளை அங்கேயே நிகழ்த்தியது. யூக்கா மலை அணு கழிவு சேமிப்புக் கிடங்கு ஏறக்குறைய 40 miles (64 km) குரூம் ஏரியின் தென்மேற்கேயுள்ளது.
குரூம் லேக் மரபு ரீதியிலான விமானப் படைத்தளம் அல்ல, முன்னனி படை விமானங்கள் பொதுவாக அங்கு நிறுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக புதிய விமானங்களைப் பயிற்றுவிக்க, சோதிக்க, மேம்படுத்தக் கூடிய காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க விமானப் படையாலோ அல்லது CIA போன்ற வேறு முகமையாலோ அங்கீகரிக்கப்பட்ட பின்பு அவை பொதுவாக சாதாரணமான விமானப் படைத்தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
குரூம் லேக் இரண்டாம் உலகப் போரில் குண்டுவீசவும் சுடும் பயிற்சிக்கும் பயன்படுத்தப்பட்டது, ஆனால் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை கைவிடப்பட்டுக் கிடந்தது.லாக்ஹீட் நிறுவனம், அவசரத் தேவைக்கான தளத்தை அவ்விடத்தில் ஏற்படுத்தியது, அப்போது அது சைட் இரண்டு அல்லது "த ராஞ்ச்" என அழைக்கப்பட்டது. அதில் சிறிய அளவிலான குடில்களும், பணிமனைகளும், இழுத்துச் செல்லக்கூடிய வீடுகளில் வசித்துவந்த சிறு குழுக்களும் இருந்தன. மூன்றே மாதங்களில் 5000 அடி நீள ஓடுதளம் அமைக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு ஜூலையில் பயன்பாட்டிற்கும் வந்தது தான் ஆச்சர்யம்.
இந்த தளத்தில் மொத்தம் ஏழு ஓடுபாதைகள் இருக்கின்றன.நிலத்துக் கீழே மிகப்பெரிய இரயில்சாலை அமைப்பு இருப்பதை அவர்கள் மறுத்தாலும் ஏரியா 51 இன் பல நடவடிக்கைகள் (இன்னும் நடந்துகொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது) நிலத்திற்குக் கீழேயே நடைபெறுவது வழக்கம்.
ஏரியா 51 சதிக் கோட்பாடுகளைப் பற்றிய நிகழ்வுகளைப் பற்றித் தெரியும் என்று பலர் குறிப்பிடுகிறார்கள். அமெரிக்க அரசாங்கம் வைத்திருந்த வேற்றுலக விண்கலத்திற்காக பணிபுரிய அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஏரியா 51 இன் S-4 இல் (பாப்பூஸ் ஏரியில் இருக்கும் ஒரு தளம்) அவர் பணிபுரிந்திருப்பதாக 1989 ஆம் ஆண்டில் பாப் லாசர் குறிப்பிட்டுள்ளார். அதே போல, 1996 ஆம் ஆண்டு புரூஸ் பர்கஸால் இயக்கப்பட்ட டிரீம்லாண்ட் என்ற ஆவணப்படத்தில், 71 வயதான இயந்திரப் பொறியாளர் ஒருவர் 1950-களில் ஏரியா 51 இல் பணியாளராக பணியாற்றினார் என்று குறிப்பிடும்படியான ஒரு நேர்காணல் இடம்பெற்றிருந்தது. விழுந்து நொறுங்கிய புவிக்கப்பாலான கலத்திலிருந்த ஒரு தட்டை அடிப்படையாகக் கொண்டு "செயற்கையாக பறக்கும் தட்டு உருவாக்குதலில்" அவர் வேலை செய்தார் மற்றும் அமெரிக்க வானூர்தி ஓட்டுநர்களைப் பயிற்றுவிப்பதற்காக அது பயன்படுத்தப்பட்டது என்பதும் அவர் குறிப்பிட்டவைகளில் அடங்கியது.
ஏரியா 51 இல் வேற்றுலக நோய்க்கிருமிகளை குளோனிங் செய்வதில் பணிபுரிந்ததாகவும் "J-ராட்" என்று வேற்றுலக ஜந்துவிற்கு பெயரிடப்பட்டது என்றும் 2004 ஆம் ஆண்டு டான் புருஸ்ச் (டான் கிரெய்னின் மறுபெயர்) குறிப்பிட்டுள்ளார். புருஸ்சின் கல்வியியல் சான்றாவணங்கள் மிகவும் விவாதத்திற்கு உட்பட்டதாயிற்று. ஏனெனில் அவர் 1989 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸில் பேரல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார், அதே நேரத்தில் அவர் Ph.D பட்டத்தையும் வாங்கினார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ஏரியா 51 பகுதியை புவிக்கப்பாலானவைகளுக்கான ஒரு புகலிடமாகத் தான் பிரபலமான கலாச்சாரங்கள் பெரும்பாலும் சித்தரிக்கின்றன. ஏரியா 51ஐ குறித்த ஏராளமான சதிக் கோட்பாடுகளின் காரணமாக பிரபலமான கலாச்சாரத்தில் குறிப்பாக அறிவியல் புதினம் போன்றவற்றில் அது அதிமுக்கியத்துவம் பெற்றது. பலவகையான படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அந்த இடத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் கற்பனை நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. பின்வருபவை அது போன்ற ஊடகத்தின் பட்டியலாகும்:
* 1947 ஆம் ஆண்டின் ரோஸ்வெல் UFO சம்பவத்திலிருந்து விழுந்து நொறுங்கிய தேடுதல் பணியில் இருக்கும் வாகனத்தை ஆய்வு செய்வதை 1996 ஆண்டு வெளிவந்த இண்டிபெண்டன்ஸ் டே என்ற ஆக்ஷன் திரைப்படம் காண்பிக்கிறது. திரைப்படத்தின் கதாநாயகர்கள் தளத்தின் விமானத்தளங்களில் இருந்துகொண்டு அவர்களுடைய இறுதித் தாக்குதலை நடத்தும்போது ராண்டி குவேய்டின் கதாப்பாத்திரமான ரசல் கேசி ஒரு சமயத்தில் நெவிடாவின் மாநில வரைபடத்தில் தளம் காண்பிக்கப்படவில்லை என்று கூறுவது, உண்மையை மறைமுகமாக வெளிக்காட்டும்.
* 1947 ஆம் ஆண்டு ரோஸ்வெல் சம்பவத்திலிருந்து மீட்கப்பட்ட வேற்றுலகத் தொழில்நுட்பத்தைக் கொண்டு காலப் பயணக் கருவியைப் பயன்படுத்தி, ஒரு மறைவான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் (NSA) நடவடிக்கை மூலம் அந்தத் தளம் நடத்தப்படுகிறது என்பது போல காண்பித்த, செவன் டேஸ் என்ற தொலைக்காட்சித் தொடர் பெரும்பாலும் ஏரியா 51 வளாகத்திலேயே படம்பிடிக்கப்பட்டிருந்தது.
* டாம் ரைடர் 3 என்ற படத்தில் வரும் லாரா கிராஃப்ட் எனும் பாத்திரம் ஏரியா 51 பற்றி வெளிப்படுத்தும். அந்தப் படத்தில் "தனிமம் 115 என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த கல்லை அவள் கண்டு பிடிக்கவேண்டும்."
* வீடியோ கேமான பெர்ஃபெக்ட் டார்கில் ஜோனா டார்க் ஏரியா 51 வழியாகச் செல்வார். அதில் இரகசிய ஏஜெண்டுகளைச் சந்தித்து, இறந்துவிட்டது என்று கருதப்படுகிற வேற்றுலக உயிரான "எல்விஸ்" என்பதின் பிரேதப்பரிசோதனைக் கூடத்தைக் கண்டுபிடித்து அதிலிருந்து வெற்றிகரமாக வெளிவருவதே அவளுடைய இலக்கு.
* இந்தியானா ஜோன்ஸ் அண்ட் த கிங்டம் ஆஃப் த கிரிஸ்டல் ஸ்கல் என்ற படத்தின் ஆரம்பத்தில், "ஹாங்கர் 51" என்பது அரசாங்க கிடங்காக காட்டப்படுகிறது, அதே நேரம் ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க் படத்தின் கடைசிப் பகுதியில் புனிதப் பேழை பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. அங்கு ரோஸ்வெல் வேற்றுலகவாசியை மீட்பதற்காக KGB ஏஜெண்டுகள் போகிறார்கள். கடைசியாக, படிகநிலை எலும்புக்கூட்டுடன் பலபரிமாண உருவங்களை வெளிக்காட்டுகிறார்கள். ரோஸ்வெல் மற்றும் ஏரியா 51க்கு இடையே இருக்கும் தொடர்புகளைக் குறித்த பிரபலமான நம்பிக்கைகளுக்கு ஒரு ஆதாரமாக 51 என்ற எண்ணை எழுத்தாளரான டேவிட் கூப் ஒப்புக்கொள்கிறார்.
* ஸ்டார்கேட் SG-1 என்ற தொலைக்காட்சித் தொடர்களில், பிற கிரகங்களிலிருந்து பூமிக்குக் கொண்டுவரப்பட்ட புவிக்கப்பாலான தொழில்நுட்பத்தைப் பத்திரப்படுத்தி வைக்கும் மற்றும் ஆராய்ச்சி செய்யும் தளமாக ஏரியா 51 பயன்படுத்தப்பட்டுள்ளது.
* NBC இல் ஒளிபரப்பான நைட் ரைடர்ஸ் என்ற தொடரின் மறுவுருவாக்கம் செய்யப்பட்ட தொடரின் நைட் டூ கிங்ஸ் பான் என்ற பகுதியில் மைக்கேல் நைட் KITTஐ மீட்பதற்காக ஏரியா 51 இல் இருக்கும் சேகரிப்புத் தளத்தின் வழியாகச் செல்வார். அதற்குப் பிறகு அது NSA ஏஜெண்டுகளால் எடுத்துச் செல்லப்பட்டுவிடும்.
* திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு உலகத்தில் உள்ள எல்லா அம்சங்களையும் சூழ்ச்சியுடன் கட்டுப்படுத்திக் கையாளும் த பாட்ரியட்ஸ் என்று அழைக்கப்படும் குழுவின் தலைமை இடங்களில் ஒன்றாக ஏரியா 51 மாறியிருப்பதைப் போல் மெட்டல் கியர் என்ற தொடர்களில் காண்பிக்கப்பட்டிருக்கும்.
* சூப்பர்மேன்: ரெட் சன் என்ற நகைச்சுவைப் படத்தில், J. எட்கர் ஹூவரின் ஆணையின் படி அபின் சரின் உடல் ஏரியா 51 இல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். சோவியத் யூனியனைத் தோற்கடிப்பதற்கு ஆயுதங்களை உருவாக்குவதற்காக, தளத்திற்கு லெக்ஸ் லூதர் வருவதற்கு ஜான் F. கென்னடி அனுமதி கொடுப்பார்.
* ஆவணப்படத் தொடரான UFO ஹண்டர்ஸ், சீசன் டூ என்ற தொலைக்காட்சித் தொடர்களின் நிறைவுப் பகுதிக்காக 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏரியா 51 படம்பிடிக்கப்பட்டது. உயர் தெளிவுத்திறன் கொண்ட அந்நிகழ்ச்சி ஹிஸ்டரி சேனலில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று ஒளிபரப்பப்பட்டது.
* ஏரியா 51 என்று அழைக்கப்பட்ட வீடியோ கேம், மிட்வே கேம்ஸினால் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
மேலும் இந்த லிங்கில் சென்று வேற்றுகிரகவாசிகளின் படங்கள் மற்றும் இந்த பூமியில் அவர்கள் வந்து போன தடயத்தை விட்டு சென்றுள்ளதையும் காணலாம்.

Thursday, January 14, 2016

உலக சினிமா (Season-2)-4


Print Friendly and PDF


KILL BILL (கில் பில்):-

கத்தியின்றி, துப்பாக்கியின்றி ரத்தம் வழிய வேண்டுமா? ஹாலிவுட் சூப்பர்
இயக்குனர் என்று வருணிக்கப்படும் குவெண்டின் டேரன்டினோவின் கில் பில் பார்த்தால் போதும். படம் முடியும்போது நிச்சயம் உங்கள் சட்டை முழுவதும் ரத்தம் படிந்திருக்கும். ஏனென்றால் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை, திரை முழுவதும் ரத்தம் தெறித்துக்கொண்டே இருக்கும்.
டைட்டானிக் படம் பார்த்தால் உடனே யாரையாவது காதலிக்கத் தோன்றும். சைனீஸ் டைப் சண்டை படம் பார்த்தால் உடனே குங்பூ கற்றுக்கொண்டு யாரையாவது அடிக்கத் தோன்றும். இந்த கில் பில் பார்த்தால்… இன்னும் நாம் உயிரோடு இருக்கிறோமா என்று தலையையும் கையையும் தொட்டு உறுதிப்படுத்தவும், கையாலாகாத குற்றவுணர்ச்சியும் தோன்றும்.
ஆரம்பமே அமர்க்களம், அதிரடி என்றெல்லாம் பார்த்திருப்போம். இது ஆரம்பமே உவ்வேக். ரத்தக் கோரமாக சிதைக்கப்பட்ட உமா தர்மன் முகத்தை டிஷ்யூ பேப்பரை வைத்து துடைக்கிறான் பில். நீ என்னை சாடிஸ்ட் என்று தவறாக எண்ணிவிடாதே என்று சமாதானம் சொன்னபடி துப்பாக்கியை எடுக்கிறான். என் வயிற்றில் உன் குழந்தை வளர்கிறது என்று உமா தர்மன் சொல்வதை கண்டுகொள்ளாமல் சுட்டுவிடுகிறான் பில். இது ஒரு பாகமாக சொல்லப்படுகிறது.
திடீரென மஞ்சக்கலர் காரில், மஞ்சக்கலர் டிரஸ் போட்டு ஒரு பெண்ணின் வீட்டுக்கு வருகிறாள் உமா. இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததும் முடியை பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார்கள். அந்த நேரம் பள்ளி பஸ் வந்துவிடவே, அந்தப் பெண்ணின் குட்டிப்பெண் வீட்டுக்குள் நுழைகிறாள். சண்டையினால் அமளிதுமளியாகிக் கிடக்கும் வீட்டைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறாள். சின்னப் பெண்ணின் முன்பு சண்டை போடவேண்டாம் என்று அவள் அறைக்குப் போகும் வரையிலும் காத்திருக்கிறார்கள். அவள் போனதும் உமாவை அந்தப் பெண் கொல்வதற்கு முயல, கத்தியை வீசி அவளை கொன்றுவிடுகிறாள். அதனை குட்டிப்பெண் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இது ஒரு பாகம்.
திருமணம் நடக்க இருந்த நேரத்தில் திடுமென ஏழெட்டு பேரை கொன்று போட்டிருக்கிறது பில்லின் அதிரடி படை. அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று சுற்றிலும் கோடு போட்டு இன்வெஸ்டிகேஷன் செய்யும்போதுதான், மணமகளாக இருக்கும் கர்ப்பிணி பெண் உமா தர்மன் இன்னமும் சாகவில்லை என்று தெரியவருகிறது.
இப்போது உமா தர்மன் ஆஸ்பத்திரியில் நான்கு வருடங்களாக கோமா நிலையில் இருக்கிறாள். அவளை கொல்வதற்கு பில்லின் அடிமை ஒருத்தி வருகிறாள். துர்மனை கொலைசெய்ய முயற்சிக்கும் நேரம், பில் போன் செய்து தடுத்து நிறுத்துகிறான். இந்த நேரத்தில் அவளை கொன்றுவிட்டால் நிம்மதியாக செத்துவிடுவாள். அதற்கு நாம் அவளை அனுமதிக்கக்கூடாது. அவள் திரும்பி எழுந்துவரட்டும், ரசித்து ருசித்து கொலை செய்வோம் என்கிறான். இது ஒரு பாகம்.
நான்கு ஆண்டுகள் கழித்து கோமா நிலையில் இருந்து கண் விழித்து எழுகிறாள் உமா தர்மன். தலையில் குண்டு துளைத்த இடத்தில் இரும்பு பிளேட் வைத்திருப்பது தெரிகிறது. யாரோ வரும் சத்தம் கேட்க… விழிப்பு வராதவள் போல் அமைதியாக படுத்துக்கொள்கிறாள். ஒரு மனிதனை உள்ளே அனுப்பும் ஆஸ்பத்திரி வார்டுபாய், உன்னுடைய இஷ்டம் போல் அவளை அனுபவித்துக்கொள் என்று அனுப்பி வைக்கிறான். இத்தனை அழகியான ஒருத்தியை (உமா தர்மனை அழகி என்று சொன்னதற்காகவே இவனை கொலை செய்யலாம்) அனுபவிக்கப் போகிறேன் என்று உமாவின் முகத்திற்கு அருகே செல்ல, படக்கென்று எழுந்து அவன் உதட்டையும் நாக்கையும் கடித்துத்துப்பி, கழுத்தையும் கடித்து தன்னையும் அவனையும் ரத்தாபிஷேகம் செய்து கொலை செய்கிறாள். அடுத்து உள்ளே வந்து எட்டிப்பார்க்கும் வார்டுபாயை, கதவு இடுக்கில் அடித்து அடித்து நசுக்கியே கொலை செய்கிறாள். இது ஒரு பாகம்.
தன்னை கொலை செய்த பில் மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த நான்கு பேரையும் பழிவாங்க வேண்டும் என்று கிளம்புகிறாள் உமா. சைனாவுக்குச் சென்று ஒரு மாதம் தங்கியிருந்து அபாரமான ஒரு கத்தியை வாங்கிக்கொள்கிறாள். ஜப்பானுக்குச் சென்று அங்கே இருக்கும் ஓ-ரென் இஷ்லியை (லூசி லியு) கொல்வதற்கு ஒற்றை மனுஷியாக கிளம்புகிறாள்.
இந்தப் படத்தில் ஒரே ஒரு அழகு தேவதையாக வரும் ஷோபியின் (ஜூலி டிரஃபஸ்) கையை தோள்பட்டைக்குக் கீழே வெட்டி எறிந்து ஆட்டத்தை தொடங்கிவைக்கிறார். ஒற்றைக் கையில் இருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தம் கூரையைத் தொடுகிறது. அதன்பிறகு தங்கள் தலைவி ஓ-ரென்னை காப்பாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான அடிமைகள் வந்து, அத்தனை பேரும் வெட்டுப்பட்டு ரத்தம் ரத்தமாக சிந்துகிறார்கள். இந்த சண்டையில் ஏகப்பட்ட தலைகள் உருளுகின்றன, கைகள் வெட்டப்படுகின்றன, கண்கள் சிதறுகின்றன, ரத்தம் நீருற்று போல் பீய்ச்சி பீய்ச்சி அடிக்கிறது. அதாவது கொலை செய்வதை கலை போல் காட்டியிருக்கிறாராம். ஒரு வழியாக அத்தனை பேரையும் கொன்றுவிட்டு ஓ-ரென்னுடன் சண்டை போடுகிறாள்.
மற்றவர்களை கொன்றுவிட்டதைப் போல் அவளையும் கொன்றுவிட்டால் அத்தனை நன்றாக இருக்காதே… அதனால் அவள் தலையை மூளை வெளியே தெரியும் அளவுக்கு மட்டும் வெட்டி எறிகிறாள். நுங்கு எடுப்பதற்காக பனங்காயை சீவியது போல் மூளை வெளியே தெரிவதை அழகியல் காட்சியாக தந்து ரசிக்க வைக்கிறார். இது ஒரு பாகம்.
சுருக்கமாகவும் இந்தப் படத்தின் கதையை சொல்லலாம். பில்லின் கூட்டாளியாக பணிபுரிந்து அவன் காதலியாக மாறியவள் உமா தர்மன். திடீரென நல்லவளாக மாறி அதாவது பழைய வாழ்க்கையில் இருந்து வெளீயேறி வேறு ஒருவனுடன் திருமணம் முடிக்க இருக்கும் நேரத்தில், அத்தனை பேரையும் சுட்டுப் போடுகிறான் பில். அப்போது கோமாவில் விழுந்துவிட்ட உமா தர்மன், விழிப்பு வந்ததும் அத்தனை பேரையும் பழிவாங்க முடிவெடுக்கிறாள். இதனை எப்படி முடிக்கிறாள் என்பதைத்தான் தனக்கேயுரிய கொடூர புத்தியுடனுடன் குண்டக்கமண்டக்க நான்லீனியர் திரைக்கதை உத்தியைக் காட்டியும் இயக்கியிருக்கிறார் குவெண்டின்.
இந்தப் படத்தை யாரும் பார்க்காமல் இருப்பது நலம். அப்படி பார்த்தே தீரவேண்டும் என்றால் குழந்தைகளுக்குத் தெரியாமல் பார்க்கவும். ஏனென்றால் இந்தப் படத்தில் தெறிக்கும் ரத்தத்தைப் பார்த்து, குழந்தைகளுக்கும் ரத்தம் பார்க்கும் ஆசை வரலாம். தூங்கும்போது உங்கள் கழுத்தை அறுத்து ரசிக்கலாம்.
ஒரே பாகமாக எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்ட கில் பில், நான்கு மணி நேரத்தைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்டது. அதனால் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டது. முதல் பாகம் 2003-ம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2004-ம் ஆண்டும் வெளியானது. மக்கள் மனதில் வன்முறையும் ரத்தத்தைப் பார்க்கும் ஆவலும் பெருகிவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, இரண்டு படமும் ஹிட்.