My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Friday, August 14, 2015

ஹிட்லருக்கும் நெப்போலியனுக்கும் இடையே உள்ள அமானுஷ்ய ஒற்றுமை. ..


Print Friendly and PDF


1. இருவருமே தலைமைப்
பொறுப்பிற்கு வரும்முன்
சாதாரண சிப்பாய்களாக அவரவர்
நாட்டு இராணுவத்தில்
பணியாற்றினர்.
2. நெப்போலியன் பிறந்தது 1760- ல்,
ஹிட்லர் பிறந்தது 1889- ல். சரியாக
129 ஆண்டுகள் வித்தியாசம்.
3. நெப்போலியன் ஆட்சிப்பொறுப்பை
ஏற்றது 1804- ல், ஹிட்லர்
ஆட்சிப்பொறுப்பை ஏற்றது 1933- ல்.
சரியாக 129 ஆண்டுகள் வித்தியாசம்.
4. நெப்போலியன் வியன்னாவைக்
கைப்பற்றியது 1809- ல், ஹிட்லர் வியன்னாவைக் கைப்பற்றியது 1938-
ல். சரியாக 129 ஆண்டுகள்
வித்தியாசம்.
5. நெப்போலியன் ரஷ்யா மீது
படையெடுத்தது 1812- ல், ஹிட்லர் ரஷ்யா மீது படையெடுத்தது 1941- ல். சரியாக 129 ஆண்டுகள் வித்தியாசம். (இதே போல் இருவருக்குமான ஆண்டுகள்- வித்தியாச ஒற்றுமைகள் ஏராளம்.)
6. இருவருமே காதல் திருமணம்
செய்தவர்கள்.
7. இருவருமே புகழின் உச்சத்தில்
இருந்தபோது தோற்கடிக்கப் பட்டனர்.
8. இருவரின் உயரங்களுமே ஆண்களின்
சராசரி உயரத்தை விட சற்றுக்
குறைவு.
9. இருவருமே மனோதிடம் மிக்கவர்கள்
என்றும், இவர்களைத்
தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுத
முடியாது எனவும் வரலாற்று
ஆய்வாளர்களால் இன்றளவும்
வர்ணிக்கப்படுபவர்கள்.
10. நெப்போலியனுக்கு புத்தகம்
படிப்பதும், ஹிட்லருக்கு ஓவியம்
வரைவதும்
பொழுதுபோக்குகளாக இருந்தன.
(இரண்டுமே உட்கார்ந்து பார்க்கும்
வேலை)
11. இருவரின் மரணமும் இயற்கை மரணம் அல்ல. நெப்போலியன்,
'ஆர்செனிக்' (Arsenic) விஷம் வைத்து
மெல்ல மெல்ல கொல்லப்பட்டார்.
ஹிட்லர் தன்னைத்தானே
சுட்டுக்கொண்டு தற்கொலை
செய்துகொண்டார்.
12. இத்தாலி, ஹிட்லரின் ஜெர்மனிக்கு
நேச நாடாக விளங்கியது. அந்த
இத்தாலி நாட்டுக் கொடியை
வடிவமைத்தவர், நெப்போலியன்.
13. இருவருமே நாடு பிடிப்பதில்
முனைப்புடன் இருந்தனர்.
14. இருவரும் இந்தியாவில் உருவான
புத்தகத்தை எப்போதும் அவர்களுடன்
எடுத்துச் சென்றனர். (நெப்போலியன்
- "மகாபாரதம்" ; ஹிட்லர் - "பகவத்
கீதை" . இரு புத்தகங்களும் ஒரே
விஷயத்தைச் சார்ந்தவை. [மதம்
சார்ந்தும், கருத்து சார்ந்தும்]
ஆனால் இருவரின் நோக்கங்கள்
வேறுபட்டிருக்கலாம்)